Sunday, July 12, 2020

அற்புதமான ஸாயீ சத்சரித்திரம்


விசுவாசமுள்ள ஸாயீ பக்தர்களே ! மனமலங்களையெல்லாம் எரித்துவிடும் சக்தியுடைய அற்புதமான ஸாயீநாத சரித்திரத்தை முழு கவனத்துடன் கேளுங்கள். இச் சரித்திரம் கங்கை நீரைப் போன்று புண்ணியமானது; பவித்திரமானது; இஹத்திலும் பரத்திலும் ஸாதகங்களை அளிக்கக்கூடியது. இதைக் கேட்பவர்களின் காதுகள் எல்லாப் பேறுகளையும் பெற்றவை‌!

ஸாயீயின் சரித்திரத்தை தேவாமிருதத்திற்கு உபமானமாகச் சிலர் சொல்லலாம். ஆயினும் தேவாமிருதம் இவ்வளவு இனிக்குமா என்ன? அமிருதம் உயிரைத்தான் ரக்ஷிக்கும்; இச்சரித்திரமோ மேற்கொண்டு ஜனனமே இல்லாமல் செய்துவிடும் !
உயிருள்ள ஜீவன்கள் எல்லா சக்திகளும் தங்களுக்கு இருக்கின்றன என்று நினைக்கின்றன. தாம் நினைத்ததைச் செய்யமுடியும் என்று யாராவது நினைத்தால், அவர் ஸாயீயின் கதைகளைக் கேட்கவேண்டும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்

" நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நா...