Sunday, March 31, 2019

பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை ! அன்புதான் எனக்கு முக்கியம்

Shirdi Sai Baba Answers

ஸ்ரீ சுப்பையாரெட்டி என்ற பாபாவின் தீவிர பக்தர் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே சாயிபாபாவின் படத்தை கொடுப்பது வழக்கம்.  அவர்களில் ஒருவர் டாக்டர். ராஜகோபாலாச்சாரி.  அவர் பாபாவின் படத்தை  தன் கிராமத்து வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தார்.

டாக்டர் தனது பணியின் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒருமாதம் வெளியூர் வாசம் செய்யும்படி ஆகிவிட்டது.  அவர் பாபாவின் படத்தை மாட்டியிருந்த வீட்டின் சுவரோ மண்சுவர்.  ஒருவாரம் தொடர் மழை வேறு பெய்து சுவர் முழுவதும் ஈரமாயிருந்தது.

ஒருமாத பயணம் முடிந்து டாக்டர் , தனது வீட்டிற்கு திரும்பினார்.  அவர் திரும்பி வந்த நேரம் நள்ளிரவு.  பயணக்களைப்பில் அப்படியே சோர்வாக படுத்து உறங்கிவிட்டார்.  "கனவில் பாபா வந்தார்.  ஆனால் எதுவும் பேசவில்லை !  டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார்.  முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் !"  அடுத்த நிமிடம் மறைந்துவிட்டார்.

மறுநாள் காலையில் எழுந்த டாக்டர்,  "பாபாவின் படத்தைப் பார்த்தால்,  பாபாவின் முழங்கால் பகுதியில் கரையான்கள் அரித்திருந்தன." "அடடா ! பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் !  என்னை மன்னித்து விடுங்கள் பாபா !"  என்று கூறி உடனடியாக படத்தைக் கழற்றித் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு சர்வ அலங்காரத்துடன் பூஜையறையில் வைத்து வழிபட ஆரம்பித்தார்.

ஒருநாள் சாது வடிவில் வந்த பாபா டாக்டரின் மனைவியிடம் ,  "சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்றார்.  அதற்கு டாக்டரின் மனைவியோ , "இன்னும் சமையல் முடியவில்லை !  சற்று நேரம் பொறு !" என்று கூறினாள்.  "அம்மா !  பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை !  அன்புதான் எனக்கு முக்கியம் !"  என்றார் சாது.  உடனே அவரை அன்புடன் வரவேற்று இருந்த உணவுப் பண்டங்களை பரிமாறினாள்.   வெற்றிலை பாக்கு தட்சிணை எடுத்து வர வீட்டுக்குள் சென்று வருவதற்குள் அந்த சாது போய்விட்டிருந்தார்.  ஆனால்  "அவர் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரு கையளவு பாக்குகளும், ஒரு கையளவு வெள்ளி ரூபாய்களும் இருந்தன."  உடனே தெருவுக்கு ஓடோடி வந்து பார்த்தாள்.  அந்த சாது கண்ணுக்கெட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தார்.

வாசலில் நின்ற பக்கத்து வீட்டுக்காரர் , "என்னம்மா !  என்ன விசயம் ?  ஏன் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறாய்?"  என்று கேட்டார்.  டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி , "அவர் என் வீட்டில் சாப்பிட்டார்.  அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் !" என்றாள். 

பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து சென்று சாதுவை டாக்டர் வீட்டுக்கு திரும்பி அழைத்துவந்தார்.  திரும்பி வந்த சாது,  டாக்டரின் மனைவியிடம் , 'அம்மா ! பாக்கு சௌபாக்கியம் !  இன்னொன்று ஐஸ்வர்யம் !  சன்யாசிக்கு அவைகள் எதற்கு?   அன்னலட்சுமியான உனக்கு அது நான் தந்த பரிசு !" என்று சொல்லிச் சென்றார்.

அதுநாள் முதல் அவர்களின் வாழ்வில் மங்களம் பொங்கியது !  அது மட்டுமல்ல !  தபால்துறை சேமிப்புக் கணக்கில் அவள் பெயரில் "சாயி" என்பவர் பலநூறு ரூபாய்களைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.  சாதாரண "அன்பான உணவுக்காக பாபா தந்த அருட்கொடையை" நினைத்து டாக்டர் தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பாபாவிடம் விசுவாசமாக பக்தி செலுத்தினர்.  அதோடு நின்றுவிடாமல் நெல்லூரில் பாபா கோவில் கட்டுவதற்கும் அரும்பாடுபட்டனர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 30, 2019

பாபாவிடம் நம்பிக்கையுடன் சரணைடைந்தால் சகலமும் கைகூடும்


கொத்தப்பாலம் என்ற கிராமத்தில் வசித்தவர் ஸ்ரீகோபாலரெட்டி.  அவரது மனைவிக்குப் பிரசவமாகிப் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி 15-ம் நாள் வீட்டிற்கு அனுப்பினார்கள்.  ரயில் மூலம் ஊருக்கு புறப்பட்டனர். 

அவர்கள் செல்லும் ரயிலுக்கு பயங்கர கூட்டமாய் இருந்தது.   குழந்தையை வைத்துக் கொண்டு ஏறுவது சிரமம் என தோன்றியதால் , ரெட்டி தனது மனைவியை முதலில் ரயிலில் ஏறச் சொன்னார்.  ஜன்னலோர இருக்கையில் அவள் அமர்ந்ததும், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்தார்.  குழந்தையை வைத்திருந்த ரப்பர் ஷீட் நழுவி,  குழந்தை கீழே விழுந்துவிட்டது.  ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பும் கூச்சலும் ஏற்பட்டது. ரெட்டியையும் அவரது மனைவியையும் ஆளாளுக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் செய்தனர்.

என்ன புண்ணியமோ தெரியவில்லை,  கீழே விழுந்த குழந்தை அழவே இல்லை ! எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம் ! ஆனால் ரெட்டி மனைவி மட்டும் குழந்தையை நினைத்துக் கதறினாள்.  மறுபடியும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்.  குழந்தைக்கு எங்கே அடிபட்டதென்று கண்டுபிடிக்க முடியவில்லை ‌!  அதன்பிறகு குழந்தை உட்கார்ந்தே நகர்ந்தாள்.  அவளால் நடக்க முடியவில்லை !  நான்கு வயதாகியும் பேசவில்லை.  அவர்கள் குடும்பத்தார் அனைவரும் வேண்டாத கோவிலில்லை !  கும்பிடாத தெய்வமுமில்லை !  ஆனாலும் பலன் ஒன்றுமில்லை!

ஒருநாள் கோபால் ரெட்டியின் வீட்டிற்கு வந்த சாயிபக்தர் பரத்வாஜர்,  குழந்தை மல்லிகாவின் நிலையைப் பார்த்தார்.  "கோபால் !  பாபாவின் மகிமையை நீ அறிந்ததில்லையா?  பாபாவின் அருட்பார்வை ஆண்டியையும் அரசனாக்கும் !  அவரை நம்பிக்கையுடன் சரணைடைந்தால் சகலமும் கைகூடும்!"  என்று கூறிக்கொண்டே சில கற்கண்டுகளை பாபாவுக்கு நைவேத்யம் செய்து அதை அந்த மல்லிகா குழந்தையிடம் கொடுத்து மீதம் வைக்காமல் சாப்பிடச் சொன்னார்.  பாபாவின் உதியை எடுத்து அவள் கை கால்களில் தடவிக் கொடுத்தார்.

மறுநாள் மல்லிகா எழுந்து சுவற்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.  அடுத்த நாள் நடக்க ஆரம்பித்தாள்.  அதற்கடுத்த வாரம் வேகமாய் ஓடினாள்.  மாடிப்படிகளில் விறுவிறுவென்று ஏறினாள்.  அதைக் கண்ட அவளின் பெற்றோர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

"பாபாவின் மகிமைதான் என்னே!" என்று வியந்த அவர்கள், வியாழக்கிழமை தோறும் தங்கள் வீட்டில் பாபா பஜனையை அமர்க்களப்பட வைத்தார்கள்.  பஜனையில் எல்லோரும் வியக்கும் வண்ணம் "மல்லிகா  மழலைக் குரலில் பாடினாள் !"  ஆண்டுதோறும் தவறாமல் ஷீரடிக்கும் சென்று வந்தனர்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 29, 2019

தக்க சமயத்தில் உதவி செய்த பாபா

201671893718-sai Baba Painting Hd by sairattanrajesh

பாபாவின் பக்தரான திரு பிள்ளை தமது வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னால் அவரது குடும்பம் மட்டிப்பாடு என்ற கிராமத்தில் இருந்தது. அவர்களது மகன் பட்டமேற்படிப்பை தனிச்சிறப்புடன் முடித்திருந்தான். அவர்களது மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவன் தும்மலகுண்டாவில் தனது உறவினர்களிடம் தங்கி வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். சிறிது காலத்தில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் ஓர் ஊழியர் வேலைக்கான பேட்டிக்காக அழைக்கப்பட்டான். அதற்கு எத்தனையோ மனுதாரர்கள் பெரும்புள்ளிகளின் சிபாரிசுகளுடன் வருவார்களாதலால், அத்தகைய சிபாரிசு  ஏதுமற்ற தான் பேட்டிக்குச் செல்வதில்  பயனில்லை என்று நினைத்தான். இறுதியில் தன் தாயின் விருப்பப்படி பேட்டிக்குச் சென்றான். பிறகு அவன் மட்டிப்பாடுக்குச் சென்று விட்டான். 25.8.76 அன்று பாபா திரு பிள்ளையின் மனைவியான திருமதி சுசீலாம்மாவின் கனவில் தோன்றி வேலைக்கான நியமன உத்தரவு தும்மலகுண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை பெற்று அவனை வேலையில் சேரும்படி கூறு என்றார். அவள் விழித்துக் கொண்டு தனது கணவரிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அது அவளது ஆசையால் விளைந்த கற்பனை என்று கருதி அவர் அசட்டையாக இருந்து விட்டார். மறுநாளும் பாபா அவள் கனவில் தோன்றி அதையே மீண்டும் கூறினார். அவள் தன் மகனிடம் அதைப் பற்றி கூறிய போது அவனும் அதில் அக்கறை காட்டவில்லை. மீண்டும் மூன்றாம் நாள் பாபா அவளது கனவில் தோன்றி "உன் கணவர் சொல்வதை பொருட்படுத்தாதே. தும்மலகுண்டாவில் இருந்து வேலைக்கான நியமன உத்தரவை பெற்று உன் மகனை வேலையை ஏற்க அனுப்பிவை. தாமதம் செய்யாதே" என்றார். மறுநாள் காலை ஸ்ரீ பிள்ளை தமது உறவினருக்கு ஒரு லெட்டர் எழுதினார். அதற்கு பதிலாக, அவர்களது மகனை உடனே வேலையில் சேரச் சொல்லி, காளஹஸ்தியில் இருந்து தந்தி வந்தது. அவர்களது உறவினர்கள் காளஹஸ்திக்கு புறப்பட்டு சென்ற பிறகு, தபால்காரர் நியமன உத்தரவு உட்பட எல்லாக் கடிதங்களையும் பூட்டிய வீட்டுக்குள் எறிந்து விட்டுச் சென்றிருக்கிறார் என்று பின்னால் அவர்களுக்கு தெரிய வந்தது. இவ்வாறாக பாபா அந்த குடும்பத்துக்கு தக்க சமயத்தில் உதவி செய்தார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 28, 2019

உணவை பாபா ஏற்றுக்கொண்டார்

Image may contain: 1 person, closeup

ஸ்ரீ தத்தாத்ரேய ஜெயராம் ராஜே என்பவர், தானாவிலுள்ள ஒரு வழக்கறிஞர். ஒருமுறை 1955ஆம் ஆண்டில் அவர் சாய்பாபாவின் சரிதத்தைப் பாராயணம் செய்து முடித்தார். மறுநாளாகிய வியாழக்கிழமையன்று அவர் பாபாவின் படத்துக்கு இனிப்புகளை நிவேதனம் செய்தார். பகலுணவு வேலைக்கு சரியாக ஒரு பக்கீர் உணவுக்காக வந்தார். அவர் ஒரு முஸ்லிமைப் போல் உடை அணிந்திருந்தார். வைதீகப் பிராமணரான ராஜே, அவருக்கு ஓர் இலையில் உணவை அளித்து அதை வேறு எங்காவது சென்று உண்ணுமாறு வேண்டிக்கொண்டார். அங்கேயேதான் தான் உண்ணப் போவதாக அவர் விடாப்பிடியாய்க் கூறவே, அவரை பாபாவாகவே கருதி ராஜே அவருக்கு உணவு அளித்தார். உணவு முடிந்தவுடன், பக்கீர் தட்சிணை வேண்டும் என்று கேட்டார். ராஜே தம்மிடம் அந்த நிமிடத்தில் மிகக்குறைவான சில்லரை தான் இருப்பதாக ஒப்புக் கொண்டார். ஆனால் தனக்கு ஒரு கட்சிக்காரர் ஐம்பது ரூபாய்கள் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கொடுத்தால் பக்கீருக்குச் சேரவேண்டியதை தான் கொடுக்க முடியும் என்றும் கூறினார். அப்போது பக்கீர் அந்தக் கட்சிக்காரர் 3.15 மணிக்கு தாம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பார் என்றும் தாம் தட்சனையை பெற்றுக் கொள்வதற்காக மாலை 5 மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு சென்றார் வெகு தூரத்தில் வாழ்ந்து வந்த தனது கட்சிக்காரர் தொகையை செலுத்துவதற்காக வருவாரா என்று வியந்தார். ஆனால் ஆச்சரியப்படும்படியாக அவரது கட்சிக்காரர் 3.15 மணிக்கு வந்து, தாம் செலுத்தவேண்டியப் பணத்தை அளிக்கவே செய்தார். பக்கீரும் 5 மணிக்கு வந்து, பத்து ரூபாய்கள் பெற்றுக் கொண்டார். அதற்குப்  பதிலாக அவர் ராஜேக்கு சிறிது விபூதி கொடுத்தார். அது அவர் கையில் விழுந்த உடன் ஒரு ரோஜா மலராக மாறியது. ராஜே வியப்போடு நிமிர்ந்து பார்த்தபோது பக்கீரை எங்குமே காணவில்லை. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 27, 2019

ஆபத்பாந்தவா ஷீரடிவாசா

Image may contain: 2 people, closeup

போர்பந்தரிலுள்ள ஒரு வக்கீல் சாயிபாபாவின் பக்தர்.   ஒருமுறை அவர் ரயிலில் ஷீரடிக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது டிக்கெட் பரிசோதகர் வந்து பயணச்சீட்டைக் கேட்டார்.  பயணச்சீட்டை எடுக்க பர்ஸை தனது பேண்ட் பாக்கெட்டில் தேடியபோதுதான் , பர்ஸை யாரோ பிக்பாக்கெட் அடித்து திருடியது தெரியவந்தது.  அதில் டிக்கெட் மட்டுமின்றி தனது பயணச் செலவுக்கென வைத்திருந்த நூறு ரூபாயும் பறிபோயிருந்தது.

தனது பரிதாபமான நிலைமையை டிக்கெட் பரிசோதகரிடம் விளக்கிக் கொண்டிருக்கும் போது,  ஒரு வயதான பிரமுகர் ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் கொடுத்தார்.  "அது தன் நண்பருடைய பயணச்சீட்டு என்றும்,  கடைசி நேரத்தில் அவர் பயணத்தை ரத்து செய்ததால் இதை இவருக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமே !" என்றும் கூற,  பரிசோதகரும் சம்மதித்துச் சென்றுவிட்டார்.

இக்கட்டான சூழ்நிலையில் உதவி தன் மானம் காத்த அந்த பெரியவரோடு தன்னை அறிமுகம் செய்து கொண்டும் பேசிக் கொண்டுமே இருவரும் ஷீரடியை அடைந்தனர்.  ஷீரடியிலும் வக்கீலுடைய அனைத்து செலவுகளையும் அந்த பெரியவரே ஏற்றுக் கொண்டார்.  அதோடு மட்டுமல்லாமல் அவரின் அன்புப் பரிசாக "ஸ்ரீ ஸாயி சத்சரித்திரத்தையும்" வக்கீலுக்கு கொடுத்தார்.  

" நான் ஊருக்குத் திரும்பிப் போனதும் நீங்கள் எனக்கு செலவழித்த தொகை அனைத்தையும் மணியார்டர் மூலம் அனுப்பி விடுகிறேன்,  தயவுசெய்து உங்கள் முகவரியைத் தாருங்கள் !" என்று வக்கீல் அந்தப் பெரியவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார். 

ஷீரடிப் பயணம் முடிந்து ரயிலில் திரும்பி கொண்டிருந்த வக்கீல் ,  "சாயி சத்சரித்திரத்தைப் படிக்கலாம் என்று நினைத்து புத்தகத்தைப் புரட்டியபோது,  அதிலிருந்து நூறு ரூபாய் தாள் ஒன்று விழுந்தது."  தான் ஊருக்கு திரும்பி போகும் செலவுக்கும் அந்த பெரியவரே வைத்திருக்கிறார் போலும் !  "கேட்காமலே கொடுக்கும் பெருந்தகை !" என்று அந்தப் பெரியவரைப் பற்றி மனதுக்குள் நினைத்து சிலாகித்தார்.

வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெரியவர் கொடுத்த சாயி சத்சரித்திரத்தை பூஜை அறையில் வைக்கப் போன வக்கீல் திடுக்கிட்டார்.   "ரயிலில் தொலைத்துவிட்டதாக எண்ணிய பர்ஸ் அங்கே இருந்தது.  அதுவும் பாபாவின் படத்தின் முன்னால் !"

அதற்கடுத்த வாரம் அந்தப் பெரியவருக்கு அனுப்பிய மணியார்டரும் திரும்பி வந்தது, "அப்படி ஒரு முகவரியே இல்லையென்று !"
அப்போதுதான் அந்த வக்கீலுக்குப் புரிந்தது,  ரயிலிலும் ஷீரடியிலும் ஆபத்பாந்தவனாக வந்தது பெரியவரல்ல , "சாயிபாபா"வென்று !

எல்லோரிடமும் தட்சிணை வசூலித்த பாபா, "தனக்கு மட்டும் தக்ஷிணை கொடுத்திருக்கிறார் !  இது எப்பேர்ப்பட்ட பாக்கியம் !" என்று பெருமைக் கண்ணீர் மல்க, "சத்சரித்திரத்திலிருந்து விழுந்த நூறு ரூபாயை செலவழிக்காமல் பத்திரமாக பூஜையறையிலேயே வைத்து தினமும் பூஜித்தார் !" 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 26, 2019

உனக்கு பக்குவம் வரவில்லை ! பேராசைப்படுவதை நிறுத்து

Image may contain: 1 person, standing and text


1915-ம் ஆண்டில் அப்துல்காதர் என்ற பக்தர் பாபாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.  அதனால் அவர் எப்போதும் பாபாவின் சேவையிலேயே மூழ்கிப் போய்,  ஷீர்டியிலேயே தங்கி தொண்டு செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் பாபாவிடம் சென்று, "பாபா ! நான் எப்பொழுதும் தங்களையே நினைத்து நினைத்து உருகி தொழுது கொண்டிருக்கிறேன்.   தங்களுடைய சேவையிலேயே என்னுடைய வாழ்நாள் நேரம் முழுவதும் செலவழிக்கிறேன்.  அதற்கு ஈடாக உங்களுடைய சக்தியில் ஒரு பகுதியை எனக்களித்து என்னை மகானாக்க வேண்டும் பாபா!" என்று கெஞ்சினார்.

பாபா சிரித்துக் கொண்டே, "அப்துல்!  அதற்கான பக்குவம் உனக்கு வரவில்லை !  ஆக,  பேராசைப்படுவதை நிறுத்து!"  என்று கூறினார்.  ஆனாலும் அப்துல் விடுவதாக இல்லை.  மீண்டும் மீண்டும் பாபாவை நச்சரித்தார்.

பாபாவும் ஒருமனதாக யோசித்தவராக,  தன் கைகளை மூடிக் கொண்டு ஏதோ முணுமுணுத்தபடி,  அப்துலை நோக்கி வீசினார்.   பாபா கையில் ஒன்றுமில்லை.  ஆனால், அப்துல் மட்டும்  "தனக்குள் ஏதோ ஒன்று இறங்கியதை உணர்ந்தார்."

அதுநாள் முதல் அப்துல்காதர் ஷீரடிக்கு வந்த ஜனங்களுக்கு நீதி போதனைகளை சொல்ல ஆரம்பித்தார்.  திடீர் திடீரென எல்லோரையும் கண்டபடி திட்டினார்.  கல்லால் அடிப்பதாக பயமுறுத்தினார்.  தனக்குத்தானே எதை எதையோ பேசியும் உளறிக் கொண்டும் பித்துப் பிடித்தவரைப் போல் எல்லோரிடமும் நடந்து கொண்டார்.  அப்துலின் இந்த செய்கைகளால் ஒன்றரை மாதங்களாக ஷீரடி மக்கள் பெரிதும் அவதிப்படுவதை பாபா உணர்ந்தார்.

ஒருநாள் அப்துலை மசூதிக்குள் அழைத்த பாபா, தன் மூடிய கைகளை அவர்முன் நீட்டி , "லாவ் பாலே இடார்"  என்று கூறியபடி தன் பக்கம் இழுத்தார்.

ஏதோ ஒன்று தன்னிடமிருந்து வெளியேறுவதை அப்துல் உணர்ந்தார்.  அதன்பின் அப்துல் தன் இயல்பு நிலைக்கு திரும்பி சாதாரணமாகி விட்டார்.  "தன் தகுதிக்கு மீறிய வேண்டுதலை பாபாவிடம் வைத்தது மிகப்பெரிய தவறு" என்பதை அந்த நொடியில் உணர்ந்த அப்துல்,  பதினைந்து நாட்கள் கழித்து பூனாவுக்குச் சென்று ஒரு பீடிக்கடை வைத்து வாழ்க்கை நடத்தினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 25, 2019

பாபாவின் எல்லையில்லாக் கருணை

Image may contain: 5 people

நெல்லூர் ஜில்லா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்தவர் சுப்பம்மா.  படிப்பில்லாத அவளது வயது அறுபது.  ஒரு வியாழக்கிழமை தனது சம்பந்தி வீட்டில் நடந்த பாபா பஜனைக்குச் சென்றிருந்தாள்.

பஜனையின்போது பாபாவின் படத்தை நோக்கி கைகூப்பி கண்ணீர் மல்க , "பாபா !  தாங்கள் எத்தனையோ பேருடைய ரோகங்களைத் தீர்த்திருக்கிறீர்களாமே!.  இருமல் வந்து துப்பினால் ரத்தம் வருகிறது.  காசநோயாயிருக்கும் என்று சொந்தக்காரர்கள் என்னை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.  வயதோ அறுபதாகிவிட்டது.  கண்பார்வை வேறு மங்குகிறது.  ஆபரேஷன் செய்தாலும் பார்வை வராது என்கிறார்கள்.  அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சலாலும் வலுவின்றி படுத்து விடுகிறேன். ஆதரவே இல்லாத இந்த அநாதைக்கு தாங்கள் கருணை காட்டக் கூடாதா பாபா?"  என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டாள்.

அன்றிரவு பாபா அவள் கனவில் தோன்றி , "சில பச்சிலைகளை அவள் காதில் பிழிந்தார்.  "கரும்பு கடிப்பது போல் பாவனை செய் !"  என்றார்.  அவளும் அவ்விதமே செய்தாள்.  அப்போது சில துளிகள் தொண்டையில் இறங்கியது.  அந்தச் சாறு இனிப்பாய் இருந்ததை உணர்ந்தாள்.

மறுநாள் தூங்கி எழுந்த பிறகு கண்விழித்துப் பார்த்தால், அவளுக்கே ஆச்சர்யம் !  "பார்வை துல்லியமாய் தெரிந்தது.  காய்ச்சல்,  ஜலதோஷம் இரண்டுமே அதன்பின் வரவில்லை !  உமிழ்ந்தால் ரத்தமும் வரவில்லை !".   பாபாவின் எல்லையில்லாக் கருணையை எண்ணி வியந்தாள்.  அதன்பிறகு வாராவாரம் வியாழக்கிழமை தோறும் தவறாமல் பாபாவின் பஜனை எங்கு நடந்தாலும் ஓடோடிச் சென்று கலந்து கொண்டாள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நான் உன்னை பற்றியே மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்


பாபாவின் அன்பார்ந்த பக்தர்களில் எஸ்.பி. துமால் என்பவரும் ஒருவர். ஒரு நாள் பாபா அவரிடம், பாவ் நேற்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை. நான் உன்னை பற்றியே மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். துமால் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். துமால் சாயிபாபாவை இடைவிடாது நினைத்து வந்த பயிற்சியைப் பற்றித் தமக்குத் தெரியும் என்று இதன் மூலம் பாபா அவருக்கு உறுதிப்படுத்தினார்.

பாபா வாழ்ந்த காலத்தில், பக்தர்கள் அவரை தரிசிக்க வரும்போது "நான் எப்பொழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேற்று இரவு முழுவதும் உன்னையே நினைத்திருந்தேன் " போன்ற மொழிகளை கூறுவார். அதாவது தனது பக்தர்களை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பின் தொடர்கிறார், பாதுகாக்கிறார், காரியங்களை செய்யவும் வைக்கிறார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனது பக்தன் மேல் அப்படியொரு அன்பு. எப்பொழுதும் உன்னையே நினைத்திருக்கும் பாபாவை தினம் ஒரு பத்து நிமிடம் கூட நீ  நினைப்பதில்லை. பாபாவே எல்லாம், அவரிடமே சரணாகதி அடைந்துவிட்டேன் என்று சொல்பவர்கள் கூட அவரது நாமத்தை பத்து நிமிடம் கூட சொல்வதில்லை. பாபாவிடம் நெருங்கிய தொடர்பு வைத்து கொள்வதற்கு  வெறும் பத்து நிமிட சாயி நாம ஜபம் மிக சிறந்த சாதனம். சாயிநாம ஜபத்தின் மூலம்  உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் நிச்சயம் சாயி நாம ஜபம் செய்யவேண்டும்.
            " ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி "

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 24, 2019

நானும் உன்னுடன் வருகிறேன்.

Image may contain: 1 person

திருமதி சந்திராபாய் அடிக்கடி சீரடி செல்பவர். ஆனால் அவளது கணவர் போர்க்கர் ஒருமுறைகூட சீரடி சென்றதில்லை. ஆனால் அவர் தனது பக்தையின் கணவராதலால் பாபா அவர் மேலும் தம் கருணையைப்  பொழிந்தார். 1909ஆம் ஆண்டு  பண்டரிபுரத்தில் ரோடு அமைக்கும்வேலையில் போர்க்கர் ஈடுபட்டிருந்தபோது, சந்திராபாய் சீரடிக்குச் சென்று சில தினங்கள் அங்கேயே தங்கினார். ஒரு நாள்  சாய்பாபா அவளிடம் நீ பண்டரிபுரத்துக்கு உடனே செல்வது நல்லது. நானும் உன்னுடன் வருகிறேன். எனக்கு பிரயாணம் செய்ய வாகனம் எதுவும் தேவை இல்லை என்றார். எனவே தாமதமின்றி சந்திராபாய் புறப்பட்டு பண்டரிபுரத்தை  அடைந்தாள். அவளது கணவர் வேலையை விட்டு விட்டுப் பம்பாய் போய்விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாள். அவளிடம் மிகக் குறைவான பணமே இருந்தது. கூட வேறு இரண்டு பேரும் இருந்தனர். குர்த்வாடி வரை அவளால் செல்ல முடிந்தது. அங்கே தனது கதியற்ற நிலையை நினைத்து வருந்தியவளாய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தாள்.  திடீரென்று ஒரு பக்கீர் அவளுக்கு முன்னால் தோன்றி ஏன் அவள்  வருத்தமாக இருக்கிறாள் என்று வினவினார். அவள் எதையோ கூறி மழுப்பினாள்.  ஆனால் அதற்கு அவரது கணவர் தாண்ட்  என்னும் இடத்தில் இருப்பதாகவும் அவர் உடனே அங்கு செல்ல வேண்டும் என்று கூறி கேட்டு திகைத்தாள். அவளிடம் அதற்கு போதுமான பணம் இருக்கவில்லை. அப்போது பக்கீர் உடனடியாகத் தாண்டிற்கு 3 பயணச்சீட்டுகளை கொடுத்துவிட்டு அவள் எதுவும் கேட்பதற்கு முன்பே விரைந்து சென்று விட்டார். அவள்  தான்டிற்கு புறப்பட்டாள்.
இதற்கிடையில் தாண்ட் ரயில் நிலையத்தில் இருந்த போக்கர் சிறிது டீ குடித்துவிட்டு பெஞ்சு ஒன்றில்  தூங்க தொடங்கினார். அவரது கனவில் பக்கீர் ஒருவர் தோன்றி, நீ ஏன் என் அம்மாவை புறக்கணிக்கிறாய். அவள் அடுத்த ரயிலில் இங்கு வருகிறாள் அவள் இத்தனையாவது எண்ணுள்ள ரயில் பெட்டியில் இருக்கிறாள் என்று பெட்டியின் எண்ணையும் கூறினார்.
 தன்னை கண்டித்த அந்த பக்கீர் யாராக இருக்கக்கூடும் என்று வியந்தவராய் போர்க்கர் கண்விழிக்க பக்கீரும் மறைந்துவிட்டார். ரயில் வந்து பக்கீர் கூறிய அதே எண் உள்ள பெட்டியில் இருந்து சந்திராபாய் இறங்கி வருவதைக் கண்டு வியப்படைந்தார். அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றவுடன் தனது அதிசயமான அனுபவத்தை பற்றி அவளிடம் கூறி சாய்பாபாவின் படத்தை காட்டுமாறு கேட்டார். படத்தை காட்டியவுடன் தன் கனவில் தோன்றியவர் அவரே என்பதை கண்டார். பாபா சந்திரா பாயுடன் உடன் வருவதாக உறுதி கூறி தமக்கு வாகனம் எதுவும் தேவையில்லை என்று கூறவில்லையா?

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 23, 2019

ரொட்டியும் வெள்ளைப்பூண்டு சட்னியும்


1908ம்  ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது   திருமதி சந்திரா பாய்  போர்க்கர் என்பவர் கோபர்கானில்  இருந்தார். ஒரு நாள் அவளுக்கு முன்னால் ஒரு பக்கீர் தோன்றித்  தமக்கு ரொட்டியும் வெள்ளைப்பூண்டு சட்னியும் வேண்டும் என்று கேட்டார். சந்திராபாய் தான் சாதுர்மாஸ்ய  காலத்தில் வெள்ளை பூண்டு உண்பதில்லை ஆதலால் தன்னிடம் வெள்ளைப்பூண்டு இல்லை என்று கூற பக்கீர் மறைந்தார். பின்னர் அவள் அந்தப் பக்கிரி சாய்பாபாவாக இருக்கலாம் என்று நினைத்தாள். ஏனெனில் அவர் வெங்காயம் முதலியவற்றை தினமும் சாப்பிடுவார் என்று கேள்விப்பட்டிருந்தாள். எனவே அவள் ஷீரடிக்கு முதல் முறையாக புறப்பட்டாள். அவளைப் பார்த்தவுடன் பாபா நீ எனக்கு ரொட்டியும் வெள்ளைப்பூண்டு சட்னியும் கொடுக்கவில்லை இப்போது எதற்காக இங்கு வந்திருக்கிறாய்? என்றார். இது அவள் கொண்ட எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தியது. உடனே அவள் அதைக் கொடுப்பதற்காகத்தான் வந்துள்ளேன் என்றாள்.  பாபா அவளைப்பற்றி அங்கிருந்த மற்ற பக்தர்களிடம் "இந்த பெண்மணி கடந்த ஏழு பிறவிகளில் எனது சகோதரியாய் இருந்தவள்" என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 22, 2019

நேரில் தோன்றிய பாபா

Image may contain: 1 person

பம்பாய் பாந்திராவைச் சேர்ந்த ரகுவீர் புரந்தரே சாய்பாபாவின் அன்பு மிகுந்த பக்தர். சீரடிக்கு வெளியே, பாபா தமக்கு நேரில் காட்சியளித்த அனுபவத்தை பற்றி கூறுகிறார்;
 எனது மனைவியை காலரா நோய் தாக்கியது. மருத்துவர்கள் அவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கையை இழந்து விட்டனர். அப்போது தாதரில் என் வீட்டுக்கு முன்னால் இருந்த தத்தரின் கோவிலுக்கு அருகில் சாய்பாபா நின்று கொண்டிருப்பதை கண்டேன். அவர் அவளுக்கு உதியம் தீர்த்தமும் அளிக்கும்படி கட்டளையிடவே அவளுக்கு அவற்றை கொடுத்தேன். அரை மணி நேரத்தில் அவளது உடலில் போதுமான வெப்பம் ஏற்பட, டாக்டருக்கு நம்பிக்கை திரும்பியது. அவள் விரைவில் குணம் அடைந்தாள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 21, 2019

shri sai satcharithra Mahaparayan

Image may contain: 1 person

Om Sai Ram 🙏
To the Ocean of Devotees, 
Mahaparayan is started on the occasion of Shirdi Sai’s 100th Centenary year. 
Devotees globally are participating in Reading of the Sacred Book - 
The Life and Teachings of Shri Sai Baba as a tribute to Baba.
One need to read 2 chapters on every Thursday to participate in this MahaYagna. 
If interested pls join group 
https://chat.whatsapp.com/CNE9zLlSseI6wccQUAkNH7
Details about Mahaparayan if you don't know already:
This blog explains everything: http://blog.mahaparayan.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் சத்சரித்திரம் செய்த அற்புதம்

                      Meridileshayari.in

கோவில் குருக்களின் மகள் கோடேஸ்வரி.  அடிக்கடி அவளுக்கு உள்நாக்கு வீங்கி சாப்பிடவும் முடியாமல்,  சரியாகப் பேசவும் முடியாமல் பெரிதும் சிரமப்பட்டாள். 

வயதுக்கேற்ற போதிய உடல் வளர்ச்சியில்லாததற்கு அதுவே காரணம் என்றும்,  ஆபரேஷன் செய்தால் சரிசெய்து விடலாம் என்றனர் மருத்துவர்கள்.  ஆனால் தங்களுடைய பொருளாதாரமும்,  மகளின் நிலைமையும் அதற்கு ஒத்துவராது என அவளின் பெற்றோர் அஞ்சினர்.

குருக்களின் குடும்ப நண்பரான திரு.சேஷாத்ரி என்பவர் ,  "தினமும் மாலையில் பாபுசாஹேப் வீட்டில் பாபாவின் சத்சரித்திரத்தைப் படிக்கிறார்.  மகளோடு போய் அமர்ந்து கேளுங்கள்" என்றார்.  அதன்படி செய்ததோடு மட்டுமல்லாமல்,  அவர்கள் வீட்டிலும் பாபாவின் சத்சரித்திரத்தைப்  பாராயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.

12-12-1974 அன்று இரவு கோடேஸ்வரி ஒரு கனவு கண்டாள்.  ஒரு ஆஸ்பத்திரி.  அதில் பாபா மருத்துவராகவும்,  பேலேரம்மா என்ற தேவதை நர்ஸாகவும்,  ஷேத்ரபாலையா என்ற தேவதை கம்பவுண்டராகவும் இருந்தனர்.

மருத்துவ நாற்காலியில் கோடேஸ்வரி உட்கார்ந்திருக்கிறாள்.  ஆடவும் அசையவும் முடியவில்லை.  "ம்ம்.. பயப்படாதே !  வாயைத் திற !"  என்கிறாள் நர்ஸ். மருத்துவரான பாபா ஆபரேஷன் செய்து முடிக்கிறார்.  கோடேஸ்வரிக்கு கிறக்கமாக இருந்தது.  அப்படியே அசந்து தூங்கிவிட்டாள்.

கனவு கலைந்து தூங்கி விழித்தால்,  உள்நாக்கின் பழையவலி,  வீக்கம் எதுவுமில்லை.  துப்பினால் ரத்தம் வந்தது. அவளது பெற்றோர்கள் அதைக் கண்டு பயந்தனர்.  திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிட முடிந்தது.  ஒரு வாரத்தில் எல்லாம் சரியாயிற்று. 

கோடேஸ்வரி,  அதன்பின் நன்றாகப் பேசி நன்றாக சாப்பிட்டாள்.  உடல் வளர்ச்சியும் சீரானது.  இதைக் கேட்ட ஊரில் உள்ள அனைவரும் அதிசயித்தனர்.

"பாபாவின் சத்சரித்திரம் செய்த அற்புதம்த்தை" கண்டு வியப்பும்,  மகிழ்ச்சியுமடைந்த கோடேஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் ஷீரடிக்குச் சென்று பாபாவின் சமாதியில் தங்களின் நன்றிக் கடனை ஆனந்தக் கண்ணீரால் திருப்பிச் செலுத்தினர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 19, 2019

நம்பிக்கையை வலுப்படுத்தும் பாபாவின் லீலைதாணாவைச் சேர்ந்த ஹரிபாவ் கர்னிக் என்ற பாபாவின் பக்தர் ஷீரடிக்கு குருபூர்ணிமா தினத்தன்று வந்தார்.  சாஸ்திர சம்பிரதாயங்களோடு பாபாவை வழிபட்டார்.  பாபாவுக்கு புதிய உடைகளை,  நூறு ரூபாய் தட்சிணையோடு சமர்ப்பித்து விடைபெற்றார்.  

பாபாவிடம் உதியைப் பெற்றுக் கொண்டு மசூதியின் படிகளை விட்டு இறங்கிய ஹரிபாவ், "அடடா! பாபாவுக்கு தட்சிணையாக சமர்ப்பித்த அந்த நூறு ரூபாயோடு இன்னும் "ஒரு ரூபாய்" சேர்த்து கொடுத்திருந்தால் இன்னும் விசேஷமாக இருந்திருக்கும்!" என்று எண்ணியபடியே மசூதிக்குள் திரும்ப நுழைய முயன்றார்.  அதைக் கவனித்த ஷாமா , "திரும்பி வர வேண்டாம்" என ஜாடை காட்ட,  ஹரிபாவும் அரைமனதுடன் வீடு திரும்பினார்.

அதற்கடுத்த நாள் நாசிக்கில் உள்ள ஸ்ரீராமர்  கோவிலுக்கு தரிசனத்திற்காகச்  சென்றார் கர்னிக்.  கோவிலின் உட்புறம் சத்சங்கம் நடைபெறும் இடத்தில் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த நார்ஸிங்மஹாராஜ் என்ற ஞானி, திடீரென எழுந்து ஹரிபாவிடம் வந்து அவரது மணிக்கட்டையைப் பிடித்து, "நேற்று கொடுக்காமல் போன என்னுடைய ஒரு ரூபாயைக் கொடு !"  என்று கேட்டார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் ஹரிபாவ் எதுவுமே பேசாமல் உடனடியாக தன் பையிலிருந்த ஒரு ரூபாயை எடுத்து அந்த ஞானியிடம் கொடுத்தார்.  

தனது உண்மையான பக்தன் மனதிற்குள் நினைத்து கொடுக்க மறந்த தட்சிணையைக் கூட மறக்காமல் வசூலித்து,  பக்தனுக்கு தன் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் பாபாவின் லீலையை எண்ணி ஹரிபாவ் வியந்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 18, 2019

குரு பக்தி


குரு பக்தியைப் பற்றி பாபா எப்போதும் சிறப்பாகப் பேசுவார்.  "குருவிடம் பணிவும், தொண்டு மனப்பான்மையும் கொண்டு செயல்படுபவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்பதே ஒன்றுமில்லை !"  என்று கூறுவார்.

"என் குருநாதர் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட எழுந்திருக்கமாட்டார்.  பன்னிரண்டு ஆண்டுகள் அவரை என் குழந்தையாய், தந்தையாய் அலுக்காமல் தூக்கி சுத்தம் செய்திருக்கிறேன்.  கொஞ்சமும் அருவருப்பு என் மனதில் ஒருதுளி கூட தோன்றியதில்லை ! உணவை  வேளாவேளைக்கு ஊட்டி விடுவேன் !  அவர் முன்னிலையில் எனது பசியும் தாகமும் எனக்கு மறந்து போகும் !  ஒரு விநாடி கூட அவரை நான் பிரிந்ததில்லை !  ஆசிரமத்தைப் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பேன்! குருவின் ஆடைகளை அடிக்கடி மாற்றிவிடுவேன் !"

எனது குரு எனக்கு, "நீ ஏழுகடலுக்கப்பால் இருந்தாலும் உன்னோடு நான் இருப்பேன்" என்றருளினார்.  "என்னிடம் இருப்பதாக,  நான் செய்யும் அற்புதங்களாக , நீங்கள் சொல்லும் சக்தியெல்லாம் அவரிட்ட பிச்சை !"

குருதட்சணையாக அவர் என்னிடம், "மகிழ்ச்சியோடு கூடிய பொறுமை கொண்டிருக்க வேண்டும் !   குருவின்  எந்தச் செயலிலும் முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் !  தாய் ஆமை தன் குட்டிகளைப் பாதுகாப்பது போல் என் பார்வையால் உன்னைப் பேணுவேன்!" என்று கூறி வரமளித்தார்.  "அதன்படி அவரது அயராத நோக்கு என் மீதிருப்பதை எப்போதும் நான் உணர்கிறேன் !" என்றார் பாபா மனம் நெகிழ்ந்து.  வேப்பிலை மட்டுமே பன்னிரண்டு ஆண்டுகள் பாபாவின் உணவாக இருந்ததாக அவரே கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 14, 2019

நீ எனது குழந்தை

Image may contain: 1 person

சின்னகிருஷ்ணாசாஹேப் என்பவர் சிறுவயதிலிருந்தே விஷ்ணுவிடம் தீவிர பக்தி கொண்டவர்.  அவர் நீண்ட நேரம் யோகம் பயில்வார். 

 அவருடைய 21-ம் வயதில் (சுமார் 1910ம் வருடத்தில்) யோகநிலையில் இருந்தபோது , ஒரே இரவில் மூன்று கனவுகள் வந்தன.

முதல் கனவில்  "உடல் தனியாக இருக்க உயிர் தனியாக நின்றது." இரண்டாவது கனவுக் காட்சியில், விஷ்ணு பகவான் ஒரு புதியவரைக் காட்டி, "இவர் ஷீர்டி சாய்பாபா !  இவருள் பிரபஞ்சம் முழுவதும் அடக்கம்! இவரைப் போய் பார் !" ‌என்றார்.  அதற்கு அடுத்த கனவுக் காட்சியில்,  "அவரது உயிர் பறந்து சென்று ஒரு கிராமத்தை அடைந்தது.  அங்கே சாய்பாபா இருக்கும் இடத்தை விசாரித்து,  மசூதியில் காலை நீட்டி அமர்ந்திருந்த பாபாவிடம் தஞ்சமடைந்தது." 

அந்த யோகநிலைக் கனவு கலைந்ததும், சின்னகிருஷ்ணாசாஹேப் மறுநாளே ஷீர்டி புறப்பட்டுச் சென்றார்.  அங்கே மசூதியில்  பக்தர்கள் புடைசூழ இருந்த பாபாவைப் பார்த்ததும்,  "ஒரு முஸ்லீம் மனிதரை வழிபடவா விஷ்ணு பகவான் அனுப்பினார் ?"  என்று உள்மனதில் நினைத்தார்.  "மனிதனை மனிதன் வழிபடுவதா?" என்று எண்ணுகிறாயல்லவா?"  என்று பாபா கேட்டதும் கிருஷ்ணசாஹேப் திகைத்து நின்றார்.

பிற்பகலில் பாபா தனியாக இருக்கும்போது அவரருகில் பணிவுடன் சென்றார் சின்னகிருஷ்ணா.  "வா !  நீ எனது குழந்தை !  புதியவர்கள் எதிரில் நான் எனது குழந்தைகளை என்னிடம் நெருங்கவிடுவதில்லை!"  என்று கூறி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

பாபாவின் ஸ்பரிசத்தால்  யோகநிலையின் உச்சத்தையே உணர்ந்த  சின்னகிருஷ்ணா குரல் ததும்ப, "எத்தனை பிறவி எடுத்தாலும் நீங்கள் என்னுடனேயே இருக்கவேண்டும் !"  என்று கேட்க,  "அப்படித்தானே நிகழப் போகிறது!"  என்றார் பாபா அன்புடன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 13, 2019

எல்லா இடமும், பொருட்களும் படைத்தவனுக்கே சொந்தம்


Image may contain: one or more people

ஹரித்வார் புவா எப்போது மசூதிக்கு வந்தாலும் துனிக்கருகிலுள்ள தூண் பக்கத்தில்தான் உட்காருவார்.  அங்கேயிருந்து பாபாவைத் தரிசனம் செய்வதும்,  அவரது உபதேசங்களைக் கேட்பதும் அவருக்கு பூரண திருப்தியைத் தரும்.

ஒருநாள் பாபாவின் தரிசனத்திற்கு வருவதற்கு ஹரிபுவாக்கு தாமதமாகிவிட்டது.  மசூதிக்குள் நுழைந்தால்,  அங்கு புவா வழக்கமாக உட்காரும் இடத்தில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.  அவளைக் கட்டாயப்படுத்தி எழுந்திருக்கச் சொல்லிவிட்டு அங்கே அமர்ந்தார் ஹரிபுவா.  

இதனைக் கண்டு சினம் கொண்ட பாபா,  "எல்லோரும் எழுந்து முன்புற முற்றத்துக்குப் போங்கள் !" என்று சப்தமிட்டார்.

சிறிது நேரம் கழித்து பாபா சாந்தமானதும்  அனைவரும் மசூதிக்குள் வந்தனர்.  ஹரிபுவாவும் உள்ளே வந்து மறுபடியும் அதே இடத்தில் உட்கார்ந்தார்.

இதைக் கவனித்த பாபா, "யாருக்கும் எதுவும்,  எந்த இடமும் சொந்தமில்லை ! அனைவரும் பயணிகள்தான்.  இன்று உங்களின் நிலத்தை உங்கள் வாரிசு நாளை யாருக்கு விற்கிறாராரோ,  தானம் கொடுக்கிறாரோ, அவரே அனுபவிப்பார்.  அதற்குள் ஏன் இந்த பிடிப்பு? ஈர்ப்பு?  'எல்லா இடமும்,  பொருட்களும் படைத்தவனுக்கே சொந்தம்' என்று ஆவேசமாகக் கூறினார்.

பாபாவின் இந்த எச்சரிக்கையும் போதனையும் தனக்கானதே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஹரிபுவா பாபாவிடம் மன்னிப்பு கோரினார்.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...