குருவின் பாதங்களில் அமிழ்ந்துபோக விரும்புபவர்கள் குருவின் பெருமைகளைப் பாட வேண்டும், அல்லது குருவின் கதைகளைக் காலட்சேபம் செய்ய வேண்டும், அல்லது குருவின் கதைகளை பயபக்தியுடன் கேட்க வேண்டும்.
இவ்வாறு தினசரி நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, தற்செயலாக காதில் விழும் குருவின் கதையானது, தன்னுடைய சுபாவத்தினால் கேட்டவருக்கு பல நன்மைகளை அள்ளித்தரும். இதில் கேட்டவருடைய முயற்சி ஏதும் இல்லை ! ஆனால் பலனோ பவித்ரமானது.
குருவின் கதைகள் தற்செயலாக காதில் விழுந்தாலே பலன்கள் இப்படி இருக்கும்போது, பக்தி பாவத்துடன் கேட்கப்பட்டால் எவ்வளவு ஆன்மீக லாபம் கிடைக்கும் என்பதை, குருவின் கதைகளைக் கேட்பவர்களும், பாராயணம் செய்பவர்களும் அவர்களுடைய நன்மை கருதி சிந்திக்கவேண்டும்.
இந்த முறையிலே, குருவின் கதைகளைக் கேட்கக் கேட்க, மீண்டும் படிக்கப் படிக்க குருவின் திருவடிகளின் மேல் மிகுந்த பிரமை உண்டாகும். சாதகரின் வாழ்வில் படிப்படியாக மிக உயர்ந்த க்ஷேமமான நிலை விளையும். வேறு எவ்வகையான நியமமும் நிஷ்டையும் தேவையில்லை. வாழ்க்கையே பரம மங்களமானதாக மலரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil