Monday, November 18, 2019

ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்

          Image may contain: 1 person, sitting and indoor

"வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது.  ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்க வேண்டும்.  அதைப் பொறுத்தே ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார் !"
  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 17, 2019

ஸாயீயின் சரித்திரம்

Image may contain: 1 person
"ஸாயீயின் சரித்திரம் ஆழங்காண முடியாத சமுத்திரம். அவருடைய கதைகளுக்கு உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரமாவது அளித்து,  செவிகளையும் செவிச்செல்வத்தையும் புனிதமாக்கி கொள்ளுங்கள் ! அஹங்காரம் அணுவளவும் இன்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்பீர்கள் !"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 16, 2019

ஸாயீயை தியானம் செய்ய வேண்டும்

Image may contain: one or more people, indoor and closeup
"இரவு பகலாக ஸாயீயை தியானம் செய்ய வேண்டும்.  ஸாயீயைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தில் நுழைந்து விடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும்."

 "இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும்.  எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் தள்ளி வைக்கப்படட்டும்."

 "இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் நிகழ்காலம் ஸத்குரு ஸாயீபாபாவின் பாதங்களில் நிரந்தரமாக நிலையாக லயிக்கட்டும் !"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 11, 2019

நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்

Image may contain: 1 person

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள்,-இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 8, 2019

ஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்

Image may contain: 2 people, food

"ஸ்ரீசாயி சத்சரித்திரத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும், செல்வமும், க்ஷேமமும் நல்குவார் !"

"கருத்தூன்றிய  மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் !"

"தனது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ அவன் ஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்!"

"பாபாவின் கதைகளை தினமும் படிப்பதால் நோயாளிகள் குணமுற்று திடகாத்திரமடைவர்.   ஏழைகள் செல்வம் அடைவர்.  கீழ்நிலையில் உள்ளோரும் நசுக்கப்பட்டவரும் உன்னத நிலை பெறுவர்.   மனம் சலனங்களில் இருந்து விடுபட்டு,  ஒருநிலைப்படும்."

'தினமும்,  மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள்.  நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆவலுடன் படிக்கிறார்களோ,  அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சாயி உற்சாகம் அடைந்து உங்களுக்கு சேவை செய்வதிலும்,  உதவியாகவும் இருப்பார் !"

(ஸ்ரீ ஸாயி சத்சரித்திர சாராம்சம்)


🙏ஜெய்சாய்ராம்🙏


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 6, 2019

கனவில் பாபா வந்தார்


Image may contain: 1 person

ஸ்ரீ சுப்பையாரெட்டி என்ற பாபாவின் தீவிர பக்தர் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே சாயிபாபாவின் படத்தை கொடுப்பது வழக்கம்.  அவர்களில் ஒருவர் டாக்டர். ராஜகோபாலாச்சாரி.  அவர் பாபாவின் படத்தை  தன் கிராமத்து வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தார்.

டாக்டர் தனது பணியின் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒருமாதம் வெளியூர் வாசம் செய்யும்படி ஆகிவிட்டது.  அவர் பாபாவின் படத்தை மாட்டியிருந்த வீட்டின் சுவரோ மண்சுவர்.  ஒருவாரம் தொடர் மழை வேறு பெய்து சுவர் முழுவதும் ஈரமாயிருந்தது.

ஒருமாத பயணம் முடிந்து டாக்டர் , தனது வீட்டிற்கு திரும்பினார்.  அவர் திரும்பி வந்த நேரம் நள்ளிரவு.  பயணக்களைப்பில் அப்படியே சோர்வாக படுத்து உறங்கிவிட்டார்.  "கனவில் பாபா வந்தார்.  ஆனால் எதுவும் பேசவில்லை !  டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார்.  முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் !"  அடுத்த நிமிடம் மறைந்துவிட்டார்.

மறுநாள் காலையில் எழுந்த டாக்டர்,  "பாபாவின் படத்தைப் பார்த்தால்,  பாபாவின் முழங்கால் பகுதியில் கரையான்கள் அரித்திருந்தன." "அடடா ! பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் !  என்னை மன்னித்து விடுங்கள் பாபா !"  என்று கூறி உடனடியாக படத்தைக் கழற்றித் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு சர்வ அலங்காரத்துடன் பூஜையறையில் வைத்து வழிபட ஆரம்பித்தார்.

ஒருநாள் சாது வடிவில் வந்த பாபா டாக்டரின் மனைவியிடம் ,  "சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்றார்.  அதற்கு டாக்டரின் மனைவியோ , "இன்னும் சமையல் முடியவில்லை !  சற்று நேரம் பொறு !" என்று கூறினாள்.  "அம்மா !  பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை !  அன்புதான் எனக்கு முக்கியம் !"  என்றார் சாது.  உடனே அவரை அன்புடன் வரவேற்று இருந்த உணவுப் பண்டங்களை பரிமாறினாள்.   வெற்றிலை பாக்கு தட்சிணை எடுத்து வர வீட்டுக்குள் சென்று வருவதற்குள் அந்த சாது போய்விட்டிருந்தார்.  ஆனால்  "அவர் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரு கையளவு பாக்குகளும், ஒரு கையளவு வெள்ளி ரூபாய்களும் இருந்தன."  உடனே தெருவுக்கு ஓடோடி வந்து பார்த்தாள்.  அந்த சாது கண்ணுக்கெட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தார்.

