Saturday, February 23, 2019

ஷீரடி சாய்பாபா உதியின் மகிமை

No photo description available.

கும்பகோணத்தில் வசித்த ஆர்.எஸ். மணி அய்யரின் பெண் மகள் பிறவி ஊமை.  அவரின் பக்கத்து வீட்டு உறவுக்காரர் ஒருவரான தீபக் என்பவர் பம்பாயிலிருந்து அங்கு வந்திருந்தார்.  அவர் மணி அய்யரோடு பழகியதில் அவரது மகளின் துயரம் தெரிய வந்தது.

தீபக், மணி அய்யரிடம் ,  "அய்யா ! என் தமையன் மகள் மீது கார் மோதிவிட்டது.  பதினைந்து நாட்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே இருந்து சிகிச்சை பெற்றதில் அவளுடைய காயங்கள் ஆறிவிட்டன.  ஆனால் அவளால் பேச முடியவில்லை.  பேச்சு வராமல் போனது.  மருத்துவம் தோற்றுப் போனது. வீட்டில் அனைவரும் அவள் நிலைமையைப் பற்றி வருத்தத்தில் இருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக சீரடியில் இருந்து நேரடியாக எங்கள் வீட்டிற்கு வந்த எனது தந்தையின் வயதான நண்பர் அவர் கையிலிருந்த உதியை அவளின் கழுத்திலும் நெற்றியிலும் பூசி விட்டு, அவளுடைய வாயைத் திறக்க சொல்லி நாக்கிலும் போட்டு விட்டார். அடுத்த ஒருசில நொடிகளிலேயே அவளுக்கு பேச்சு வந்துவிட்டது.  அனைவரும் ஆச்சரியத்துடன் புல்லரித்துப் போய் ஆத்மார்த்தமாக பாபாவுக்கு நன்றி 
கூறினோம் !" என்றார்.

மேலும் அவர், "எனவே நீங்களும் பாபா வீட்டில் வைத்து வியாழக்கிழமை தோறும் பஜனை செய்யுங்கள்.  முடிந்தபோது கட்டாயம் உங்கள் மகளை ஷீரடிக்கு அழைத்துச் செல்லுங்கள்.  அங்கு அவளை பாபாவின் சமாதிக்கு பூஜை செய்ய வையுங்கள்.  கல்லறையில் இருந்தாலும் கருணை புரிபவர் பாபா !" என்றார்.

தீபக்கின் வார்த்தைகளை பாபாவின் அசீரிரீயாக நிச்சயித்துக் கொண்ட மணி அய்யர், வியாழன் தோறும் தனது வீட்டில் பாபா பஜனை செய்யத் தொடங்கினார்.  

அடுத்த மாதமே மகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் ஷீரடிக்குச் சென்று பாபாவின் சமாதிக்கு பூஜை செய்ய வைத்தார்.

பூஜை முடிந்ததும் மணி அய்யரின் மகள் கேட்ட முதல் வார்த்தை , "சாயிபாபா வாழ்ந்த இடமான துவாரகாமாயிக்குப் போக வேண்டாமா?" என்பதுதான்.  ஊமையாய் இருந்த அவள் பேசியதைக் கேட்டதும் அனைவரும்  
பேச்சற்று நின்றனர்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற ம...