1911ம் வருடம் டிசம்பர் மாதம் ஒருநாள் மாலை ஐந்து மணி. அன்று தத்தாத்ரேய ஜெயந்தி. மசூதியில் பாபா பக்தர்கள் புடைசூழ அமர்ந்திருந்தார். திடீரென்று பாபா, "எனக்கு பிரசவ வலி கண்டுவிட்டது. எல்லோரும் அப்பால் போங்கள். நான் பிரசவித்ததும் வரலாம்" என்று கூச்சலிட்டார்.
அந்த நேரம் அவர் அனுசூயா தேவியாகவே மாறியிருக்க வேண்டும் என்கிறார் பலவந்த் கோஜோக்கர்.
எல்லோரும் போன பிறகு சிறிது நேரத்தில் "எல்லோரும் வந்து குழந்தையை பாருங்கள்" என்ற பாபாவின் குரல் கேட்டது.
பலவந்த் கோஜோக்கர் உட்பட அனைவரும் ஓடி வந்து பாபாவின் இருக்கையை பார்த்தனர். அங்கே மூன்று தலையுள்ள குழந்தையை பார்த்து அனைவரும் பிரம்மித்துப்போய் நின்றனர். இந்த காட்சி ஒருநிமிடம் நீடித்தது. புராணங்களின்படி தத்தாத்ரேயர் அவதரித்த நேரம் அது.

ஸ்ரீ தத்தாத்ரேயர்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil