Tuesday, March 19, 2019

நம்பிக்கையை வலுப்படுத்தும் பாபாவின் லீலை



தாணாவைச் சேர்ந்த ஹரிபாவ் கர்னிக் என்ற பாபாவின் பக்தர் ஷீரடிக்கு குருபூர்ணிமா தினத்தன்று வந்தார்.  சாஸ்திர சம்பிரதாயங்களோடு பாபாவை வழிபட்டார்.  பாபாவுக்கு புதிய உடைகளை,  நூறு ரூபாய் தட்சிணையோடு சமர்ப்பித்து விடைபெற்றார்.  

பாபாவிடம் உதியைப் பெற்றுக் கொண்டு மசூதியின் படிகளை விட்டு இறங்கிய ஹரிபாவ், "அடடா! பாபாவுக்கு தட்சிணையாக சமர்ப்பித்த அந்த நூறு ரூபாயோடு இன்னும் "ஒரு ரூபாய்" சேர்த்து கொடுத்திருந்தால் இன்னும் விசேஷமாக இருந்திருக்கும்!" என்று எண்ணியபடியே மசூதிக்குள் திரும்ப நுழைய முயன்றார்.  அதைக் கவனித்த ஷாமா , "திரும்பி வர வேண்டாம்" என ஜாடை காட்ட,  ஹரிபாவும் அரைமனதுடன் வீடு திரும்பினார்.

அதற்கடுத்த நாள் நாசிக்கில் உள்ள ஸ்ரீராமர்  கோவிலுக்கு தரிசனத்திற்காகச்  சென்றார் கர்னிக்.  கோவிலின் உட்புறம் சத்சங்கம் நடைபெறும் இடத்தில் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த நார்ஸிங்மஹாராஜ் என்ற ஞானி, திடீரென எழுந்து ஹரிபாவிடம் வந்து அவரது மணிக்கட்டையைப் பிடித்து, "நேற்று கொடுக்காமல் போன என்னுடைய ஒரு ரூபாயைக் கொடு !"  என்று கேட்டார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் ஹரிபாவ் எதுவுமே பேசாமல் உடனடியாக தன் பையிலிருந்த ஒரு ரூபாயை எடுத்து அந்த ஞானியிடம் கொடுத்தார்.  

தனது உண்மையான பக்தன் மனதிற்குள் நினைத்து கொடுக்க மறந்த தட்சிணையைக் கூட மறக்காமல் வசூலித்து,  பக்தனுக்கு தன் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் பாபாவின் லீலையை எண்ணி ஹரிபாவ் வியந்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...