திரு.மெஹரோத்ரா என்பவர் பரெய்லி பேங்கில் ஏஜண்டாகப் பணி புரிந்தார். அவருடைய போதாத காலம், திடீரென மேனேஜ்மென்ட் எடுத்த தவறான முடிவால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மனதால் விரக்தி அடைந்த மெஹரோத்ரா , வியாழக்கிழமை அன்று கல்கத்தா சாயி சமாஜத்தில் நடைபெற்ற பாபாவின் பூஜையில் கலந்துகொண்டார்.
அதன்பின் அங்கிருந்தே கிளம்பி ஷீரடிக்கும் சென்றார். சமாதி மந்திரிலும், துவாரகாமாயியிலும் பாபாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி , "பாபா ! நீங்கள் அந்தர்யாமி! உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை! என்னைக் காப்பாற்றுங்கள் ! எனக்கு வேறு ஏதாவது ஒரு வேலை கொடுத்து அருளுங்கள் !" என்று மனமுருகப் பிரார்த்தித்தார். அந்த இரண்டு நாட்களும் ஷீரடியிலேயே தங்கினார்.
மறுநாள் காலையில் அவர் தூங்கி எழுந்தபோது, அவரருகில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதில், "உன் பணி தொடரும் ! அஞ்சாதே!" என்று எழுதியிருந்தது. ஆச்சர்யத்துடன் அந்த துண்டு சீட்டை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு தன் சட்டைப் பையில் பத்திரமாக வைத்தார்.
அதன்படி அவர் ஊர் திரும்பியதும் தியோரியா என்ற இடத்தில் அவரை ஏஜண்டாக நியமிக்கப்பட்டடிருப்பதாக அதே கம்பெனியிலிருந்து தபால் வந்தது. அதைப் பார்த்ததும் மன நிறைவுடன் பாபாவுக்கு நன்றி கூறினார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil