பரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான் ; ஆனால் இறைவனின் அருள் ஒன்றே அவனை ஸாயீயின் பாதங்களுக்கு கொண்டுவருகிறது !
ஸாயீயினுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்துகொள்ள முடியாதவை ; அவற்றைப் பற்றிய பூரணமான ஞானத்தை அடையவே முடியாது ! ஸாயீ லீலைகளின் ஒரு பகுதியையாவது அறிந்து கொள்ள முடிந்த மனிதன் மஹாபாக்கியசாலி !
கோடிப்புண்ணியம் செய்தும், மஹா பாக்கியங்களாலும் இம்மனிதப்பிறவி கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்த நல்வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை இறுகப்பற்றிக் கொள்ளவேண்டும்.
பகீரதப் பிரயத்தனம் (கடுமையான தவம் ) செய்தாலும் மனிதப்பிறவியை அடையமுடியாது. அது விதிவசமாக கிடைக்கும் அதிர்ஷ்டமே ! வீணாகக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடாதீர்கள் !
மனிதவாழ்வின் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் பாபாவின் பக்தியில் முற்றிலும் மூழ்குங்கள் ! அசையாத நம்பிக்கை, திடமான விசுவாசம், உறுதியான பக்தி இந்த மூன்றினால் மட்டுமே ஸாயீயின் பரிபூரண அனுபவம் கிட்டும், கேட்காமலேயே கிட்டும். அது பக்தனின் வாழ்வில் கிடைக்கும் ஒரு அற்புதம் !
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil