
யாருக்கு எதன் மீது பற்று அதிகமோ அதன் மீது முழு கவனமும் இருக்கும். லோபி ஏதோ ஓரிடத்தில் தான் மறைத்து வைத்திருக்கும் பொருளைப் பற்றியே இரவும், பகலும் மனதில் அசை போட்டுக்கொண்டிருப்பான். காதலன் காதலியைப் பற்றியும், காதலி காதலனையும் சதா நினைத்துக்கொண்டே இருப்பார்கள். இதே போலத்தான் சாயியை எப்போதும் மனதில் அதே ஏக்கத்தோடும், தவிப்போடும் தேடும் மன நிலை நமக்கு வரவேண்டும். இமைப் பொழுதும் மறந்தறியேன் என்று சொல்லும் அளவுக்கு அவரை நினைவில் நிறுத்தும் வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil