Wednesday, August 21, 2019

நினைத்தது நடக்கும்

இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். 
-  ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 20, 2019

தீர்க்கமுடியாத வியாதிகளும் தீர்க்கப்படும்.பாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. தீர்க்கமுடியாத வியாதிகளும் பாபாவின் தர்பாரில் தீர்க்கப்படும். ஆகவே பாபாவிடம் முழுநம்பிக்கை வையுங்கள். இங்குள்ள பக்கீர் உமது வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவார், கவலையை விடு  என்று பாபா கூறியிருக்கிறார். சாயி தெய்வத்தின் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை. யார் கைவிட்டபோதிலும் பாபா தனது பக்தனை கைவிடமாட்டார். அவரிடம் நம்பிக்கை வைப்பது இப்பொழுது  மிகவும் அவசியமாகிறது. 
ஓம் சாயிராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 19, 2019

குரு சரித்திரம் படியுங்கள்

நீங்கள் எப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்து கொண்டிருந்தாலும், இந்த குரு சரித்திரத்தை நம்பிகையுடன் பாராயணம் செய்தால் உங்கள் இன்னல்களும் துயரங்களும் விலகி  நன்மைகள் உண்டாகும். இது சத்தியம்.


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
பாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன?  குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா? என்று கேட்டார். அதற்க்கு பாபா "ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்" என்று கூறினார்.

( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )

குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

குரு சரித்திரம் படிக்க கீழ கொடுக்கப்பட்டுள்ள link'ஐ  க்ளிக் 

https://drive.google.com/open?id=0B7G8udmBMXCMZFhqLXhUSFpzcWs"திகம்பரா திகம்பரா நரசிம்ம சரஸ்வதி திகம்பரா"


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 6, 2019

எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.மிகவும் எளிமையான வழியையே பாபா போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என ஏமாற்று வேலைகள் ஏராளம். சதசத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக,
( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது பாபாவே எல்லாம்  என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.
( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.
( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.
( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.
( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில் , பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் "சாயி, சாயி " மட்டுமே. இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு மந்திரம் எதுவும் இல்லை.
( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...