Friday, January 31, 2020

உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.
நானா (பாபாவின் பக்தர்) ; பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

நானா: அப்படி என்றால், ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை 
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது. என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு, என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 30, 2020

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படியுங்கள்ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படிக்க கீழே உள்ள லிங்க்'ஐ க்ளிக் செய்யவும் 


ஸாயீஸத்சரித்திரம் வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று ; ஆத்மானந்தத்தின் ஜீவனாகும்.  இதை தயாஸாகரமான ஸாயீமகாராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன் பொழிந்திருக்கிறார் !.

இவ்வுலக வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதே இக்காதைகளின் (இச்சரித்திரத்தின் ) நோக்கம்.

ஸாயீயின் காதைகளைப் பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்க்கையில் உயர்ந்த மேன்மையை அடைவார்கள். அவர்களுக்கு ஸாயீயின் பாதங்களின்மேல் பக்தி வளர்ந்து சந்தோஷமென்னும் பெருநிதி அவர்களுடையதாகும். 

ஸாயீயின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்காதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களை நினைவு கொள்வார்கள்.

ஸாயீயின் காதைகள் எப்பொழுதெல்லாம் காதில் விழுகின்றனவோ, அப்பொழுதுதெல்லாம் ஸாயீ கண்முன்னே தோன்றுவார்.  அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவுபகலாக நிலைத்துவிடுவார்.  கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார்.  ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்றுவந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.

இது ஒரு சரித்திரமன்று; ஆனந்தக்கிடங்கு;  நிஜமான பராமிருதம்.  பக்தி பா(BHA)வத்துடன் அணுகும் பாக்கியசாலிகளால்தான் இதை அனுபவிக்க முடியும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 28, 2020

ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி பாபா குழந்தை பாக்கியம் அருளினார்.


ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.

பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 27, 2020

பொய் பேசவேண்டாம்"நான் கூறுவதைக் கேளுங்கள்.  இறைவனை மகிழ்விக்கத் தக்கவகையில் நடந்து கொள்ளுங்கள்.  ஒருபோதும் பொய் பேசவேண்டாம்.  எப்போதும் வாய்மையைக் கடைப்பிடியுங்கள்."

"ஒருபோதும் ஒருவரையும் வஞ்சிக்தாதீர்கள்.  உங்களிடமுள்ள பொருளை உங்கள் சக்திக்கேற்றவாறு நல்ல காரியங்களுக்காக செலவழியுங்கள்."

"இவ்வாறாக நீங்கள் பயனடைந்து, நிறைவாக ஸ்ரீ மந் நாராயணனை காண்பீர்கள்.  என் சொற்களை நினைவில் வைத்து தக்கவாறு நடந்துகொள்ளுங்கள்."

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 24, 2020

அன்னதானம் செய்

Image may contain: 1 person, closeup

பகவன்தாரோ ஷீர்சாகர் என்பவர் பாபாவின் பக்தர்.  ஷீரடிக்கு ஒருமுறை தரிசனத்திற்கு வந்தபோது பாபா அவரிடம்,   "ஓ ! ஷீர்சாகர்‌,   உன் தந்தை தீவிர விஷ்ணு பக்தர். அந்த ஷீர சாகரனின் பெயரை உனக்கு ஆசையாய் வைத்தார்.  வருடம் தவறாமல் பண்டரிபுரம் செல்வார்.  ஏகாதசி உற்சவமும்,  அன்னதானமும் செய்வார்.  ஆனால்,  நீயோ வீட்டில் செய்துவந்த பூஜையையும் நிறுத்திவிட்டாய் !   நைவேத்யம் படைக்காமல் பகவானைப் பட்டினி போடுவது மகா அபசாரம்.  பகவான் எதையும் சாப்பிடுவதில்லை.  ஆனால் தன் பக்தனிடம் எதிர்பார்க்கிறார்.   நீ ஒன்று செய் ! பகவானுக்கு நைவேத்யம் செய்வதை மட்டுமே சாப்பிடுவதென்ற கொள்கையை கடைப்பிடி !  அப்போதுதான் உன் தவறு புரியும்"  என்றார்.

அதற்கு ஷீர்சாகரோ,  "ராமன், சிவன்,  கிருஷ்ணன் என எல்லோரையும் நான் உங்களிடமே காண்கிறேன் பாபா" என்றார்.

பாபாவோ,. "இருக்கலாம்!  ஆனால் தரித்திரப்பட்டவர்களுக்கு  வீட்டில் வழிபாடு நடத்த தனி இடம் கிடைக்காது.  அவர்கள்  ஆலயம் சென்றே தங்கள் குறைகளை முறையிடுவர்.  அந்த ஆலயம் சரிவர நடைபெற,  தூய்மையாயிருக்க பணக்காரர்கள் உதவ வேண்டாமா?  கோவிலுக்கு வரும் ஏழைகள் பசியோடு திரும்பாதிருக்கச் செய்யப்படுவதுதானே அன்னதானம்!" என்று அழுத்தமாகக் கூறி ஷீர்சாகரை திருத்தி பண்டரிபுரம் சென்று ஆண்டுதோறும் அன்னதானம் செய்ய வைத்தார் பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 23, 2020

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்நானா சாகேப் ராஸனே அல்லது தவுலத்ஷா என்கிற தத்தாத்ரேய தாமோதர் ராஸனே
(தாமோதர் ஸாவல்ராம் (அண்ணா) ராஸனே, காசர் அவர்களது புதல்வர், வயது 40, வசிப்பது ரவிவார்பேட், பூனே - மே, 1936.

என் தந்தை சாயிபாபாவின் பழம் பெரும் பக்தர், நானா சாகேப் சந்தோர்க்கர் பாபாவிடம் சென்ற அதே காலத்தில் என் தந்தையும் சென்றார். அப்போது என் தந்தைக்கு குழந்தைகள் இல்லை; புத்திரப்பேறு கிடைக்க ஆசி பெற பாபாவிடம் செல்ல விரும்பினார். சுமார் 1900ம் ஆண்டு ஒரு பக்தர் பாபாவுக்கு ஒரு கூடை மிகச்சிறந்த கோவா மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். அவற்றுள் ஆறு பழங்களை தனியாக எடுத்துவைத்துவிட்டு எஞ்சியதை அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக பாபா விநியோகம் செய்துவிட்டார். அவர்கள் எஞ்சிய ஆறு பழங்களையும் விநியோகிக்கும்படி கேட்டனர். ஆனால் அவற்றை தாம்யாவுக்காக (அதாவது என் தந்தைக்கு) எடுத்து வைத்திருப்பதாக பாபா கூறிவிட்டார். 'தாம்யா இங்கு இல்லையே?' என்றனர். 'கோபர்காமுக்கு வந்துவிட்டார், விரைவில் இங்கு வருவார்' என பாபா பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து என் தகப்பனார் அங்கு வந்து பாபாவுக்கு மலர் மாலைகள், ஆடை போன்றவற்றை சமர்ப்பித்தார். அப்போது பாபா "தாம்யா, இந்த பழங்களை இப்போது எடுத்துப்போ. அவற்றை உண்டு சாவாயாக" எனக் கூறினார்.

பாபாவின் இந்த சொற்களை கேட்டு என் தந்தை நடுங்கிப்போய்விட்டார். ஆனால் அங்கிருந்த மஹல்சாபதி பாபாவின் காலடியில் இறப்பதும் ஒருவித அனுக்ரஹமே எனக் கூறினார். இவ்வாறு ஊக்குவிக்கப்பட்ட என் தகப்பனார் பழங்களை உண்ணலாமென நினைத்தார். ஆனால் பாபா,"இந்த பழங்களை நீயே உண்டுவிடாதே, உன் இளைய மனைவியிடம் கொடு. உனக்கு முதலில் 2 பிள்ளைகள் பிறப்பார்கள். முதல்வனுக்கு தவுலத்ஷா என்றும் இரண்டாவது மகனுக்கு தானாஷா என்றும் பெயர் வை" எனக்கூறி என் தந்தைக்கு ஆறுதலளித்தார். அகமத் நகரிலுள்ள தமது வீட்டிற்குத் திரும்பிய என் தந்தை இளைய மனைவியிடம் பழங்களை கொடுத்தார். பிறகு ஒரு குறிப்பேட்டில் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு இட வேண்டிய பெயர்களை குறித்துக்கொண்டார். ஒரு வருடத்திற்குப்பின் நான் பிறந்தேன். பதினைந்து மாதங்கள் நிரம்பியிருந்த என்னை என் தந்தை ஷிர்டியிலுள்ள சாயிபாபாவின் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பாபாவிடம் "இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?" எனக் கேட்க, பாபா, "நான் உன்னிடம் கூறியதை மறந்து விட்டாயா? உன் குறிப்பேட்டில் முன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்துள்ளாய். குழந்தைக்கு தவுலத்ஷா என்ற பெயரை சூட்டும்படி நான் கூறவில்லையா?" என பதிலளித்தார்.

என்னுடைய ஐந்தாவது வயதில் (1990ம் ஆண்டில்) செளளம் செய்வதற்காக (சிகை வைப்பது - முடி கொடுப்பதற்கு) என்னை ஷீரடிக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு அக்ஷராப்யாசமும் (முதன் முறையாக எழுத பழுகுவது) நடந்தது. சாயிபாபா என் கையை பிடித்து சிலேட்டில் ஹரி எழுத வைத்தார். அதன் பின்னர் ஷிர்டியிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு திருமணம்  நடத்த தீர்மானித்தபோது, நான்கு பெண்கள் பார்க்கப்பட்டனர். எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் முன்னதாக பாபாவை கலந்தாலோசித்து அனுமதி பெறாமல் என் தந்தை முடிவு எடுக்கமாட்டார். அவர்  சாயிபாபாவிடம் சென்று எனக்கு மணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நான்கு பெண்களின் ஜாதகங்களையும் அவர் முன் வைத்தார். அவர்களுள் ஒரு பெண்ணுக்கு ரூ.2500 அல்லது ரூ.3000 வரதட்சிணை அளிப்பதாக முன் வந்திருந்தனர். பாபா நான்கு ஜாதகங்களில் ஏழ்மையான ஒரு பெண்ணின் ஜாதகத்தை எடுத்து என் தந்தையின் கைகளில் கொடுத்தார். அந்த பெண்ணையே நான் மணந்தேன். பண்டரிபுரத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு வருகை தரும்படி பாபாவை என் தந்தை அழைத்தார். ஆனால், "பாபா, நான் உன்னுடனேயே இருக்கிறேன். அஞ்ச வேண்டாம்!" எனப் பகன்றார். மேலும் என் தந்தை திருமணத்திற்கு வரவேண்டுமென பாபாவை வற்புறுத்தினார். ஆனால் பாபாவோ வருவதற்கு மறுத்து, "ஆண்டவனின் சித்தமின்றி என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை. என் சார்பில் திருமணத்தில் பங்கேற்க சாமாவை அதாவது மாதவராவை அனுப்பி வைக்கிறேன்" எனக் கூறிவிட்டார். பண்டரிபுரத்தில் நிகழ்ந்த திருமணத்தில் சாமா பங்கேற்றார்.

எனக்கு ஒரு இளைய சகோதரன். அவனுக்கு பாபா கூறியபடிய பெயரிடப்பட்டது. மணமாகி எனக்கு இரு பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தனர். ஆனால் அவர்கள் பிறந்து சில மாதங்களிலேயே இறந்தனர். ஆண் குழந்தை 1926ல் மாண்டது. என் மனைவியின் உடல் மிக்க பலவினமாக ஆனது. மிகவும் மனம் தளர்ந்த நான் பாபாவிடம் இவ்வாறு பிராத்தனை செய்தேன். "விரைவிலேயே மாண்டுவிடும் பல குழந்தைகளை அளிப்பதற்கு பதிலாக நீண்ட ஆயிளுடன் கூடிய ஒரு குழந்தையை அளிக்கவேண்டும்." நான் ஷீரடியில் ஓரிரவு உறங்கிக்கொண்டிருந்தேன். பாபா என் கனவில் தோன்றி நான் இறந்துவிட்டதாக வருத்தப்படும் ஆண் குழந்தை மூலா நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெற்றோர்களுக்கு கெடுதல் விளையும் எனக்கூறினார். கனவில் பாபாவின் மார்பில் சூரியனைப் போன்ற ஒரு ஒளிமிக்க வட்டத்தைக் கண்டேன். அந்த சூரியனுக்குள் இறந்துபோன என் ஆண் சிசுவை மடியில் வைத்துக்கொண்டு பாபா உட்கார்ந்திருக்க, அவர் என்னிடம் கூறுகிறார்: "இந்த ஆபத்தான குழந்தையை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டேன். உனக்கு ஒரு நல்ல குழந்தையை அளிக்கிறேன், பயப்படாதே". இந்த காலத்திற்கு முன் எங்கள் குடும்பம் அகமத்நகரை விட்டு பூனாவில் குடியேறிவிட்டது. நான் வீட்டிற்கு திரும்பியவுடன் இறந்துபோன குழந்தையின் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தேன். அது மூலா நக்ஷத்திரத்திலேயே பிறந்திருந்தது. பதினைந்தே மாதங்களில் எனக்கு ஒரு மகன் பிறந்து இன்றும் ஆயிளுடன் இருக்கிறான். இது நடந்தது 1918ல்.

சாயிபாபாவிடம் என் விசுவாசம் அதிகரித்தது. பிற மகான்களையும் நான் சாயிபாபாவாகவே காண்கிறேன். அவர்களை பணியும்போது வெளிப்படையாகவோ அல்லது எனக்குள்ளேயோ "சமர்த்த சத்குரு சாயிநாதனுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொள்வேன். 1927ம் ஆண்டில் கேத்காம்பேட்டிற்குச் சென்று நாராயண மகராஜை இந்த வார்த்தைகளை மனத்துள் கூறிக்கொண்டே வணங்கினேன். அவர் என்னிடம் உரைத்தார்: "உனது குரு பரமகுரு. அவர் என்னை விட உயர்ந்த தன்மை படைத்தவர். நீ ஏன் இங்கு வந்தாய்? அங்கே செல். உன் எண்ணம் ஈடேறும்". இது நடந்தது பாபாவால் என் முந்தைய குழந்தை பிறந்தது பற்றி குறிப்பிட்டிருந்ததற்கு முன்னதாக.

1927ல் என் கிரகபலன் சுபகரமாக இல்லை! என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு "சாயிபாபாவுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: "நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும்.? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களை பற்றுகிறோம்". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் ஒரு பகீர் போன்று தோன்றி  "நீ மிகவும் சஞ்சல மடைந்துள்ளாய். எனக்கு பிட்சை கொடு. உனது உடல், மனம் முழுவதையும் பிட்சையாக கொடு". எனக் கூறினார்.

நான்: இந்த பிச்சையை அளித்துவிட்டு பின்னர் என் தந்தையிடம் தெரிவிக்கிறேன்.
பாபா: உன் தந்தையை கலந்தாலோசிக்காமல் நீ எப்படி இதை செய்வாய்?
நான்: என் வாழ்க்கையின் அதிகாரி நானே. என் தந்தைக்கு இதர புத்திரர்கள் இருக்கிறார்கள்; அவர் ஆட்சேபிக்கமாட்டார். குழந்தைகளை அளித்தவர் தாங்களே; ஆகவே என்னை தங்களுக்கு அர்ப்பணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்களில் தாங்கி தமது சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப் பெற்றேன். விழித்தெழுந்தபோது, நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்; என் மனது உதாசீனம் அல்லது வைராக்கியம் (பற்றின்மை) பெற்றது. முன்புபோல் இப்போது பொருட்கள் என் மனதைக் கவரவோ ஆட்கொள்ளவோ இல்லை. இரண்டு மூன்று மாதங்களில், அதாவது 1928ம் ஆண்டு பங்குனியில் எனக்கு பண்டரிபுரத்தில் ஒரு மகன் பிறந்தான். பதினைந்து மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையும் நானும் ஷீரடிக்குச்  சென்றபோது என் தந்தை எனக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்க அருள்செய்ய வேண்டும் என பாபாவிடம் பிராத்தித்தார். 1931ல் எனக்கு இன்னுமொரு மகன் பிறந்தான்; அவனுக்கு சாயிதாஸ் என பெயர் சுட்டினேன். பிறந்த இரண்டாவது தினத்தில் அவனுக்கு அதிக காய்ச்சல் கண்டது. பாபாவின் ஊதியையும், தீர்த்தத்தையும் கொடுத்து ஒரு தாயத்தில் பாபாவின் துணிக்கந்தைகளிலிருந்து எடுத்த ஒரு துண்டை வைத்து அந்த தாயத்தை குழந்தைக்கு அணிவித்தோம். குழந்தை குணமடைந்தது. ஒரு வயது நிரம்பியவுடன் குழந்தையை ஷிர்டிக்கு எடுத்துச் சென்றோம்.

என் சிறு வயதில், சுமார் ஏழு வயதானபோது, ஷீரடிக்கு சென்ற நான் பாபாவின் பாதத்தை பிடித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே வந்திருந்த குழந்தைகள் யாவருக்கும் பாபா இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார். என் கவனம் இனிப்புகள் மீது திரும்பி பாத சேவையில் சிரத்தை குறைந்தது. என் அருகில் இருந்த என் தாய் "இனிப்புகளை நினைத்துக்கொண்டு பாபாவின் தொண்டை மறந்துவிட்டாயா?" எனக் கூறி என்னை அடித்துவிட்டாள். "ஏன் அம்மா பையனை அடிக்கிறாய்?" எனக் கத்தினார் பாபா. பாபாவுக்கு பணிவிடை செய்வதில் நல்ல ஆவல் எனக்கு உண்டாக அருள்புரிய வேண்டுமென பாபாவிடம் பிராத்தித்தாள். "சிறுவன் எனக்கு சிறப்பாக பணிபுரிவான். மனதில் தூய்மையான ஆசைகள் எழ ஆண்டவன் அருள்புரிவார். அஞ்சவேண்டாம்! அவனை அடிக்காதே!" என பாபா மொழிந்தார். எனக்கு பன்னிரண்டு வயதான போது, எனக்கு மூத்தவனான மாற்றுச்சகோதரன் ஒருவனுடன் நான் ஷிர்டிக்குச் சென்றேன். எங்களிடம் 100 ருபாய் இருந்தது. பாபா தட்சிணையாக கேட்டார். முதலில் ரூ. 10 பின்னர் ரூ.15 இப்படியாக கேட்டு என் சகோதரன் சட்டைப் பையில் ரூ.25 மட்டுமே எஞ்சியிருந்தது. உடனே பாபாவுக்கு மேலும் கொடுப்பதற்காகவும், எங்கள் திரும்பும் பயணச் செலவுக்காகவும் தேவையான பணம் அனுப்பும்படி அகமத் நகரிலுள்ள எங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதினோம். அன்று மாலை பாபா என் சகோதரனிடம் ரூ.25 தரும்படி கேட்டார். அவன் "கொண்டுவந்த பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் ஊருக்கு திரும்பிச்செல்லவே பணம் தேவை" என பதிலளித்தான். பாபா உடனே பதிலடி கொடுத்தார்! "ஏன் இந்த பொய்ப் பேச்சு! உன் பையின் மூலையில் ரூ.25 இருக்கிறது. நீ ஊருக்கு எழுதியுள்ளபடி நாளை மணியார்டர் மூலம் பணம் வந்துவிடும். கவலை வேண்டாம்!" என் சகோதரன் உடனே ரூ.25 அளித்துவிட்டான்.

"எனக்கு ஒன்று அளிப்பவருக்கு, நான் இரண்டு அளிப்பேன். இரண்டு அளிப்பவருக்கு ஐந்து, ஐந்து அளிப்பவருக்கு பத்து கொடுப்பேன்" என பாபா சொல்வது வழக்கம். ஒருவன் பகவானுக்கு அளிப்பதை அவர் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறார் எனும் வெளிப்படையான பொருளைத்தவிர, ஒரு கூடகமான (மறைந்து நிற்கும்) பொருளும் இதில் அடங்கியுள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 22, 2020

உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 21, 2020

மண்ணிறங்கி வந்த தெய்வம் பாபா !
மண்ணிறங்கி வந்த தெய்வம் பாபா !


ஒரேயொரு நபருக்கு கூட பாபா யார் என்றோ,  அவரது நிஜப்பெயர்தான் என்னவென்றோ தெரியாத நிலையில் உலகமே அவரை புகழ்ந்து பாடி, ஷீரடி நோக்கி பக்தி செலுத்தி வருகிறது என்றால் அதுதான் அதிசயத்திலும் அதிசயம் என்பதாகும்.

சூன்யத்திலிருந்து தானாய் ஷீரடிக்கு வந்தார் பாபா.  குதிரை தேடி வந்த சாந்த்பாடீலுக்கு உதவி செய்து,  அதனாலேயே அந்த குக்கிராமத்தை தன் வாழ்நாள் முழுவதுக்குமான இருப்பிடமாகக் கொண்டு,  ஏழை எளியவர் பணக்காரர் வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் உபகாரங்கள் தந்து,   பிரதி உபகாரமாக அனைவரது அன்பினையும் பக்தியையும் நம்பிக்கையையும்  நன்மதிப்பையும் விசுவாசத்தையும் மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளார்.

ஒருவரின் அடி மனது எண்ணங்களைக் கூட அறிந்து கொள்பவராய் இருந்துள்ளார் பாபா. அதன்படி அவரது உள்ளத் தேவையை பூர்த்திசெய்து வைத்துள்ளார். அனைவருக்கும் உளவசதியை உண்டு பண்ணி தந்திருக்கிறார்.

மண்ணில் கடவுள் வந்தால் எப்படி இருக்கும் என நாமெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஊகத்தை அவர் நிறைவு செய்து நிரூபணம்  செய்துள்ளார்.

( G.S. கபார்தே எனும் பாபாவின் பக்தர் கூறியதிலிருந்து...)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 20, 2020

வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன
குருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ;
மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன;
துன்பமெல்லாம் இன்பமாகிறது ! 
எந்நேரமும் ஸத்குருவின் பாதங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விடுபடுகின்றன ;
வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன;

- ஸ்ரீமத் ஸாயிராமாயணம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 19, 2020

துன்பம் ஒரு முடிவை அடைகிறது


Image may contain: 1 person, possible text that says 'This photograph of #Shirdi #Saibaba is in in Vishnu Pant Pitale's Home. Baba hugged this photograph before giving it Vishnu Pant Pitale.'

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி படிகளின் மேல் காலடி எடுத்து வைத்த மறு நிமிடமே அவர்கள் துன்பம் ஒரு முடிவை அடைகிறது. 
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 7, 2020

இறந்தவளைப் பிழைப்பித்தது

sai baba hd pic க்கான பட முடிவு

D.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 6, 2020

குருவின் கிருபை

sai baba hd pic க்கான பட முடிவு

குருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ;
மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன;
துன்பமெல்லாம் இன்பமாகிறது ! 
எந்நேரமும் ஸத்குருவின் பாதங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விடுபடுகின்றன ;
வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன;

- ஸ்ரீமத் ஸாயிராமாயணம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு

sai baba hd pic க்கான பட முடிவு

'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு  கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 4, 2020

குருவிடம் பரிபூரணமான சரணாகதி"ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதைவிடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வதைவிடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் ஸமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது."

 தம்முடைய அஹங்காரத்தை முழுமையுமாக அழித்துவிடவேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக்கூடிய தைரியம் இருப்பவரும் (தீர்மானத்தின்படி செயல்பட்டு) அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப்பிடிப்பவரும் அபூர்வமானவரே !

இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர், அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.
 அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர், அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 3, 2020

எல்லாப் பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள்மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து இறைவனைக் கூவி அழைக்கிறான். 

கெடுசெயல்களைத் தங்குதடையின்றித் தொடரும்வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும் முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன், அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.

உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே. 

புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார். 

இதன் பிறகு புலனின்ப ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறான் !   குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன. 

ஞானிகள் அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர். 

ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 2, 2020

பாபாவே தெய்வம்கண்டேபா கோவில் பூசாரியும் பாபாவின் மிக நெருங்கிய பக்தருமான மஹல்சபாதியின் மகன் ஸ்ரீமார்த்தாண்ட் என்பவர் ஒருநாள் கண்டேபா கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அப்போது பாபா அங்கே வர மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணங்கினார்.

பாபா கண்டேபா கோவிலுக்குள் போவதை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென பாபா கண்டேபா சுவாமியின் விக்ரஹத்துக்குள் ஊடுறுவி விட்டார்.  மார்த்தாண்ட் விரைந்து சென்று விக்ரஹத்துக்கு முன்னாலும் பின்னாலும் பாபாவைத் தேடினார்.  ஆனால் பாபா அங்கே இல்லை.

'கோவிலுக்குள் வந்த பாபா எங்கே சென்றார்!'  என்று மார்த்தாண்ட் பிரம்மித்து நிற்கையிலே,  பாபா மீண்டும் கண்டேபா விக்ரஹத்தின் உள்ளிருந்து வெளிப்பட்டு மார்த்தாண்டை  புன்சிரிப்புடன் நோக்கிவிட்டு  கோவிலின் வெளியே சென்றார்.

அதுநாள்முதல் மார்த்தாண்ட், "பாபாவே தெய்வம் !" என்பதை புரிந்துகொண்டார்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

SAI SATCHARITHRA PARAYAN 2020/ ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணம் 2020


🙏 ஜெய் சாய்ராம் 🙏


அன்பார்ந்த சாய் பக்தர்களுக்கு...

நமது www.shirdisaibabasayings.com ன் ஷிர்டி சாய்பாபா வாட்ஸ்அப் குரூப்பில் வரும் புத்தாண்டு 2020 ஐ பாபாவின் பரிபூரண ஆசீர்வாதங்களுடன் வரவேற்கும் பொருட்டு,  "ஸ்ரீ ஸாயி சத்சரித்திரம் வருடம் முழுவதும் பாராயணம்" என்ற நோக்கில் "வியாழக்கிழமை பாராயண ‌குரூப்" துவங்க உள்ளோம்.

அதாவது,

வரும் 2020 ம் வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் ஸ்ரீஸாயீ சத்சரித்திரத்திலிருந்து ஒரு அத்தியாயம் பாராயணம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்ரீஸாயீ சத்சரித்திரத்திரம் பாராயணம் பாராயண குரூப்பில் சேர விரும்பும் பக்தர்கள் கீழே உள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி குரூப்பில் சேர்ந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.


ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒவ்வொரு வியாழக்கிழமைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அத்தியாயங்கள் அட்டவணை தனியாக இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஸாயி சத்சரித்திரம் பாராயண குரூப்பில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அட்டவணைப்படி உள்ள அத்தியாயங்களை தவறாமல் பாராயணம் செய்து முடிக்க கேட்டுக் கொள்கிறோம்.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட அத்தியாயங்களை பாராயணம் செய்து முடித்தவுடன்,  பாராயணம் முடித்த விபரத்தை குரூப்பில் பதிவு செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்.

சாய் சத்சரித்திர பாராயண whatsapp Group'ல் இணைய கீழே உள்ள லிங்க்'ஐ கிளிக் செய்யவும்.
🙏ஜெய் சாய்ராம் 🙏http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 1, 2020

dont worry baba is always with you. happy new year 2020

                         

சாயி பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...