
பாபா எல்லாருடைய இதயத்திலும் உறைகிறார்! இப்பிரபஞ்சத்தின் உள்ளேயும் வெளியேயும் எங்கும் செல்கிறார் ! இவ்வாறிருக்க தேவையில்லாமல் எதைப்பற்றியும் நாம் கவலைப்படுவது வீணன்றோ? பாபாவினுடைய உன்னதமான குணங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தால், மனம் சலனமற்று உறைந்து போகிறது ! எவ்வாறு வார்த்தைகள் அவரைப் பற்றி விவரிக்க முடியும்? திடமான மௌனம்தான் ஒரே வழி ! மூக்கு மலரின் நறுமணத்தை முகர்கிறது ; தோல் குளிரையும் வெப்பத்தையும் உணர்கிறது ; கண்கள் அழகைப் பார்த்து ரசிக்கின்றது ; இவ்வாறு ஒவ்வொன்றும் தனக்கு வேண்டிய இன்பத்தை தேடிக் கொள்கிறதே தவிர, அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு விவரிக்க இயலாது. அதுபோலவே ஸாயீயின் அற்புதமான குணங்களை நம்மால் அனுபவிக்க முடியுமே தவிர விரிவாகச் சொல்லமுடியாது ! இயன்றவரை பாபாவின் பக்தியில் மூழ்கி, பலனை அனுபவிக்க வேண்டியது ஒன்றே பக்தர்களகிய நமது கடமை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil