குரு பக்தியைப் பற்றி பாபா எப்போதும் சிறப்பாகப் பேசுவார். "குருவிடம் பணிவும், தொண்டு மனப்பான்மையும் கொண்டு செயல்படுபவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்பதே ஒன்றுமில்லை !" என்று கூறுவார்.
"என் குருநாதர் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட எழுந்திருக்கமாட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் அவரை என் குழந்தையாய், தந்தையாய் அலுக்காமல் தூக்கி சுத்தம் செய்திருக்கிறேன். கொஞ்சமும் அருவருப்பு என் மனதில் ஒருதுளி கூட தோன்றியதில்லை ! உணவை வேளாவேளைக்கு ஊட்டி விடுவேன் ! அவர் முன்னிலையில் எனது பசியும் தாகமும் எனக்கு மறந்து போகும் ! ஒரு விநாடி கூட அவரை நான் பிரிந்ததில்லை ! ஆசிரமத்தைப் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பேன்! குருவின் ஆடைகளை அடிக்கடி மாற்றிவிடுவேன் !"
எனது குரு எனக்கு, "நீ ஏழுகடலுக்கப்பால் இருந்தாலும் உன்னோடு நான் இருப்பேன்" என்றருளினார். "என்னிடம் இருப்பதாக, நான் செய்யும் அற்புதங்களாக , நீங்கள் சொல்லும் சக்தியெல்லாம் அவரிட்ட பிச்சை !"
குருதட்சணையாக அவர் என்னிடம், "மகிழ்ச்சியோடு கூடிய பொறுமை கொண்டிருக்க வேண்டும் ! குருவின் எந்தச் செயலிலும் முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் ! தாய் ஆமை தன் குட்டிகளைப் பாதுகாப்பது போல் என் பார்வையால் உன்னைப் பேணுவேன்!" என்று கூறி வரமளித்தார். "அதன்படி அவரது அயராத நோக்கு என் மீதிருப்பதை எப்போதும் நான் உணர்கிறேன் !" என்றார் பாபா மனம் நெகிழ்ந்து. வேப்பிலை மட்டுமே பன்னிரண்டு ஆண்டுகள் பாபாவின் உணவாக இருந்ததாக அவரே கூறினார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil