Tuesday, July 16, 2019

குருபாத பக்தி

guru poornima saibaba க்கான பட முடிவு

வாழ்க்கையில் "குருபக்தியே பிரதானம்" என்று எடுத்துக்காட்டும் ஸாயீயின் கதைகள் மிகப் புனிதமானது;   நமக்கு போதனையளிப்பது.  கவனமாகக் கேட்பவர்கள் உலக சுக நாட்டங்கள் படிப்படியாகக் குறைவதை உணர்வார்கள். 

எவ்வளவுக்கெவ்வளவு கதை கேட்பவர்களின் நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு "ஸாயீயின்  பொக்கிஷம்" அவர்களுக்குத் திறக்கும். குதர்க்கிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும் இந்த லாபம் கிடைக்காது.  "அன்பார்ந்த, நம்பிக்கையுள்ள பக்தனே" இதை அனுபவிக்க முடியும்.

இந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோஹத்தால், தான் ஸச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேஹமே என்று நினைத்துக்கொள்கிறது. 

இது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் "நானே செயல்புரிபவன், நானே அனுபவிப்பவன்!" என்ற நம்பிக்கை பெருகுகிறது. ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டுத் தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.

குருபாத பக்தியே இந்த ஈனமான நிலையி­ருந்து விடுபடும் மார்க்கமாகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸத்குருவின் சரித்திரத்தைப் படியுங்கள்

ஸத்குருவின் சரித்திரத்தைப் படிப்பதாலேயே நமக்கு வரவிருக்கும் பேராபத்துகள் தவிர்க்கப்பட்டு,  நாம் மிகச்சிறந்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்ப...