
காமத்தைக் கட்டுப் படுத்தவும் - உன் மனைவியிடம் உள்ள காமத்தை ஓர் அளவிற்குள் அடக்கி வை. பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே. இல்லற இன்பம் தோஷமில்லை. ஆனால் அதில் அடிமையாகக் கூடாது. காமத்தில் மூழ்கி இருப்பவருக்கு முக்தி கிடைக்காது. காமம் உள்ளத்தின் சமநிலையையும், பலத்தையும், உறுதியையும் அழிக்கிறது. கற்றோரையும் கசக்கிவிடும். கட்டுக்கடங்காத காளைகளை அவை இங்குமங்கும் போவதற்கு இடைஞ்சலாக கழுத்தில் ஒரு கட்டையை கட்டி அடக்கி வைக்கின்றனர். விவேகம், (சிந்தித்தல், சீர்தூக்கிப் பார்த்தல்) என்பதை பாலுணர்வால் கவரப்படும்போது மனதுடன் பிணைத்துக் கட்டி விட வேண்டும். ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். அவைகளை நீங்களே வெல்ல வேண்டும், அல்லது அவற்றுக்கு அடிமையாகக் கூடாது. பாலுணர்வும் (காமமும்) கோபமும் (குரோதமும்) ஒரு மனிதனை கீழே இழுத்துக் கொண்டிருக்கும் வரை அவனுக்கு சாந்தி மன அமைதி இருக்காது. உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ளக்கூடிய புத்தி அல்லது பூரண சாத்வீக அறிவு, தன்னை யார் என்று அறிந்து கொள்ளும் ஞானம் இராது. ஆகவே அவை ஆன்மிக முன்னேற்றத்திற்கு தடைகள் ஆகும். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil