
பாபாவின் கதைகளை பயபக்தியுடன் சொல்பவர்களும் கேட்பவர்களும் பூர்ணசாந்தியையும் விச்ராந்தியையும் அனுபவிப்பார்கள். பாபாவின் திருமுகத்திலிருந்து வெளிப்பட்ட கதைகளைக் கேட்டால் பக்தர்கள் உடல் உபாதிகளை மறந்து விடுவார்கள். அந்தக் கதைகளையே இடைவிடாது தியானம் செய்தால் உலகியல் தளைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவார்கள். பாபாவின் திருமுகத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தேவாமிருதத்தை விட இனிப்பானவை ! அதைக் கேட்க கேட்க பரமானந்தம் விளையும். பயனற்றதும், அர்த்தமில்லாததுமான செயல்களைச் செய்துகொண்டு வாழ்வதைவிட, ஸாயீயின் கதைகளைக் கேட்டுக் கொண்டு ஸாயீயின் சேவையில் ஈடுபடுவதே சிறப்பு.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil