Sunday, February 24, 2019

உன் நம்பிக்கை வீண்போகாது !

Image may contain: 1 person, smiling, text

1956-ம் வருடத்தில் பம்பாய்க்கருகில் கிராமத்தில் வசித்து வந்த பதினாறு வயது பையன் ஒருவனுக்கு இளம்பிள்ளை வாத நோயால் கால்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டான்.  தன்னுடைய  மகனின் இந்த ஆதரவற்ற நிலைமையை வருவோர் போவோரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் அவரது தாயார். " அம்மா !  ஷீர்டியில் உள்ள சாயிபாபாவின் சமாதிக்கு தங்களின் மகனை அழைத்துச் செல்லுங்கள் ! நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா !  அவர் நிச்சயம் அருள்புரிவார் !"  என்று ஒருவர் கூற,  உடனே மகனை ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு ஆளை கூலிக்கு அமர்த்தி தன்னுடைய மகனை தூக்கிக் கொண்டு தினமும் பாபாவின் சமாதியை பிரதட்சணம் செய்ய வைத்தாள்.  சம்பந்தமில்லாத கூலியாளை வைத்து தன்னை பிரதட்சணம் செய்ய வைப்பது அந்த பையனுக்கு தொந்தரவாக நினைத்தான்.

"அம்மா ! என்னை வயிற்றிலே சுமந்த நீங்களே எனக்காக பிரதட்சணம் செய்யக் கூடாதா?" என ஏக்கத்துடன் தன் அம்மாவிடம் கேட்டான்.  அதற்கு அவன் தாயார், "எனக்கு வயதாகிவிட்டதே மகனே!  எப்படி உன்னை தூக்கமுடியும்?" என்று வருத்தத்துடன் கூறினாள்.

இருப்பினும் அந்த பையன்,  தான் தங்கியிருந்த அறையிலேயே பாபாவை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

ஒருநாள் பாபா அவன் முன் தோன்றி அவனைத் தூக்கிக் கொண்டு சமாதி மந்திருக்கு அழைத்துச் சென்றார்.  தன் சமாதிக்கருகில் இருந்த தூணில் அவனை சாய்ந்து நிற்க வைத்துவிட்டு மறைந்தார்.  அங்கே இருந்த அவன் தாயார் "தன் மகன் யாருடைய உதவியுமின்றி  மெதுவாக நடந்து வருவதையும், தூணில் சாய்ந்து நிற்பதையும்"  கண்டு அதிசயித்தாள்.

அவள் தன் மகனிடம் ஓடோடிச் சென்று,  "யார் அழைத்து வந்தார் உன்னை?  எப்படி வரமுடிந்தது?" எனக் கேட்டாள்.  அதற்கு அவன்,  "பாபாதான் அழைத்து வந்தாரம்மா !  அவரே என்னுடைய கால்களை தடவிவிட்டு,  'உன் நம்பிக்கை வீண்போகாது !' என்று சொல்லி மறைந்துவிட்டார் அம்மா!" என்றான்.

ஆனாலும் அவனது தாயாரால், "பாபாதான் அழைத்து வந்தார் என்பதை நம்பவில்லை !  தன் மகன் மெதுவாக நடப்பதைப் பார்த்து அவன் சொல்வதை நம்பாமலும்  இருக்க முடியவில்லை!". 

பாபா எப்போதும் தனது  பக்தர்களின் நம்பிக்கையை பொய்யாக்கமாட்டார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

வல்லமை வாய்ந்தவர் குரு

குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட  மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்...