
"பாபா ! நிபாட்டில் நாளை விசாரணை. வெற்றி கிடைக்க ஆசீர்வதிக்க வேண்டும். புறப்படுவதற்கு உத்தரவு வேண்டுகிறேன் !" என்றார் பாவ் சாஹேப் துமால்.
"வெற்றி உனக்கு நிச்சயம் வேண்டுமென்றால் பத்து நாட்கள் ஷீர்டியில் இருந்து பஜனையில் கலந்து கொள் !" என்றார் பாபா.
"பாபா ! நாளை என் கட்சிக்காரரை விசாரிக்கப் போகிறார்கள். நான் கோர்ட்டில் நாளை கட்டாயம் இருந்தாக வேண்டுமே !" என்று துமால் கலக்கத்துடன் பாபாவிடம் கேட்க, பாபாவோ கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். பாபாவிடமிருந்து உத்தரவு வராததால், வேறு வழியின்றி பத்து நாட்களும் துமால் ஷீரடியிலேயே தங்கி பாபா தரிசனத்திலும், பஜனையிலும் , நிவேதனம் தயாரிப்பதுமாக இருந்துவிட்டார். நிபாட் பயணத்தை கைவிட்டார்.
பத்தாவது நாள், "நீ நிபாட்டுக்கு புறப்படு !" என்றார் பாபா. பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டு உடனடியாக நிபாட்டை சென்றடைந்தார் துமால்.
கோர்ட்டுக்கு சென்றதும், "பத்து நாட்களுக்கு முன்பாக ஜட்ஜ்க்கு அடி வயிற்றில் திடீரென்று கடுமையான வலி ஏற்பட்டதாகவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து நேற்றுதான் வீடு திரும்பியதாகவும், அதனால் விசாரணை இன்றுதான் தொடங்கவிருப்பதாகவும்" சக வக்கீல்கள் கூறவும், 'பாபாவின் சர்வசக்தி வாய்ந்த வார்த்தைகளை" நினைத்து பிரம்மித்து நின்றார்.
அதேநாளில் அந்த வழக்கும் துமாலுக்கு சாதகமாக தீர்ப்பு வர, அவரது கட்சிக்காரர் பெருந்தொகையை துமாலுக்கு பரிசளித்தார். அதன்பின்பு, வக்கீல் தொழிலில் துமாலின் புகழ் உச்சத்திற்கு சென்றது.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil