Friday, February 1, 2019

சாயி சத்சரிதம் படித்தால் உன் கோரிக்கை நிறைவேறும்

                                 à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

சாயி சத்சரிதம் புத்தகம், மனித சமுதாயத்திற்கு பாபா அளித்த அருட்கொடை... கேட்டால், கேட்டது கிடைக்கும்..பிரார்த்தனை செய்தால், வேண்டியது வசப்படும். சத்சரிதத்தை நமது நெஞ்சுக்கு மிக அருகில் வைத்து, ஓர் வேண்டுகோளை மனதில் நினைத்து, புத்தகத்தை நம்பிக்கையுடன் படித்தால்.. உலகத்தாருக்கு எது அசாத்தியமானதோ, அது நமக்கு சாத்தியமாகிவிடும். வாழ்வை மாற்றியமைக்கும் தாக்கம், நிச்சயம் அப்புத்தகத்திற்கு உண்டு. 
பாபாவை பற்றி படிப்பது, அவரது தெய்வீக சந்நிதானத்தில் இருப்பதற்கு சமமானது. அவருடனான தியான ஐக்கியத்தில் மணிக்கணக்காகச் செலவிடுவதைப் போன்றது. கஷ்டமான இந்த வாழ்விலும், சிக்கலான இவ்வுலகிலும், பின்பற்றுவதற்கேற்ற மிக எளிதான பாதை இதுவே. நம்பிக்கையுடனும் அன்புடனும் பாபாவைக் குறித்து படியுங்கள்.... நீங்கள் வேண்டுவது உங்களுடையதாகும்.
அன்பும் நம்பிக்கையும், பாபாவின்பால் பிரார்த்தனைகளும் எங்கு உள்ளனவோ, அந்த இடம் பாபாவின் துவாரகாமாயியாக ஆகிவிடுகிறது.  சாயியின் மீது நம்பிக்கை கொண்ட பக்தனின் வீடு சாஃஷாத் துவாரகாமாயியே  ஆகும். 
சத்சரிதம், ஒரு பலம்... ஓர் ஆற்றல். அன்புடன் படிக்கப்பட்டால், அது ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றும். அது விலையற்றது. மதிப்பிட முடியாதது. உண்மையான பக்தியுடன் சேர்ந்த நேர்மையான வாசிப்பு, மரணத்தின் பிடியிலிருந்தும் நம்மை விடுவித்துவிடும்.
எனவே, எது வேண்டுமோ அதைக் கோரிக்கையாக பாபாவிடம் வைத்து, தினமும் சத்சரிதத்தை நம்பிக்கையோடு படியுங்கள்.
சத்சரிதத்தை நாற்பது நாள்களுக்குள் படித்துமுடித்து, தினமும் பாபாவிற்கு முன் ஓர் விளக்கை ஏற்றிவைக்கும் 'சாலீஸா' எனும் விரதம், வாசிப்பவருக்கு வாழ்வில் பேரானந்தத்தையும், வாழ்வுக்குப் பின் முக்தியையும் அளிக்கும்.

Image may contain: 1 person


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...