
பஸ்ஸீன் என்ற இடத்திலிருந்து வகர்க்கர் என்ற பக்தர் ஒரு ஆளிடம் ஒரு சீப்பு வாழைப் பழத்தைக் கொடுத்து "இதை பாபாவிடம் கொடு பாபா இதை சாப்பிட்ட பின்னரே நான் உண்பேன்" என்று சொல்லி அனுப்பினார். ஷீரடி வந்த அம்மனிதன் நேராக பாபாவிடம் வராமல் அங்கு வழியிலேயே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பாபா அவனை அழைத்து வரச் சொல்லி 'கொண்டுவந்த வாழைப்பழத்தைக் கொடு' என்று கேட்டு வாங்கி அதில் ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டார். அதன்பின் அந்த ஆளை நோக்கி, "அவன்(வகர்க்கர்) சாப்பிடாமல் காத்துக் கொண்டிருக்கிறான். பாபா பழத்தை சாப்பிட்டு விட்டார் என்று உடனே தந்தி கொடு. அப்போதுதான் அவன் சாப்பிடுவான்" என்றார். பக்தர்களிடம் பாபாவுக்கு உள்ள அன்புக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு அன்றோ !
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil