
எவனொருவன் தன்னையும் தன் ஆன்மாவையும் பாபாவின் பாதக் கமலங்களில் அர்ப்பணித்து அவரிடம் சரணடைந்து விடுகிறானோ, அவனுக்கு வேறெந்த தேவையும் எழாது. பிறகு, அவனுக்குப் படித்தறிய வேண்டும் என்ற நிலை வராது. இதிகாசங்கள், வேதங்களெல்லாம் படித்துத் தான் பல்கிப் பெருக வேண்டும் என்ற தேவை எழாது. மாயப் பொருட்களின் மீதான ஆசையோ தேவையோ கூட உதயமாகாது. அவனது அனைத்துத் தேவைகளையும் பாபாவே பார்த்துக்கொள்வார். அவனைப் பாதுகாப்பார். ஆன்மீகப் பாதையின் ஆன்ம இலக்கினைத் தொட வழிவகை செய்து வைப்பார். ஆனால் அது பாபாவின் மீது முழு அர்ப்பணிப்பாய் இருத்தல் வேண்டும். பாபா மீது துளி சந்தேகமோ அல்லது ஒளிவு மறைவுகளோ பக்தனிடம் இருந்து விட்டால், சொல்லப்பட்ட பலனில் எதுவும் கிடைக்காது.
என்பால் ஐயமற்ற அன்பு செலுத்தி உருகும் பக்தர்களுடைய வாழ்வின் மீது என்னுடைய மேற்பார்வையும், நான் தரும் பாதுகாப்பும் எப்போதும் இருக்கும் - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil