
நெல்லூர் ஜில்லா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்தவர் சுப்பம்மா. படிப்பில்லாத அவளது வயது அறுபது. ஒரு வியாழக்கிழமை தனது சம்பந்தி வீட்டில் நடந்த பாபா பஜனைக்குச் சென்றிருந்தாள்.
பஜனையின்போது பாபாவின் படத்தை நோக்கி கைகூப்பி கண்ணீர் மல்க , "பாபா ! தாங்கள் எத்தனையோ பேருடைய ரோகங்களைத் தீர்த்திருக்கிறீர்களாமே!. இருமல் வந்து துப்பினால் ரத்தம் வருகிறது. காசநோயாயிருக்கும் என்று சொந்தக்காரர்கள் என்னை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். வயதோ அறுபதாகிவிட்டது. கண்பார்வை வேறு மங்குகிறது. ஆபரேஷன் செய்தாலும் பார்வை வராது என்கிறார்கள். அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சலாலும் வலுவின்றி படுத்து விடுகிறேன். ஆதரவே இல்லாத இந்த அநாதைக்கு தாங்கள் கருணை காட்டக் கூடாதா பாபா?" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டாள்.
அன்றிரவு பாபா அவள் கனவில் தோன்றி , "சில பச்சிலைகளை அவள் காதில் பிழிந்தார். "கரும்பு கடிப்பது போல் பாவனை செய் !" என்றார். அவளும் அவ்விதமே செய்தாள். அப்போது சில துளிகள் தொண்டையில் இறங்கியது. அந்தச் சாறு இனிப்பாய் இருந்ததை உணர்ந்தாள்.
மறுநாள் தூங்கி எழுந்த பிறகு கண்விழித்துப் பார்த்தால், அவளுக்கே ஆச்சர்யம் ! "பார்வை துல்லியமாய் தெரிந்தது. காய்ச்சல், ஜலதோஷம் இரண்டுமே அதன்பின் வரவில்லை ! உமிழ்ந்தால் ரத்தமும் வரவில்லை !". பாபாவின் எல்லையில்லாக் கருணையை எண்ணி வியந்தாள். அதன்பிறகு வாராவாரம் வியாழக்கிழமை தோறும் தவறாமல் பாபாவின் பஜனை எங்கு நடந்தாலும் ஓடோடிச் சென்று கலந்து கொண்டாள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil