Thursday, April 30, 2020

நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்

sai baba paintings – Page 6 – saiartgallery

"என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."


மகல்சாபதி, எப்பொழுதும் பாபாவின் அண்மையிலேயே இருந்த பக்தர். மசூதியிலும், சாவடியிலும் ஒரு நாள் விட்டு மறுநாள் என மாறி மாறி பாபா இரவுகளைக் கழிப்பார்; இரண்டு இடங்களுக்குமே மகல்சாபதி பாபாவுடன் சென்று அவருடனேயே உறங்குவார். சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகல்சாபதி, சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரை சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.
தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகல்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

ஒருசமயம், ஹம்ஸராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர், மகல்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். ஆனால், "சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மிகப்பணிவாக பணத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார்.ஆகவே ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மகல்சாபதியை ஒரு பைசாவைக்கூடத் தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்" என்று...

அனுதினமும் பாபா, ஒருவருக்கு ரூ.15, மேலும் ஒருவருக்கு ரூ.10 என அளித்துவந்தார். பல முறைகள் பாபா மகல்சாபதியிடம், "இந்த மூன்று ரூபாயைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு பெற்றுக் கொண்டேயிருங்கள். நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். ஆனால்  எப்போதுமே மகல்சாபதி மறுத்து வந்தார். அவருடைய பதில் இதுதான்; "எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் தங்கள் பாதங்களுக்கு பூஜை செய்வது ஒன்றையே விரும்புகிறேன்." தானங்கள் பெறுவதைத் தவிர்த்து, கிடைத்ததை வைத்து திருப்தியடைவதை லௌகீகமான செல்வத்தைப் பெறுவதையும் தக்கவைத்துக் கொள்வதையும் விட உயர்வானதாகக் கருதினார்.
 * ஜெய் சாய்ராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 29, 2020

தேவையானவற்றை நான் வழங்குவேன்

Hd Wallpaper Sai Baba - HD Wallpaper For Desktop Background ...

உனக்கும் உன் குடும்பத்துக்கும் தேவையானவற்றை நான் வழங்குவேன்  -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 
( தனது வேலையை விட்டுவிட்டு, சொத்தோ வருமானமோ எதுவுமில்லாததால் நானும் என் மனைவியும் தெருவில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று முறையிட்ட பக்தரான தாஸ்கணுவிற்கு பாபாவின் பதில். பாபா மீது அசராத நம்பிக்கை வைக்கும் எந்த ஒரு மனிதருக்கும் பாபாவின் இந்த உறுதிமொழி பொருந்தும்).


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 28, 2020

காமத்தைக் கட்டுப் படுத்தவும்

Wallpics Shirdi Saibaba Wallpapers Glossy Photo Paper Poster for ...

காமத்தைக்  கட்டுப் படுத்தவும் - உன் மனைவியிடம் உள்ள காமத்தை ஓர் அளவிற்குள் அடக்கி வை. பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே. இல்லற இன்பம் தோஷமில்லை. ஆனால் அதில் அடிமையாகக் கூடாது. காமத்தில் மூழ்கி இருப்பவருக்கு முக்தி கிடைக்காது. காமம் உள்ளத்தின் சமநிலையையும், பலத்தையும், உறுதியையும் அழிக்கிறது. கற்றோரையும் கசக்கிவிடும். கட்டுக்கடங்காத காளைகளை அவை இங்குமங்கும் போவதற்கு இடைஞ்சலாக கழுத்தில் ஒரு கட்டையை கட்டி  அடக்கி வைக்கின்றனர். விவேகம், (சிந்தித்தல், சீர்தூக்கிப் பார்த்தல்)  என்பதை பாலுணர்வால்   கவரப்படும்போது மனதுடன் பிணைத்துக் கட்டி  விட வேண்டும். ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். அவைகளை நீங்களே வெல்ல வேண்டும்,  அல்லது அவற்றுக்கு அடிமையாகக் கூடாது.  பாலுணர்வும் (காமமும்) கோபமும் (குரோதமும்) ஒரு மனிதனை கீழே இழுத்துக் கொண்டிருக்கும் வரை அவனுக்கு சாந்தி மன அமைதி இருக்காது.  உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ளக்கூடிய புத்தி அல்லது பூரண சாத்வீக அறிவு,  தன்னை யார் என்று அறிந்து கொள்ளும் ஞானம் இராது. ஆகவே அவை ஆன்மிக முன்னேற்றத்திற்கு தடைகள் ஆகும். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 27, 2020

மரணம் நேராது

Images :Shirdi Sainath Yatra | 08048032804 in Chennai

தமது பக்தர்கள் விஷயத்தில் எந்த ஒரு இடத்திலும், எங்கும், எந்த ஒரு நேரத்திலும் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும் பாபா அறிவார்.

 நானா சந்தோர்க்கருக்கு   இறந்துவிடக் கூடிய ஒரு ஆபத்து நிகழ்ந்தபோது பாபா, 'நானா சாக விருக்கிறார், ஆனால் நான் அவரை சக விடுவேனா?'  எனக் கூறினார்.  நானாவும் லேலே சாஸ்திரியும் அமர்ந்து பயணம் செய்த டோங்கா வண்டி குடை சாய்ந்தது. அவர்களுக்கு நேரவிருக்கும் பெரும் ஆபத்தை அறிந்த பாபா,  'நான்கு,  நான்கு கைகளையும் (கண்ணுக்கு புலப்படாமல்) நீட்டி காப்பது'  என்ற தமது காக்கும் சக்தியை உபயோகித்தார். நானா சாவிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
 நந்தா ராம் மார்வாடி வீட்டிலிருந்து பாபா ரொட்டி பிக்ஷை பெறுவார்.  சீரடியில் தீவிரமாக பரவியிருந்த பிளேக் நோயால் பீடிக்கப்பட்டு சீரடியை  விட்டே  ஓடிச்  சென்று விட அவர் நினைத்த போது,  அவர் இறக்க மாட்டார் எனவும் எதுவாயினும் தமது உடலே  அழிந்து போகும் வரை அவரை சாகவிட போவதில்லை எனவும் அறிவித்தார். நந்த ராம் மார்வாடி மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டு  நீண்ட காலம் வாழ்ந்தார்.  
பூடியிடம்  ஜோதிடர் அவருக்கு ஒரு கண்டம் அதாவது மரண அபாயம் இருப்பதாக கூறியபோது, பாபா 'என்ன! உம்மை மரணம் தாக்கும் என அவர் கூறுகிறாரா?. தாக்கு,  நீ எப்படி தாக்குவாய், கொல்லுவாய் என நான் பார்க்கிறேன்!' என்று கூறினார். பிற்பாடு அன்று பூடி  அருகில் ஒரு பாம்பு வந்தது; அது அவரைத்  தீண்டவில்லை, கொல்லவில்லை.  ஒருவருக்கு மரணம் நேராது என சொல்லக்கூடிய சக்தி நிச்சயமாக தெய்வத்துடையதாகத்  தான் இருக்க முடியும். இவ்வாறாக பாபாவின் சக்திகள் தெய்வத்தின்  சக்திகள் என்பதை காணலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 25, 2020

SHIRDI SAI BABA LIFE STORY IN SHORT

SHIRDI SAI BABA LIFE STORY IN SHORT

shirdi sai baba life story
There is an interesting story of one of Baba’s many miracles. Chandpatil was once riding through the forest when suddenly he felt an acute urge to smoke. To his great dismay he found that he did not have the wherewithal to ignite a fire to light his Chelum with. Seeing Sai Baba seated under a tree, the rider approached him for a match. Baba had no matches, but just for thrusting the tongs nearly, he produced a flame. The rider witnessing the miracle, realizes and recongnises Baba’s divinestature and kneels to the Saint in humble gratitude.Sai baba life story
Within a very short time of Sai Baba’s arrival at Shirdi, the Mahalsapati  pointing at him and said  ‘Aao Sai’ . These simple folk also hailed him as an Avatar of the age. Thus, in a moment was resurrected the immortal Saint of Shirdi – Shri Sai Baba, the great apostle of love.shirdi sai baba life story
The hunger of a Guru’s heart for the love of his bhaktas is not sufficiently recognized. Here is one such instance of a devotee’s burning love for the master. Baijabai daily sought out Baba in the forest where he lived in the early days, in order to bring him food which she lovingly prepared for him. Baba raises his hand in a gesture of blessing and his eyes light up with gratitude. The Guru has his needs and longings too, and this is an alluring facet of the Guru Bhakta relationship.


Sai baba life story
In the very beginning, Sai Baba was in the habit of going to a few houses in the neighbourhood to beg for food. At times Baba would scold a grudging housewife by saying –“Mother you have so many Chapaties, so much rice and this or that vegetable in your pots, why refuse a bit of food to a fakir”! This gentle chastisement and the accuracy of the strange fakir’s prouncement would remove the veil of maya from these women who would then rush to put their all at his feet, as an as an offering of love.shirdi sai baba life story
Sai Baba often cooked a hotch-potch of vegetables, rice and spices all mixed together in this ‘magic’ earthern pot. The food that Baba made seemed to grow in abudncance and there was always enough for everyone. Verily, the touch of a sat-purusha unlocks the storehouse of the Goddess Annapoorna’s unlimited resources.


Sai baba life story
Sai Baba abandons himself to the mood of divine ecstasy through music. Like the lord of dancers Nataraja, Baba too loses himself in the Cosmic dance, symbolizing the primal rhythmic energy of life.shirdi sai baba life story
Baba explaining GeetaSai baba life story
Sai Baba Darbar in Dwarakamaishirdi sai baba life story
“They that are whole need not a physician, but they that are sick” Sai Baba’s profound love and compassion for suffering humanity are manifested here, as he gently tends a lepers sores.Sai baba life story
Sai Baba distributing the holy ‘udhi’ – the panacea for all troubles – to his bhaktas. ‘Udhi’ is the ash that drops from the holy fire kindled by Baba a hundred years ago. The great master was wont to use this ash for healing the sick, thus investing the udhi with great power by this gesture. Even now the sick and the unhappy alike are healed if they take this divine medicine with faith.shirdi sai baba life story
Shri Sai Baba was very found of children. He used to spend part of his day in playing, chit chatting or humouring with them.Sai baba life story
Sai Baba is going inprocession from the Dwarka Mayee to the Chavadi, according by this veteran devotees, Bhaktas thus escorted Baba to his destination with all the ceremonial honours due to a king – for, was he not in fact the king of kings?
Sai baba life story
The Saint of Shirdi had ‘green’ fingers, for all that he sowed and planted would blossom forth into fruit and flower. Here the divine gardener is seen tending and watering the plants in the Lendi Gardens.shirdi sai baba life story
Service is te badge of God’s kingdom. Radha Krishna Mai, a lady of good family voluntarily assumed the duty of sweeping the ashram compound daily. This was her way of showing her adoration for her Master Sai Baba.Sai baba life story
The 15th of October 1918 was a sorrowful and fateful day for the little village of Shirdi, for in the heavy hours of the noon, the beloved Master suddenly breathed his last. Quietly and unobtrusively, Baba, gave up his body, and let his head fall gently on the shoulders of a near disciple. The great “Avtar’s” glorious period of Messiahship, his self attotted labour of love, came to an abrupt end. All the magic light seemed to have died out that erstwhile had given to thousands of seekers courage and hpe and inspiration in a moment all the chambers of the ashram seemed emptied of delight and a stranger desolation filled each heart. But not for long for, resurrection ever keeps pace with and outlives the foreces of death and destruction. The great Avtar of Love and Compassion gave up his body so that his spirit may be resurrected in the hearts of thousands of his ever growing bhaktas.shirdi sai baba life story
Shri Sai Baba of Shirdi descended on the earth to lead mankind to the realm of eternity. As the divine mother He gave his immense love and as the divine father He gave direction to our search for truth. His mission was to make people conscious of their divine nature. The people who follow His teachings and preaching are indeed blessed souls.

                       Sai baba life story

Saibaba touched photo and we can see this in Museam

Saibaba cardinal principles of Sai Path are 'Shraddha' and 'Saburi'. Sai Baba explicitly asked for these two qualities in His devotees by giving his self-experiential instance that his 'Murshid' or Master asked from him only two pice - one Shraddha(Faith) and other the Saburi(Patience).

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 24, 2020

வேண்டியதை பாபா செய்வார்

aboutus main

எப்போதெல்லாம் கஷ்டங்களை சமாளிக்கவேண்டி இருக்கிறதோ, அப்போதெல்லாம் பாபாவின் முன் நின்றாலோ, உட்கார்ந்தாலோ  போதும்.  ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியமில்லை . தமது குழந்தைகளின் உள்ளங்களில் இருப்பதை  அப்போதைக்கப்போதே பாபா அறிவார், வேண்டியதை  அவரே செய்து விடுவார். 

 ஒருசமயம் பாபாவின் பக்தையான தாராபாயின்  கண்களில் உபாதை.
 அவர் பாபாவின் முன் சென்று அமர்ந்தார். கண்களில் வலி.  நீர் பெருகிக் கொண்டிருந்தது. பாபா அவரை உற்று நோக்கினார். அவருடைய கண்வலி பறந்தது. நீர் வடிவது நின்றது. ஆனால் பாபாவின் கண்களிலிருந்து நீர் வந்து கொண்டிருந்தது.  மருத்துவர்களுக்கு வியாதிக்கு சரியான காரணம் என்னவென்பதை கண்டுபிடிக்க அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். ஆனால் பாபாவைப் பொறுத்தவரை நோயின் காரணத்தை கண்டுபிடித்தல்,  நோய்க்கு சிகிச்சை எல்லாமே அக்கணமே நிகழ்கின்றன.  ஆழப்பதிந்துவிட்ட சரீர உபாதை கணத்தில்  திடிரென நிவர்த்திக்கப்படுகிறது. அவரிடமிருந்து பாபா தமக்கு நோயை தரிவித்துக் கொள்வது, அதுவும் சங்கல்ப சக்தியினால் மட்டுமே, பிரமிக்கத்தக்கது. அசாதாரணமான ஒன்று. யார்தான் வியாதியை தன்னிடம் வரவழைத்துக் கொள்ள விரும்புவார்? பாபாவை போன்ற சமர்த்த சதகுருவால் மட்டுமே சாத்தியம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 23, 2020

பாபாவின் துணையிருக்க பயமேன் ?

               Sai Baba's Udi - Cure of all Incurables | Shirdi Sai Baba Life ...

பாபாவை தரிசிக்க வந்த அப்துல் ரங்காரி  பாபாவிடம் அனுமதி பெறாமல் சீரடியை  விட்டு கிளம்பிச் சென்றார் அவதிக்குள்ளானார்.  பாபாவின் அனுமதி பெறாமல் சென்ற எவரும் சௌக்கியமாக சென்றதில்லை. நள்ளிரவில் சீரடியை  விட்டு ரயில்வே ஸ்டேஷன் போகும் போது வெகு தூரம் சென்றவுடன் வண்டி சாலையிலே பழுதடைந்துவிட்டது.  துணை ஏதுமே  இல்லாமல் அப்துல் ரங்காரி,  அவர் மனைவி குழந்தைகள் யாரும் நடுத்தெருவில் நிற்க வேண்டியதாயிற்று. ஆனால் உண்மையில் துணையற்றவரா  அவர்? பாபாவின் அதிமானுட திருஷ்டியும் அதிமானுட நேசமும்  அவர் மீது இருந்தது.  சீரடியில் தமது வாசஸ்தலத்தில் இருந்தவாறே  தமது வியத்தகு  சக்திகளால் நடந்தது முழுவதையும் பாபா அறிந்தார். அவர் அந்த சாலையில் ஒரு ஜட்காவாலாவை அனுப்பி அவனை தானாவாலா, தானாவாலா என உரக்கக் கத்தும்படி கூறினார் ஏனெனில்  தானாவாலா சென்ற வண்டி பழுதாகி நள்ளிரவில் அவரை நடுத்தெருவில் நிற்கும் படி செய்து விட்டது. டோங்காவாலா,  தானாவாலா தானாவாலா எனக் கூறிக்கொண்டே ரங்காரி இருந்த இடத்திற்கே சென்று அவரிடம் பாபாவின் உத்தரவை தெரிவித்தான் பாபாவின் அபார ஞானம், நேயம் ஆகியவற்றை கண்ட ரங்காரி ஆச்சர்யத்தில் மூழ்கினார் அதிசயத்தக்க வகையில் பாபாவால் கனிவுடன்  அனுப்பப்பட்ட வண்டியில் ஏறிக்கொண்டு அவர் பாபாவிடம் திரும்பினார். பாபா அவரை எதிர்நோக்கிக் காத்திருந்தார். இந்த அதிசயமானபிரேமையும்  துணைபுரிதலையும் என்ன வென்பது !
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 22, 2020

பாபாவின் ஊதியம் தீர்த்தமுமே மருந்து

சீரடி சாயிபாபா மூட்டிய நெருப்பு ...

பாபாவின் பக்தரான  புரந்தரேக்கு  ஏராளமான பணக்  கஷ்டங்கள், அலுவலக தொந்தரவுகள்.  ஒவ்வொரு அவசர தேவையையும் எப்படி சந்திப்பது என அவருக்கு சுத்தமாக தெரியாது.  பாபா எல்லாவற்றையும் முன்னதாகவே அறிந்து கனவுகள் காட்சிகள் மூலமாக அவருக்கு முன்னெச்சரிக்கைகள் அளித்து கஷ்டங்களால்  சோர்ந்து விடாமல் அவற்றை சமாளிக்கச்  செய்துவிடுவார். ஒரு உதாரணம். ஷீரடியில் இருந்து புரந்தரே பம்பாயில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது அவருடைய மனைவி காலரா நோயால் பீடிக்கப்பட்டாள். அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுப் போக்கினால் அவள் முழுவதும் தளர்ந்து போய் விட்டால். அவளை பரிசோதித்த மருத்துவர் நாடித்துடிப்பு  குறைவாகவும் மூச்சுவிடுவது மெதுவாகவும் இருப்பதை கண்டார். ஆகவே அவர் நம்பிக்கை இழந்து சென்றுவிட்டார்.  ஆனால் புரந்தரே நம்பிக்கையையும் விசுவாசத்தையும் இழுக்கக் கூடியவர் அல்ல. தனது தெய்வம் சீரடி சாயி என்பதை அவர் அறிவார்.  பரிபூரணமான விசுவாசத்துடன் சென்ற அவர் தன் வீட்டிற்கு அருகில் இருந்த மாருதி ஆலயத்திற்கு முன்பு   பாபா திடீரென நிற்பதையும்,  அஞ்சாதே அவளுக்கு ஊதியும் தீர்த்தமும் கொடு என்று சொல்லிவிட்டு மறைந்ததையும் கண்டார் . அவர் கைவசம் ஊதி இருந்தது.  சிறிதளவு தீர்த்தத்தில் அதை கலந்து குளிர்ந்த நீரை நோயாளிக்கு அளித்தார். மற்றவர்கள் பயந்து விட்டனர்.  இது நோயை கடுமையாக்கி விடக்கூடும். அவர் இதை செய்தது தவறு என எண்ணினார்கள்.  ஆனால் பாபாவிடம் புரந்தரேக்கு இருந்த நம்பிக்கை அசைக்க முடியாதது. அவர் ஊதி கலந்த நீரை கொடுத்தார். விளைவு என்ன? ஒரு மணி நேரத்தில் அந்த மாது நீர் முழுவதையும் பருகினார்.  சிறிது நேரம்  பொருத்து மூச்சு பலமாக வர தொடங்கியது . அவளுடைய உடல் சூடும் திரும்பவும் வர தொடங்கியது முகம் நன்றாக தெளிவடைந்தது பின்னர் மருத்துவர் வந்தபோது குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் நோயாளி குணம் அடைவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். அவளுக்கு கொடுக்கப்பட்ட மருந்து என்ன என அவர் கேட்டார். ஊதியம் தீர்த்தமும் மட்டுமே என்பது புரந்தரேயின் பதில். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...