Monday, March 30, 2020

பாபாவின் பாதங்களை வழிபடுங்கள்மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து இறைவனைக் கூவி அழைக்கிறான். 

கெடுசெயல்களைத் தங்குதடையின்றித் தொடரும்வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும் முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன், அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.

உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே. 

புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார். 

இதன் பிறகு புலனின்ப ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறான் !   குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன. 

ஞானிகள் அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர். 

ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 29, 2020

நோயை தானே ஏற்றுக் கொண்ட சாய்பாபா


ஒரு சமயம் பக்தர் கபர்டேயின் மகன் ப்ளெக் நோயால் மோசமாய் தாக்கப்பட்டிருந்த போது சாய்பாபாவிடம் ஓடிப்போன திருமதி  கபர்டே, எப்படியாவது தனது மகனை அவர் காப்பற்றித் தந்துவிட வேண்டுமென மன்றாடியிருக்கிறார். அந்தப் பிளேக் நோயை  தானே ஏற்றுக் கொண்டு விட்டதாய் குறிப்பிட்ட சாய்பாபா, அந்நோய் ஏற்படுத்தித் தரவல்ல BUBOES எனும் அக்குள் வீக்கத்தையும் தம் உடம்பில் காட்டியிருக்கிறார் அவர். 
நெடுநாட்களாக தீராத கண் நோய் கொண்டிருந்த பூனாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, சாய்பாபாவிற்கு  எதிராய் வந்தமர்ந்த  ஒரு சம்பவத்தை எழுதிருக்கிறார்  கபர்டே. நோய்  கண்டு பொங்கிக் கொண்டிருந்த அக்கண்களை  சாய்பாபா ஒருமுறை சிறு  நோட்டம் விட, அதிலிருந்து கொட்டும் கண்ணீரும் நின்றது... வலியும் போனது. பதிலாக சாய்பாபாவின் நயனங்களில் கண்ணீர் பொங்கிப் பொங்கி ஊற்றுவதைக் கவனித்திருக்கிறாள் அவள். நோய் இங்கிருந்து அங்கு போய்விட்டதை அப்போது உணர்ந்தாள். உண்மை என்னவென்றால், தன்னை நம்பிய பக்தனை எந்த சூழ்நிலையிலும் பாபா காத்தருள்வார். எத்தகைய நோயின் பிடியிலிருந்தும் காப்பாற்றுவார். ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 24, 2020

பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது                        

எனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை. இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது. என்னை நம்பி என்பால் லயமாகும் பக்தனின் எல்லா காரியங்களையும் பொம்மலாட்டத்தைபோன்று நான் நின்று நடத்துகிறேன். என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கின்றேன். அவனை விழ விடவேமாட்டேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 23, 2020

வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அவைகள் உருகி ஓடிவிடும்

                         

                            saibaba udhiக்கான பட முடிவுகள்


பாபாவின் வியத்தகு லீலை; அம்ரோதியைச் சேர்ந்த திரு. தாதாசாஹேப் கபர்தேயின் மனைவி ஷீரடியில் தன் இளம் புதல்வனுடன் சில நாட்கள் தங்கியிருந்தாள். அப்போது அவள் புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரியதானது. தன் இளம் மகன் பிளேக்கால் பீடிக்கப்பட்டிருப்பதை அவள் பாபாவிடம் தெரிவித்தாள்.

பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அவைகள் உருகி ஓடிவிடும், எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார். இவ்வாறு கூறிக்கொண்டே தமது கப்னி உடையை இடுப்பு வரை தூக்கி அங்கு இருந்த அனைவருக்கும், நன்றாக முட்டை அளவிற்கு தோன்றியிருந்த பிளேக் கட்டிகளை காண்பித்து. "பாருங்கள், எனது பக்தர்களுக்காக நான் எங்ஙனம் கஷ்டப் படவேண்டியிருக்கிறது. அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார். - ஷிர்டி டயரி. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 12, 2020

ஷீரடியிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால் இருப்பினும்

   


என் பக்தன் ஷீரடியிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால் இருப்பினும், அவனுடைய உடலை விட்டுப் பிரிந்த கணமே அவனது ஆன்மா எம்மை வந்தடையும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

ஒரு ஆத்மாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டால், அதை ஒன்றன் பின் ஒன்றாகப் பல பிறவிகளிலும் தாம் பின் தொடர்வதாகவும், அவசியத்திற்கேற்ப அடிக்கடி தாமும் பிறவி எடுப்பதாகவும், அந்த ஆன்மா இறுதி இலக்கை, அதாவது பகவத்பாத மூலத்தை, அடையும்வரை கவனிப்பதாகவும் பாபா கூறுகிறார். கடந்த கால பாவச் செயல்களுக்காக யமனும், யம தூதர்களும் அளிக்கும் தண்டனைகளின் கொடுமையும் தமது பக்தர்களை அச்சுறுத்தாது என்கிறார் அவர். சாயியின் பிரபாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும்; யமனும் பாசத்துடன் கூடிய அவனது கிங்கரர்களும் கனவில் கூட அவர்களை நெருங்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய கர்மவினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன ( சாயி தியானத்தின் மூலம் ).

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...