Monday, January 7, 2019

சாய்பாபா நம்மைக் காப்பார்


       
பாலாஜி பட்டேல், சாய்பாபாவின் மிகச்சிறந்த பக்தர். சாய்பாபா செல்லும் ஷீரடி சாலைப்பகுதிகளை தினந்தோறும் பெருக்கி சுத்தமாக்கி வைத்திருப்பார் இவர். இவரது முதலாமாண்டு நினைவு தினத்தின் போது ஒரு விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்காக வந்திருந்த விருந்தாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாயிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு. திருமதி பாலாஜி கலங்கினார். அனைவருக்கும் விருந்தளிக்கும் அளவுக்கு கையிலிருப்பிலிருக்கும் உணவு பத்தாது என அவர் விசனப்பட்டார். இதற்கு அவருடைய மாமியார் தந்த ஆறுதல்: "கவலைப்படாதே.  இது நம்முடைய உணவல்ல. அனைத்தும் சாய்பாபாவுடையது. ஒவ்வொரு பாத்திரத்தையும், விபூதி நிரம்பிய சிறு துணி மூட்டையால் மூடு. அந்த மூடியைத் திறக்காமல் பாத்திரத்திலிருப்பவற்றை எடுத்து வந்திருப்போருக்குப் பரிமாறு. இந்த இக்கட்டிலிருந்து சாய்பாபா நம்மைக் காப்பார்." அறிவுறித்தியபடியே அப்பெண்மணி செய்தார். அவரை சந்தோஷத்தின் உச்சத்துக்கு எடுத்துச் செல்லும்படியாய், இருந்த உணவு அனைவருக்கும் போதுமான அளவுக்கு வந்தது. மிஞ்சியும் போனது. இதுபற்றிய ஹேமத்-பண்ட்டின் குறிப்பு:  " யாரொருவன் சாய்பாபாவைத் தீவிரமாக உணர்கின்றானோ, அதே அளவு ஆழத்தோடு, அவனையும் அவர் உணர்கிறார்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா எப்போதும் உன் பின்னே இருந்து பாதுகாக்கிறார்.

                       சத்குரு தம் பக்தர்களிடம் கொள்ளும் அன்பு, ஒரு தாய் தன்  குழந்தையின் மேல் காட்டும் அன்பைப் போன்றது என்றாலும் அத...