வாசலில் நின்ற பக்கத்து வீட்டுக்காரர் , "என்னம்மா !  என்ன விசயம் ?  ஏன் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறாய்?"  என்று கேட்டார்.  டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி , "அவர் என் வீட்டில் சாப்பிட்டார்.  அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் !" என்றாள். 

பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து சென்று சாதுவை டாக்டர் வீட்டுக்கு திரும்பி அழைத்துவந்தார்.  திரும்பி வந்த சாது,  டாக்டரின் மனைவியிடம் , 'அம்மா ! பாக்கு சௌபாக்கியம் !  இன்னொன்று ஐஸ்வர்யம் !  சன்யாசிக்கு அவைகள் எதற்கு?   அன்னலட்சுமியான உனக்கு அது நான் தந்த பரிசு !" என்று சொல்லிச் சென்றார்.

அதுநாள் முதல் அவர்களின் வாழ்வில் மங்களம் பொங்கியது !  அது மட்டுமல்ல !  தபால்துறை சேமிப்புக் கணக்கில் அவள் பெயரில் "சாயி" என்பவர் பலநூறு ரூபாய்களைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.  சாதாரண "அன்பான உணவுக்காக பாபா தந்த அருட்கொடையை" நினைத்து டாக்டர் தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பாபாவிடம் விசுவாசமாக பக்தி செலுத்தினர்.  அதோடு நின்றுவிடாமல் நெல்லூரில் பாபா கோவில் கட்டுவதற்கும் அரும்பாடுபட்டனர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 4, 2019

நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன்?

           Image may contain: one or more people


ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, "அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, "இனி பயமில்லை" என்றார்.
மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" என்று எச்சரித்தார். (பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் )




http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 3, 2019

பாபாவே காட்சி தருவார்

Image may contain: one or more people and closeup


"ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சுருக்கமானது, வெகு ஆழமான வியாபகமுள்ளது.

"என்னிடமே நிலைத்திருப்பின்" என்ற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. 
இறுதிவரை, எத்தகைய சூழ்நிலையிலும், பாபாவை விட்டு நாம் விலக கூடாது. அவரை மட்டுமே சார்ந்து இருக்கும்பொழுது நமது நம்பிக்கை மேலும் வலுவடையும். இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, பாபாவால் தீர்வு கொடுக்கமுடியாது என்று மட்டும் எண்ணவேண்டாம். நம்பிக்கையை வேறு ஒரு தெய்வத்திடம் மாற்றமும் வேண்டாம். ஏனென்றால். எல்லாவற்றையும் நமது பாபாவே நடத்துகிறார். தனது பக்தனின் முழு பொறுப்புகளை அவரே சுமக்கிறார். பாபா எப்போதும் தன் பக்தனுடனேயே இருக்கிறார். உறுதியான நம்பிக்கையின் மூலம் இதை நீங்கள் உணரலாம், யாருடைய உதவியும் இல்லாமல்.உண்மையில் பாபாவிற்கும் உங்களுக்கும் இடையில் யாருமில்லை. ஒரு தந்தையை போலவோ, குருவை போலவோ, ஒரு நண்பனை போலவோ பா(BHA)வித்து பாபாவை எப்போதும் அணுகுங்கள். எப்பொழுதும் சாயிநாம ஜபம் செய்வதும், சத்சரிதம் படிப்பதும் கூட பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யவே. நம்பிக்கையே பிரதானம். பாபாவே எல்லாம், சர்வ வியாபி, அவரே இறைவன், அவரை மிஞ்சிய சக்தி வேறொன்றுமில்லை  என்று உணர்ந்த பக்தனுக்கு  எல்லா இடங்களிலும் பாபாவே காட்சி தருவார். அந்த பக்தன் உடல், ஆன்மா பற்றி எந்தவித கவலையும் கொள்ளவேண்டியது இல்லை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 2, 2019

பரிபூரண சரணாகதி

Image may contain: 1 person, smiling, indoor

"ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதைவிடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வதைவிடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் ஸமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது."

 தம்முடைய அஹங்காரத்தை முழுமையுமாக அழித்துவிடவேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக்கூடிய தைரியம் இருப்பவரும் (தீர்மானத்தின்படி செயல்பட்டு) அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப்பிடிப்பவரும் அபூர்வமானவரே !

இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர், அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.
 அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர், அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்

           "வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது.  ஸாயீ பாதங்க...