Thursday, February 7, 2019

பாபாவிடம் எதையும் மறுக்காதே !

Image may contain: Shirdi Saibaba, sitting

திரு.பலராம்துராந்தர், பம்பாய் சாந்தாகுரூஸைச் சேர்ந்த பகாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர்.  அவர் பம்பாய் ஹைகோர்ட்டில் வக்கீலாகவும்,  சட்டக்கல்லூரியின் பேராசிரியராகவும் இருந்தவர்.  

பலராம்துராந்தர்  குடும்பத்தினருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம்.  ஆனாலும்,  இறைவன் ஒருவருக்கும் எல்லாவற்றையும் நிறைவாக கொடுப்பதில்லை.  தன்னை நினைத்து துதிப்பதற்காகவாவது ஏதாவது ஒரு குறையை வைத்துவிடுகிறார்.  அவ்வாறே,  கல்வியும் அறிவும் திறமையும் செல்வமும் தொழிலும் எல்லாம் இருந்தும் துராந்தர் ஆஸ்துமா என்ற நோயினால் அவதிப்பட்டார்.

பாபுல்ஜி , வாமன்ராவ் என்ற அவரது இரு சகோதரர்களும் ஷீர்டி சென்று வந்த பிறகு,  பலராமின் கடுமையான ஆஸ்துமா நோய் குணமாக அவர் கண்டிப்பாக ஷீர்டி சென்று பாபாவைத் தரிசனம் செய்து வரும்படி கூறினர்.

1912-ல் ஒருநாள் பலராம் தன் சகோதரர்களுடன் ஷீர்டி சென்றார்.  மசூதியில் அவர்கள் நுழைந்தவுடன் பாபா,   பலராமைப் பார்த்து  "வாரும் !  நாம்தான் அறுபது தலைமுறைகளாக உறவில் இருக்கிறோமே!" என்றார்.

பாபாவை நேருக்கு நேர் பார்த்ததும் பலராமுக்கும் அதே உணர்வு ஏற்பட்டது.  பிறகு அவர்கள் குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர்.  பலராம் பாபாவுக்கு கால்பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது பாபா தன்னுடைய சிலீமிலிருந்த புகைக் குழாயை பலராமிடம் கொடுத்து,  "ம்ம்.. இந்தாரும் ! இதைக்குடியும்!  வாய்ப்பை நழுவவிடாதீரும் !" என்றார்.  

பலராமுக்கோ புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது.  ஆனாலும், "பாபாவிடம் எதையும் மறுக்காதே !" என்று சகோதரர்கள் ஏற்கனவே தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது.  அடுத்த நிமிடமே பாபாவிடம் சிலீமை வாங்கி ஒரு இழுப்பு இழுத்துவிட்டு மீண்டும் அவரிடமே பணிவுடன் நீட்டினார்.  பாபா அதை  புன்முறுவலோடு "வாங்கிக் கொண்டார்."

ஆறு வருடங்களாக பலராமை அவஸ்தைப்படுத்திய அந்த ஆஸ்துமா நோய் அந்த நொடியுடன் தொலைந்துபோனது.  அதன்பிறகு தன் சொந்த ஊரில் இருந்தபோது 1918-ம் வருடம் ஒருநாள் மத்தியான நேரம் 2:30 மணியளவில்  பலராம்க்கு லேசாக இருமல் வந்தது.  அந்த நேரம்தான் ஷீர்டியில் பாபா மஹாசமாதி அடைந்த நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதைக் கேள்வியுற்ற பலராம் பாபாவுக்கு கண்ணீருடன் நன்றி கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்

           "வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது.  ஸாயீ பாதங்க...