
கல்கத்தாவில் இருந்த எம்.ராமச்சந்திரராவ் என்பவர் தீவிரமான சாயிபக்தர். அவருக்கு தபால்-தந்தி துறையிலிருந்து வேலைக்கான இண்டர்வியூ கடிதம் வந்திருந்தது. இண்டர்வியூக்கு முதல்நாள் ஸ்ரீபரத்வாஜரை சந்தித்து அந்த கடிதத்தை அவரிடம் கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெற்றார்.
"ஸ்வாமி ! நான் எப்போதும் தாமதமாக எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவன். அதிகாலை ஐந்து மணிக்கே பஸ்ஸில் புறப்பட்டால்தான் , இண்டர்வியூக்கு சரியான நேரத்தில் போகமுடியும். என்னை நாலரை மணிக்கு எழுப்பிவிட முடியுமா? என்று பணிவுடன் கோரினார்.
அதிகாலை நாலரை மணிக்கு அலாரம் அடிக்குமாறு கடிகாரத்தை திருப்பி வைத்தார் ஸ்வாமிகள். நிம்மதியாக உறங்கினார் ராமச்சந்திரன். அதிகாலை ஐந்து மணிக்கு, அவர் வீட்டின் கிழக்கு ஜன்னலருகே பாபா தோன்றி, "போதும் உறக்கம்! விழித்துக் கொள்!" என்று சப்தமாக குரல் கொடுத்தார். அலறி அடித்துக் கொண்டு எழுந்த ராமச்சந்திரன் வேகவேகமாக கிளம்பி பேருந்து நிலையத்திற்கு ஓடினார். எப்போதும் சரியான நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ் அன்று அவருக்காக காத்திருந்தது. சரியான நேரத்தில் இண்டர்வியூவில் கலந்து கொண்டு வேலையையும் பெற்றுவிட்டார்.
மாலையில் வீடு திரும்பிய ராமச்சந்திரன் கடிகாரத்தை பார்த்தார். கடிகாரம் பழுதாகி இரண்டு மணிக்கே நின்றிருந்தது தெரிந்தது. அப்படியானால், "நம்மை குரல் கொடுத்து எழுப்பி விட்டதும் பாபாவே ! வேலை கொடுத்து வாழ்வில் ஒளிவிளக்கேற்றியதும் பாபாவே !" என்பதை உணர்ந்து, மெய்சிலிர்த்து பாபாவுக்கு நன்றி கூறினார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil