Wednesday, February 20, 2019

தலைமுறைகள் தாண்டியும் பலன் தரும் பாபா சேவை

Image may contain: one or more people
ஸ்ரீ ஸாயி சத்சரித்திரம் எனும் புனிதமான புத்தகம் மூலம்  கலியுக அவதாரம் ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர்  "ஹேமாட்பந்த்"  என பாபாவால் ஆசீர்வாதிக்கப்பட்டு நாமம் சூட்டப் பெற்ற கோவிந்தரகுநாத தாபோல்கர் என்பவர்.

இவர் ஒருநாள் இரவில், "பக்தியிலும் ஞானத்திலும் முன்னேறுவதற்குப் பலபேர் பலவிதமாக பிரயத்தனங்கள் செய்கிறார்கள்.  பாபாவையே நினைத்து தியானம் செய்தல்,  தொடர்ந்து விடாமல் சாயி நாமஜெபம் செய்தல் இப்படிப்பட்ட வழிகளில் நம்முடைய நேரத்தை செலவிட்டிருந்தால்கூட இந்நேரம் பாபா நமக்கு மிகப்பெரிய நலனை அருளியிருப்பார்.  இப்படி அவருடைய கதைகளைத் தொகுப்பதாலும்,  பாபாவின் லீலைகளை எழுதுவதாலும் என்ன நமக்கு கிடைத்துவிடப் போகிறது?  அல்லது  இந்த சேவையால் என்ன பெரிய பயனும் பலனையும் அவர் நமக்கு கொடுத்து அங்கீகரித்துவிடப்  போகிறார்?" என்று மனதால் நினைத்து மிகவும் சலித்துக் கொண்டே உறங்கிவிட்டார்.

மறுநாள் அதிகாலை சுமார் மூணே முக்கால் மணிக்கு ஹேமாட்பந்தின் கனவில் பாபா தோன்றி ஒரு காகிதத்தை நீட்டினார்.  அதில் , "பேனா ஒரு வலுவான மூலதனம்!" என்று எழுதப்பட்டிருந்தது.
  
அதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்த ஹேமாட்பாந்த்,  "தனது எழுத்துப் பணி தனக்கானதல்ல! தன்னுடையதல்ல!  அது பாபாவின் ஆசீர்வாதமே !" என்றும்  "ஒருவரால் செய்யப்படும் 'பக்தியும் தியானமும்'  செய்யப்படுபவருக்கு மட்டுமே உதவும் என்பதும்,  'சேவை' என்பது புண்ணிய விருட்சத்தின் விதை என்பதும்,  அது தலைமுறைகள் தாண்டியும் பலன் தரும்"   என்று பாபா தமக்கு உணர்த்திவிட்டதாக எண்ணி  பாபாவுக்கு  திருப்தியுடன் நன்றி கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...