
தமது பக்தர்கள் விஷயத்தில் எந்த ஒரு இடத்திலும், எங்கும், எந்த ஒரு நேரத்திலும் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும் பாபா அறிவார்.
நானா சந்தோர்க்கருக்கு இறந்துவிடக் கூடிய ஒரு ஆபத்து நிகழ்ந்தபோது பாபா, 'நானா சாக விருக்கிறார், ஆனால் நான் அவரை சக விடுவேனா?' எனக் கூறினார். நானாவும் லேலே சாஸ்திரியும் அமர்ந்து பயணம் செய்த டோங்கா வண்டி குடை சாய்ந்தது. அவர்களுக்கு நேரவிருக்கும் பெரும் ஆபத்தை அறிந்த பாபா, 'நான்கு, நான்கு கைகளையும் (கண்ணுக்கு புலப்படாமல்) நீட்டி காப்பது' என்ற தமது காக்கும் சக்தியை உபயோகித்தார். நானா சாவிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
நந்தா ராம் மார்வாடி வீட்டிலிருந்து பாபா ரொட்டி பிக்ஷை பெறுவார். சீரடியில் தீவிரமாக பரவியிருந்த பிளேக் நோயால் பீடிக்கப்பட்டு சீரடியை விட்டே ஓடிச் சென்று விட அவர் நினைத்த போது, அவர் இறக்க மாட்டார் எனவும் எதுவாயினும் தமது உடலே அழிந்து போகும் வரை அவரை சாகவிட போவதில்லை எனவும் அறிவித்தார். நந்த ராம் மார்வாடி மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டு நீண்ட காலம் வாழ்ந்தார்.
பூடியிடம் ஜோதிடர் அவருக்கு ஒரு கண்டம் அதாவது மரண அபாயம் இருப்பதாக கூறியபோது, பாபா 'என்ன! உம்மை மரணம் தாக்கும் என அவர் கூறுகிறாரா?. தாக்கு, நீ எப்படி தாக்குவாய், கொல்லுவாய் என நான் பார்க்கிறேன்!' என்று கூறினார். பிற்பாடு அன்று பூடி அருகில் ஒரு பாம்பு வந்தது; அது அவரைத் தீண்டவில்லை, கொல்லவில்லை. ஒருவருக்கு மரணம் நேராது என சொல்லக்கூடிய சக்தி நிச்சயமாக தெய்வத்துடையதாகத் தான் இருக்க முடியும். இவ்வாறாக பாபாவின் சக்திகள் தெய்வத்தின் சக்திகள் என்பதை காணலாம்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil