ஸாயீமஹராஜ் தலைசிறந்த ஞானிகளுள், அவதாரங்களில் மணிமகுடமானவர் ; அளவிலா ஆன்மீகச் செல்வம் பெற்றவர்;
ஸாயீயைப் போன்ற ஞானிகள், பந்தங்களால் கட்டுப்பட்ட மனிதனை மோட்ச மார்க்கத்திற்கு (முமுக்ஷுவாக) மாற்றி , ஜனனமரணச் சுழலிலிருந்து விடுதலை அடைந்தவனாய் (முக்தனாக) ஏற்றமடையச் செய்கிறார்கள்.
வியாக்கியானங்கள் மற்றும் புராணங்கள் மூலமாக அடைய முடியாததை, ஸாயீயைப் போன்ற ஞானிகளின் பாதங்களை தரிசித்து சுலபமாக அடைந்துவிடலாம். அவர்களுடைய அங்க அசைவுகளும் நடத்தையும் மௌன உபதேசங்களாகும்.
மன்னிக்கும் குணம், சாந்தி, தனிமை, காருண்யம், பரோபகாரம், புலனடக்கம், அஹங்காரமின்மை ஆகிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் ஸாயீயைப் போன்ற அவதாரத்தைக் காண்பது அரிது.
புத்தகத்தைப் படித்து அறிந்துகொள்ள முடியாததையெல்லாம் ஸாயீயைப் போன்ற மஹான்களின் செயல்முறைகளைப் பார்த்து சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
கோடிக்கணக்கான வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அளிக்கமுடியாத ஒளியை, சூரியன் ஒன்றே கொடுத்துவிடுகிறது அன்றோ ! உதாரகுணம் படைத்த ஸாயீயைப் போன்ற ஞானிகளின் சக்தியும் அவ்வாறே!
ஸாயீயைப் போன்ற ஸத்குருவின் பலப்பல ஸஹஜமான செயல்கள் மனிதர்களை பந்தங்களிலிருந்து விடுபடச்செய்து அவர்களுக்கு அத்தியந்த சௌக்கியத்தை அளிக்கின்றன.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil