Monday, August 31, 2020

குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு

Hindu Cosmos | Krishna hindu, Guru wallpaper, Lord vishnu wallpapers

'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு  கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 30, 2020

உன் குடும்பத்தின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது

              

"காகா துலா கால்ஜி கஸ்லி மலா சாரா கல்ஜி ஆஹே " , அதாவது, " காகா, உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும் ? எல்லா பொறுப்புகளும் என்னுடையவை " - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா

 ( பாபா தனது பக்தரான எச்.எஸ். தீக்ஷித்திடம் கூறியது. திரு. தீக்ஷீத் பாபாவிடம் வைத்திருந்த திடமான விஸ்வாசத்திற்காக பாபா விசேஷமாக அருளிய வாக்கு இது. மானுட சக்திகளைக் கொண்ட எந்த ஒரு சாதாரண மனிதனும் அத்தகைய சாஸனத்தை அளிக்கமுடியாது. ஆனால், அதை அருளியது தெய்வீக அவதாரமான பாபா.)
பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த எல்லா பக்தர்களுக்கும், பாபாவின் இந்த வாக்குறுதி பொருந்தும். அத்தகைய  பக்தன் மற்றும் அவனது குடும்பத்தினரின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது, எந்த வித தீங்கு நேரும் என நினைக்கவும் அவசியமில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 29, 2020

உங்கள் வீடே துவாரகாமாயீ தான்

               

"நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப்படவேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" - ஸ்ரீ ஷிர்டி  சாய்பாபா ( பாபா தனது பக்தை சந்திரபாயிடம் கூறியவை {1918} ).
பாபாவின் திருவுருவத்தை அடிக்கடி பார்க்கவேண்டும், அவரை எப்போதும் நினைக்க அது உதவும், என்ற நோக்கத்துடன் பாபாவை போட்டோ எடுப்பதற்கு பம்பாயிலிருந்து சில  மாணவர்கள் காமரா ஒன்றுடன் வந்திருந்தனர். அவர்களுடைய நோக்கம் நிறைவேற போட்டோ எடுப்பது சரியான வழியல்ல, மாறாக அவர்கள் தம்மைக் காண முடியாதவாறு மறைந்து நிற்கும் சுவரை தகர்த்தெறிய வேண்டும் என பாபா அறிவுரை வழங்கினார். அவ்வாறு தடையான சுவர் அகற்றுபட்டு விட்டால் அவர்களும் பாபாவும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் தெளிவாக பார்த்துக் கொள்ள முடியும். தகர்த்தெறிவது என்பது எதிர்மறையான சாதனை. பாபாவின் சூசகமான பேச்சின் உட்பொருள் என்ன?
அந்த வாலிபர்கள் தாங்கள் என்பது தங்கள் உடல்கள் தான் எனக் கருதியது போல், பாபா என்பதும் பாபாவின் சரீரம் தான் எனக் கருதினர். அந்த மாதிரி அனுமானங்களை விடாமல் பாபாவின் உடலை மட்டும் போட்டோ எடுக்க முயற்சி செய்யும் வரை, தங்களை பற்றியும் பாபாவைப் பற்றியதுமான ஸ்வரூபம் சம்பந்தமான அவர்களது தவறான நோக்கங்களிலிருந்து விடுபட முடியாது. 'ஷீரடியிலுள்ள இவ்வுடலைப் பார்த்துவிட்டு சாயி பாபாவைக் கண்டுவிட்டதாக ஒருவன் எண்ணுவானேயாகில் அவன் எண்ணம் தவறானது. நான் இங்கே இல்லை' என சில சமயங்களில் பாபா கூறுவார். 

மேலும் இது போன்று பல நிகழ்வுகளை நம்முடைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறோம். இனியும் பதிவு செய்வோம். ஷீரடியில் மட்டும் தான் பாபா இருக்கிறார் என்ற எண்ணம் வேண்டாம். பாபாவே கூறியுள்ளபடி தன்  பக்தன் உடன் எப்போதும் இருக்கிறார். பாபாவை ஷீரடியிலோ அல்லது வேறு ஒரு கோவிலுக்கோ கட்டுப்படுத்த வேண்டாம். பாபா மீது அன்பு கொண்டிருக்கும் உங்கள் வீடே துவாரகாமாயீ தான். அவர் இன்றி வேறு யார் உங்களை பாதுகாக்க முடியும்?                                                               ------ சாயி -சாயி-சாயி------

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 28, 2020

பாபாவிடம் சரணடையுங்கள்


எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிரேமை.  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 27, 2020

அன்னதானம் செய்யுங்கள்

Shirdi Saibaba Framed Art Prints | Fine Art America

உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 26, 2020

பாபா எப்போதும் உன்னிடம் இருப்பார்

"இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" 


ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, "அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, "இனி பயமில்லை" என்றார்.
மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" என்று எச்சரித்தார்.   (பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் ) 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 24, 2020

ஸ்வாமி சமர்த்தர்

                 Swami Samarth | Swami Akkalkot | Sri Samarth Swami & Akkalkot Maharaj

அக்கல்கோட்டில், அன்று ஒரு விசேஷ தினம். பலரும் ஸ்வாமி சமர்த்தரை  தரிசனம் செய்ய வந்து இருந்தார்கள். அவரவர்கள் பலவிதமான பிரசாதங்களையும் கொண்டு வந்து ஸ்வாமிகளுக்கு தந்தவண்ணம் இருந்தார்கள். சிலர் கொண்டு வந்ததை தொட்டு ஆசிர்வதித்தார். சிலரது பிரசாதத்தில் ஒரு கை விரல் நுனியளவு எடுத்து சாப்பிட்டு அவர்களை திருப்தி  படித்தியபடி அனுப்பியவாறு இருந்தார். அலை மோதும் வண்ணம் அளவு கூட்டம் அங்கு இருந்தது. ஒருவர் பின் ஒருவராக ஸ்வாமிகளை அருகில் சென்று தரிசித்து விட்டு சென்று கொண்டு இருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒரு ஏழைப் பெண்மணியும் வந்து இருந்தாள். சாயம் போன சேலை…ஆனால் ஸ்வாமிகளைக் காண வேண்டும் என்ற உறுதி… தன் வீட்டில் இருந்து தான் கொண்டு வந்திருந்த எளிய பிரசாதத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆவல். ஆனால் அவள் மனதில் பயம். தானோ பரம ஏழை. ஆகவே அதை ஸ்வாமிகள் அதை தீண்டுவாரோ மாட்டாரோ. அவரை நெருங்கக் கூட அங்கிருந்தவர்கள் தன்னை அனுமதிக்க மறுக்கின்றார்களே என வருந்தியவாறு ஒரு மூலையில் அமர்ந்து ஸ்வாமிகளை பார்த்தபடி இருந்தாள்.  சிறிது நேரம் ஆயிற்று. கூட்டம் கலையவில்லை. அமர்ந்து இருந்த ஸ்வாமிகள் எழுந்து நின்றார்.
மூலையில்  அமர்ந்து இருந்த அந்த ஏழைப் பெண்மணியை தன் அருகில் வருமாறு அழைத்தார். ஸ்வாமிகள் யாரை அழைக்கின்றார் எனத் தெரியாமல் அங்கு இருந்த  பணக்காரர்களும், வசதியாக இருந்த  மனிதர்களும்  நானா….நானா…..என ஒவ்வொருவராக கேட்க, ஸ்வாமிகளும்  அவர்களிடம் நீ இல்லை….நீ இல்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த ஏழைப் பெண்மணியை நோக்கி தன் கையைக்  காட்ட அனைவரும்  ஒரே வியப்பு. எதற்க்காக அந்த ஏழைப் பெண்மணியை அவர் அழைக்கின்றார்?
ஸ்வாமிகள் அழைத்ததினால் அவர் அருகில் சென்று அவரை வணங்கினாள் அந்தப் பெண்மணி. அவள் எதுவுமே கூறும் முன் அவர் ‘ நீ கொண்டு வந்துள்ள பிரசாதத்தைக் கொடு’ என்றார். வெட்கத்துடன் தான் கொண்டு வந்திருந்த சிறிதளவு பிரசாத பாத்திரத்தை சுவாமிகளிடம் அவள் காட்ட அவர் அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டார். அதில் இருந்த சாப்பாட்டை எடுத்து உண்ணத் துவங்கினார்.  அதில் இரண்டு    கவளம் எடுத்து உண்டப்பின் மீதி இருந்த இரண்டு கவளத்துடன் அதை அவளிடம் திருப்பித் தந்தார். ‘விரைவில் உனக்கு நல்ல குறும்புக்காரப் பிள்ளைப் பிறப்பான்’ என அவளை ஆசிர்வதித்தார்.

நாற்பத்தி ஐந்து வயதான அந்தப் பெண்மணி திகைத்து நின்றாள். தனக்கு  குழந்தை இல்லை என்ற மனவருத்தம் இவருக்கு எப்படித் தெரிந்தது?  தான் ஏழை என்பதையும் பார்க்காமல் அத்தனைக் கூட்டத்திலும்  தன்னை அழைத்து தான் கொண்டு வந்து இருந்த மிக சாதாரமான பிரசாதத்தை ஆசையுடன் அனைவர் முன்னிலையிலும் உண்டாரே….ஸ்வாமிகளின் அன்புதான் என்னே…… கண்களில் கண்ணீர் வழிந்தோட அவள் ஸ்வாமிகளின் காலடியில் விழுந்து சிறிது நேரம் அழுது  புலம்பினாள்.  அங்கு நடந்தவற்றை  பார்த்தபடி நின்று இருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.  ஒவ்வொருவரும் தான்தான் ஸ்வாமிகளின் உண்மையான பக்தர் என எண்ணிக் கொண்டு  பெருமையுடன்  பலவிதமானா திரவியங்கள் போட்ட மணக்கும்  பிரசாதத்தை ஸ்வாமிகளிடம் தந்தாலும் ஒரு ஏழையின் எளிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டு  அதை ஆசையுடன் அவர் உண்டது அவர் ஏழை – பணக்கார பந்தங்களைக் கடந்த உண்மையான தெய்வமே  என்பதை அல்லவா காட்டியது! ஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்ற அந்தப் பெண்மணிக்கு அடுத்த ஆண்டே அழகிய குழந்தை பிறந்தது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 23, 2020

நான் கைவிடமாட்டேன்


Shree Akkalkot Swami Samarth Math - Vadodara||
"நான் சமாதி அடைந்து விட்டாலும் அக்கல்கோட்டில் இருந்தபடி உங்களை ரட்சித்து வருவேன் . அழிவு என் தேகத்திற்குத்தான். என்னை நாடி வருபவர்களை நான் கைவிடமாட்டேன். என் பக்தர்களை என்றுமே காத்தபடி இருப்பேன்"— ஸ்ரீ சுவாமி சமர்த்தர் 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 22, 2020

இன்று ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் ஜெயந்தி

shripad shrivallabh - Sanatan Sanstha

இன்று ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் ஜெயந்தி (22--08-20)
 ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரமே ஸ்ரீ தத்தர். குருவிற்க்கெல்லாம் குருவானவர். எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார்.
குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாக பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார்.


ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர் ஆவார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி வெளிஉலகிற்கு தெரிந்துள்ள விபரங்கள் மிக குறைந்த அளவே ஆகும்.

கி.பி. 1320 ஆண்டு  ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா  அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹா ராணிக்கும் மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் தான் பிரபஞ்சத்திலிருக்கும் ஸ்தாவர, ஜங்கம வஸ்துக்கள் அனைத்திற்கும் மூல காரணம். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரது துணை, அம்ச/பின்ன அவதாரங்கள் அந்த மரத்தின் கிளைகள் போன்றவையாகும். ஆலமரத்தின் வேர்கள் கிளைகளிலிருந்து தலைகீழாக தோன்றினாலும் தாய் மரமே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தேவர்கள் முதல் பூத பிசாசுகள் வரை உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவரே அடைக்கலம் கொடுப்பவர். புகலிடம் கொடுப்பவர். அனைத்து சக்திகளும் அவரிடமிருந்தே தோன்றி அவரையே தஞ்சம் புகுகின்றன.
அநேக ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒழிந்த பிறகு புண்ணியங்கள் பலன் கொடுக்கத் துவங்கும் பொழுது தான் ஒருவருக்கு தத்தரிடம் பக்தி பிறக்கும். தத்தரிடம் பரிபூரண பக்தி ஏற்படும்பொழுது  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தரிசனம், தொட்டு ஆசிர்வதித்தல், பேசுதல் இவற்றால் அருட்ச் செல்வத்தை எந்த வயதிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெறலாம்.

ஸ்ரீ ஸ்ரீபாதர் சத் புருஷர்களுக்கு  எளிதாக கிடைக்ககூடிய தங்கச் சுரங்கம். பாவம் செய்பவர்களுக்கோ, தர்மத்தை மீரியவர்களுக்கோ அவர் ஒரு யமதர்மராஜா மாதிரி. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பெயரைச் சொன்னாலேயே, நாம் உறுதியாக அவரது அருளைப் பெறலாம். நாம் அனைத்து துன்பங்களிலிருந்தும் இழப்பிலிருந்தும் விடுதலை பெறலாம்.

ஸ்ரீ பாதரின் பக்தர்களுக்கு ' முடியாத காரியம் ' என்று ஒன்று இல்லவே இல்லை. நெற்றியில் எழுதியுள்ளத் தலை எழுத்தை மாற்றி எழுதும் வலிமை வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லை. அனால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீபாதர், தன் பக்தனின் துன்பத்தைக் கண்டு மனம் இறங்கி பிரம்மாவை அவன் தலை எழுத்தை அழித்துவிட்டுப் புதிய தலையெழுத்தை எழுதுமாறு உத்தரவிடுவார்....

."இன்று என பக்தன் இறக்க வேண்டிய நாளாகும். நான் அவனது ஆயுளை மேலும் இருபது ஆண்டுகள் நீட்டித்துள்ளேன். இந்த முடிவை அவனுடைய பக்தியின் காரணமாக அளிக்கிறேன் ."- ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர்.ஸ்ரீ பாதரின் சத்திய வார்த்தைகள் சில...

*  நானே அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் வடிவம் ஆவேன்.
* என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா, பாவ புண்ணியங்களுக்கு  ஏற்பவே அமையும். என்னை முழுமையாக சரணடைந்த பக்தனை நான்  ஒருபோதும் கை விடமாட்டேன். வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தனையும்    என் ஷேத்திரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விடுவேன். ரிஷி  மூலம் நதி மூலம் கேட்கக் கூடாது.
* நான் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். என் தத்துவம் மட்டுமே கோடான கோடி  அண்டங்களில் வியாபித்து உள்ளது. திசைகளே எனக்கு ஆடைகள். நான் ஒரு  திகம்பரர். எவனொருவன் உடல் மனம் சொல் தூய்மையுடன் " தத்த திகம்பரா!  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப  திகம்பரா! நரசிம்ம சரஸ்வதி திகம்பரா ! " என்று  கூறுகிறானோ அங்கு நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
* எவனொருவன் நான் பிறந்த புனிதமான வீட்டில் தங்குகிறானோ அவன் நிச்சயமாக பரிசுத்தனாக மாறிவிடுவான். அவனின் முன்னோர்கள் புண்ணிய லோகங்களை அடைவார்கள் .
* பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின்  விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.
என்னுடைய சக்தியைத் தெரிந்துக்கொள்ள முதலில் நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
* நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில்  இருக்கிறீர்கள். நான் நினைத்தால் ஆண்டியையும் அரசனாக்குவேன்.  அரசனை ஆண்டியாக்குவேன். என்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன  கேட்டாலும் தருவேன். நான் 'தேவை' என முடிவு செய்து விட்டால்    மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும்  மண்ணாக்குவேன்.
* என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப்  பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பம்  இன்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர்  எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் மிகப் பெரிய யோகியாக இருந்தாலும்  சரி. இது உறுதியான சத்தியமாகும். நான் மட்டுமே யார் எப்பொழுது எத்தனைப்  பேராக எந்த மாதிரி பயணம் செய்து என்னை தரிசிக்க வரவேண்டும் என்பதை  முடிவு செய்வேன்.அது என் விருப்பமே.
* இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கூலிக்காரன்தான்.    நான் தான் முதலாளி. நான் மகிழ்ச்சியடைந்தால் உங்களுக்கு உரியதைவிட  மிக மிக அதிகமாகவே தருவேன். நான் கோபம் அடைந்தால் எவ்வளவு  குறைத்துக்கொண்டு மிதத்தை மட்டும்  தான் தருவேன்.
 மனமுருகி நான் பாவங்களிலிருந்து விடுபட்டவன் என உணர்ந்து, என்னை  அடைக்கலம் அடைந்து என்னை அன்புடன் , தத்த திகம்பரா ! ஸ்ரீபாத வல்லப  திகம்பரா ! என்ற அழைத்தால் அந்தச்   க்ஷ்ணத்திலிருந்தே உங்களது  பாவங்களை எரித்துப் பொசுக்கி உங்களை புண்ணியவான் ஆக்குவேன்.
* நான் என்னுடைய பக்தர்களுக்கு தாசானுதாசன் ஆவேன். என்னை தன்    மனதில் சிறை பிடிப்பவனே மிக மிகச் சிறந்த சக்ரவர்த்தி ஆவான்.  அப்படிப்பட்ட பக்தனுக்கு மூவுலகங்களையும் ஆளும் ஸ்ரீ பரமேஸ்வரனே கூட  வேலைக்காரன் போலச் சேவை செய்வார்.
* நான் ஒருவனே அனைத்து தர்மங்கள் மதங்கள் தத்துவங்கள் அனைத்திலும்  சுயமாகப் பிராகாசிப்பவனாவேன். அனைத்து தெய்வங்களிலும் தெய்வீக  சக்திகளிலும் நுணுக்கமாகப் பிரகாசிப்பவன் நானேயாவேன். நான் ஒருவனே  உங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் அந்தந்த  உருவங்களின் மூலம் பெற்றுக் கொள்பவன் ஆவேன். நான் ஒருவனே தான்  அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.
* என் புனித வரலாற்றை (ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ) படித்தால் ஆசைகள் நிறைவேறும். எல்லாத்  தடைகளும் விலகும். இந்த சரித்ராம்ருதத்தை ஒரு சராசரிப் புத்தகம் என்று  நினைத்துக் கொள்ளாதே. இது ஒரு தெய்வீகச் சைத்தன்யத்தின் உயிருள்ள  சக்திப் பிராவகம் ஆகும். நீ பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும்போது  அந்த எழுத்துகளின் வலிமையானது என்னுடைய மானசீக  சைத்தன்யத்திற்குள் பாயும். உனக்கு தெரியாமலேயே உனக்கு என்னுடன்  ஒரு தொடர்பு எற்பட்டுவிடுவதால் உன்னுடைய நியாயமான கோரிக்கைகள்,  பிரார்த்தனைகள் ஆசைகள் அனைத்தும் என்னுடைய கருணையால்  நிறைவேற்றப் பட்டுவிடும். இந்த புத்தகத்தை பூஜை ஆறையில்  வைத்திருந்தால் துரதிர்ஷ்டமும் தீய சக்திகளும் அங்கிருந்து  துரத்தி  அடிக்கப்பட்டுவிடும்.

                      

ஸ்ரீ ஸ்ரீபாதர் தன் பக்தர்களுக்கு அளித்த பன்னிரண்டு வாக்குறுதிகள் .

1. என் வாழ்க்கை சத்சரித்திரத்தை பக்தியுடன் படிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.

2. மனம், சொல், செயல் இவற்றால் என்னை பக்தியுடன் சரண் அடைந்தவனை நான் கண் இமை கண்ணைக் காப்பது போலக் காப்பேன்.

3. தினமும் மதியம் பீடிகாபுரத்தில் நான் பிக்ஷை எடுப்பேன். என் வருகை ரகசியமானது.

4. என்னை இடைவிடாது தியானிப்பவர்களின் அனைத்து கர்மக் குவியல்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுவேன். பல்வேறு ஜென்மங்களில் சேர்த்து வைத்திருந்த கர்மாக்களையும் எரித்துப் பொசுக்கிவிடுவேன்.

5. " ஓ ! ராமச்சந்திரா! சாப்பாடு போடு!" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

6. நான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ! ஸ்ரீ மஹாலக்ஷ்மி அனைத்து சொவ்பாக்யங்களுடன் என் பக்தர்கள் வீட்டில் பிரகாசமாக ஜொலிப்பாள்.

7. உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் என் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

8. எந்த ஒரு கடவுளை வழிபட்டாலும், எந்த ஒரு சத்குருவின் வலி நடந்தாலும் எனக்கு சம்மதமே.

9. உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ,என்னை வந்தடையும். என்னுடைய அருளானது உங்களுக்கு நீங்கள் வழிபடும் தெய்வம் வழியாகவோ, உங்களுடைய சத்குருவின் வழியாகவோ உங்களை வந்தடையும்.
10. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் இந்த பெயருக்கும் உருவத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர் அல்ல. என்னுடைய தெய்வீக விஸ்வ ரூபத்தை அனைத்து தெய்வங்களின் உருவமாகவும் என் உடல் பகுதிகளை அனைத்து சக்திகளாகவும் ஆன்மீக யோக சாதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

11. என்னுடையது அவதாரம் முழுமையான யோக அவதாரமாகும். மிகச் சிறந்த யோகிகளும், சித்தர்களும் என் மீது இடைவிடாது தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.

12. என்னுடைய ஆதரவை நாடினால் நான் உங்களுக்கு தர்மத்தின் வழியையும் கர்மத்தின் வழியையும் போதிப்பேன். உங்களை எப்பொழுதும் வீழ்ச்சியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுகிறேன்.

                             ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !

                 திகம்பரா திகம்பரா ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!


( இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும்  ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)


                        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 21, 2020

அக்கல்கோட் மகராஜ் சுவாமி சமர்த்தர்

Divine Thought :: Temples, Mantras, Slokas, Festivals, Facts of ...
ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சுவாமி சமர்த்தர் ( அக்கல்கோட் மகராஜ் ) என்று பிரபலாமாக அழைக்கப்படும் இந்த ஆன்மீகக் குருவின் பெயர், மகாராஷ்டிரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லா வீடுகளிலும் அறியப்படும் பெயராகும். அக்கல்கோட்  என்னும் இடத்தை 22 வருடங்களாகத் தம் வசிப்பிடமாக இந்தச் சத்குரு தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும், 1878-இல் அங்கேயே அவர் மகாசமாதியும் அடைந்ததனாலும், அவர் ' அக்கல்கோட் மகராஜ் ' என்றும் அழைக்கப்பட்டார். மகாராஷ்ட்ராவிலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல்கோட் அமைந்துள்ளது.

ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் பக்தர்களுக்கு சுவாமி சமர்த்தரின் வாழ்வும், அவரது செயல்களும் பற்றி அறிந்துகொள்வது மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.
ஸ்ரீ சுவாமி சமர்த்தர், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா இருவரின் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்கள் வாழ்விலும், செயல்களிலும் வியக்கத்தக்க அளவு ஒற்றுமை இருப்பது தெரியவரும். அவர்கள் போதனா முறைகள், உலக அளவிலான அவர்களின் அணுகுமுறை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் இவை யாவற்றிலும் அந்த ஒற்றுமை உண்டு. உண்மை என்னவெனில், சுவாமி சமர்த்தரும், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவும், இரு வெவ்வேறு ஸ்தூல சரீரங்களில், ஒரே தெய்வீக சக்தியின் வெளிப்பாடு ஆவர்கள். தம்முடைய மகாசமாதிக்கு முன்னர், சுவாமி சமர்த்தர், அவருடைய சீடர் ஒருவரிடம், ஷிர்டியில் உள்ள ஸ்ரீ சாயியை வணங்கும்படியும், எதிர்காலத்தில் தாம் ( சுவாமி சமர்த்தர் ) ஷிர்டியில் இருக்கப்போவதாகவும் அறிவுறுத்தினார்.

சுவாமி சமர்த்தரின் இளமைக் கால வாழ்க்கையும் கூட ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கையைப் போலவே, யாரும் அறியாத புதிராகவே உள்ளது. குருச்சரித்திரத்தில் ஸ்ரீ தத்த  அவதாரம் ஸ்ரீ  ந்ரசிம்ம சரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி அடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் தவ நிலையில் இருந்தபோது அவர்மேல் ஒரு பெரிய எறும்பு புற்று வளர்ந்து வெளியுலகத்திலிருந்து அவரை மறைத்தது. ஒருநாள் ஒரு மரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ  ந்ருசிம்ம  சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாக விழுந்தது.  கோடாரியின் வெட்டும் பாகத்தில் இரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டு அவன் அதிர்ச்சியுற்றான். அந்தப் புற்றை சுத்தம் செய்து பார்த்தபோது, ஆ! அங்கு அவன் கண்டதென்ன? அவன் அங்கு ஒரு யோகி, மெதுவாகக் கண்திறந்து, வாயடைத்து நின்ற விறகு வெட்டியைச் சமாதானப்படுத்தி, அவருடைய குறிக்கோளைத் திரும்பவும் நிறைவேற்ற, அவர் மறுபடியும் இவ்வுலகில் தோன்ற வேண்டும் என்பது தெய்வ விருப்பம் என்றும் கூறினார். இந்த யோகி, இந்த புதிய அவதாரத்தில், ' சுவாமி சமர்த்தர்' என்று அழைக்கப்பட்டார்.

சுவாமி சமர்த்தர், அக்கல்கோட்டில் வந்து குடியேறும் வரை பல இடங்களில் சுற்றித் திரிந்தார். இமயமலைப் பகுதிகளில் அலைந்தபோது, அவர் சீனாவிர்க்குச் சென்றார். அதன்பின்பு, பூரி, பனாரஸ், ஹரித்வார், கிர்னஸ் , கத்தியவாட், இராமேஸ்வரம்  போன்ற பல இடங்களுக்கும் சென்றார். மகாராஷ்டிரத்தில், சோலாப்பூர் மாவட்டத்தில் பண்டர்பூருக்கு அருகிலுள்ள நகரமான மங்கல்வேதாவிலும் தங்கியிருந்தார்.1856-ஆம் ஆண்டு அக்கல்கோட்டுக்கு வந்து, அங்கு அவர் பூத உடலில் 22 வருடகாலம் தொடர்ந்து இருந்தார். அவர் அக்கல்கோட்டுக்கு, சின்டோ பண்ட்டோல் என்ற ஒருவரின் அழைப்பின் பேரில் வந்து அந்நகரின் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் தங்கினார்.
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர் என்பதை விரைவிலேயே அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். சோலப்பா என்பவரின் வீட்டில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இந்த சிறிய வீட்டில்தான் இறுதிவரை சுவாமி சமர்த்தர் வசித்துவந்தார்.

விரைவிலேயே, ஓர் ஆன்மீக குரு என்ற முறையில் சுவாமி சமர்த்தரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவியது. பக்தர்கள், அவர் ஆசிகளைப் பெறத் தேடிவந்தனர். அவர் ஹிந்து, முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் பார்சிகள் அனைவரையும் சமமாகப் பாவித்தார். ஏழைகள், தேவையுள்ளவர்கள் மற்றும் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள்- இவர்கள்பால் அவர் எப்போதும் கருணை புரிந்தார். ஷீரடியைப் போல, அக்கல்கோட்டிலும் வியாழக்கிழமை கொண்டாட்டத்திற்குரிய  சிறப்பு நாளாயிற்று.

பல வருடங்கள், ஏழை எளியவர்க்குத் தொண்டு செய்து, நோயுற்றவர்களைக் குணப்படுத்தி, எண்ணற்ற லீலைகளை புரிந்தபின்னர்,சுவாமி சமர்த்தர் ஒருநாள் திடீரென தம் பூதஉடலை விடுத்துச் செல்லும் காலம் வந்துவிட்டது என்று அறிவித்தார். அது ஷாக்கா 1800, சைத்ர சுதா திரியோதசி - அதாவது கி.பி. 1878- ஆம் வருடத்தில், ஒரு செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணி. அந்நேரத்தில் அவர் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு அவருடைய இறுதி மொழிகளைக் கூறினார். ' யாரும் அழக் கூடாது ' நான் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இருப்பேன். பக்தர்களின் ஒவ்வோர் அழைப்பிற்கும் பதிலளிப்பேன். ஸ்ரீ சாயிபாபாவும் மகாசமாதி அடைவதற்கு முன் இதையேதான்  கூறினார்.

சுவாமி சமர்த்தர் தம் உடலை விட்டு நீங்குவதற்கு முன், கேசவ் நாயக் என்ற பக்தர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு ' மகாராஜ், நீங்கள் செல்வதால் எங்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்? ' எனக் கேட்டார். சுவாமி சமர்த்தர் தம் பாதுகைகள் ஒரு ஜோடியை வணங்குவதற்காக அவருக்கு அளித்தார். ' இனிவருங்காலங்களில், அஹமது நகர் மாவட்டத்திலுள்ள ஷிர்டியில்  நான் தங்கியிருப்பேன் ' எனக் கூறினார். இன்னொரு பக்தரான கிருஷ்ணா அலி பாக்கர், அக்கல்கோட்டுக்குச்  சென்று சுவாமி சமர்த்தரின் பாதுகைகளை வழிபடத் தீர்மானித்தார். அப்போது சுவாமி சமர்த்தர் அவர் கனவில் தோன்றி ' நான் இப்போது ஷிர்டியில்  தங்கியுள்ளேன் ' அங்குச் சென்று என்னை வழிபடு. எனக்கூறினார். பாக்கர் சீரடி சென்று ஆறு மாதம் அங்குத் தங்கினார். பின்னர், அவர் ஸ்ரீ சாயியிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் அக்கல்கோட் செல்ல விரும்பியபோது, ஸ்ரீ சாயி, ' அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது ? அக்கல்கோட் மஹராஜ் இங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்' என்று கூறினார்.

சுவாமி சமர்த்தரின் தெய்வீக லீலைகளை அவர் மகாசமாதி அடைந்ததும் நின்றுவிடவில்லை. இன்றும் கூட அவரது பக்தர்கள், கண்ணுக்குப் புலப்படும் மற்றும் கண்ணுக்குப் புலப்படாத உதவிகள் என அவருடைய அற்புங்களை அனுபவித்து வருகின்றனர்.

    * ஜெய் சாய்ராம் *

SHIRDI SAIBABA SAYINGS: Shri Swami Samarth Maharaj

Pin by Prashant Barvekar on स्वामी समर्थ | Swami ...


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 20, 2020

நியாயமான வேண்டுதல்

                 Pin on Cosmo

சத்தியமாகவும், மனமொப்பியும்,  நன்றியோடும், கெட்ட எண்ணங்களற்றும் தன்னிடம் பிரார்த்தனை செய்து கெஞ்சிக் கோரும் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்களைப் பூர்த்திசெய்து தருவதில்,  "சாய்பாபா எல்லைகளற்ற ஒரு மாபெரும் சக்தி !" என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது.


- பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வாமிஜி (அகில இந்திய சாயி சமாஜ நிறுவனர் )


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 19, 2020

பாபா நம்முடன் இருக்கிறார்

Sri Sai Baba Mandir - Calicut

பக்தர்களின் நலனுக்காக ஞானிகளும், சாதுக்களும், ஸத்குருக்களும் கடினமான சோதனைகளைக்கூட தாங்களே தாங்கி, பிறரின் கர்மவினைகளைப் போக்கி, நற்பேறு அளிக்க வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.  சில சமயம் இவர்களைப் போன்ற ஸத்குரு வாழ்ந்த காலத்தில் நாம் இல்லையே என்று மனம் ஏங்குகின்றது. ஆனால் அவர்கள் இன்னும் நம்முடன்தான் இருக்கிறார்கள்.   நம் உள்ளத்தில் வீற்றிருக்கிறார்கள்.   நாம் எத்தனையோ சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும், அதை அவர்கள் உடைத்து நமக்கு விடுதலை அளிப்பதை அவர்மீது நம்பிக்கை கொண்டவர்கள் இன்றளவும் நிச்சயமாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை !


(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம்)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 18, 2020

திகம்பரா திகம்பரா ஸ்ரீ பாத வல்லப திகம்பரா


வல்லபேசன் என்ற வணிகன் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பக்தன். அவருக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து கொண்டிருந்தது. இதற்கெல்லாம் ஸ்ரீபாத வல்லபரின் அருள் தான் காரணம் என்று எண்ணினார். ஆகையால் அவர்  ஒவ்வொரு வருடமும் குருவப்புரத்திற்கு சென்று ஸ்ரீபாத வல்லபரை வணங்கி தன் வியாபாரத்தை தொடங்குவார். ஒரு வருடம் அவர்,  உங்கள் அருளினால்  தனக்கு வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைத்தால்  குருவின் சந்நிதியில் அன்னதானம் செய்வேன் என்று வேண்டினார்.  அன்று முதல்  அவர்  எங்கு சென்றாலும் நினைத்ததைவிட  அதிகமாக வியாபாரம் நடந்து அதிக லாபம் வந்து கொண்டிருந்தது. தான்  வேண்டியதைப் போல் பகவான் தனக்கு அதிக  லாபம் கிடைக்க செய்ததினால் தன் வேண்டுதலை நிறைவேற்ற அவர்  பணம் எடுத்துக்கொண்டு குருவப்புரத்திற்கு புறப்பட்டார். 
 வல்லபேஸரிடம் பணம் இருந்ததை அறிந்து சில திருடர்கள் பக்தர்களை போல் நடித்து அவருடன் தாங்களும்குருவபுரத்திற்கு செல்கின்றோம் என்று கூறி வழித்துணையாக புறப்பட்டார்கள்.  அவர்கள் காட்டின் வழியாக சென்று கொண்டிருக்கையில் இரவு நேரமாகிவிட்டது. அன்று இரவு அங்கு தங்கி காலையில் பயணம் தொடங்க நினைத்தார்கள். அவர்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு தூங்கலானார்கள்.
இதற்காக காத்துக் கொண்டிருந்த திருடர்கள் மெல்ல எழுந்து வல்லபேசரின்  தலையை வெட்டினார்கள். அவர் உயிர் பிரியும் பொழுது ஸ்ரீபாத வல்லவரை நினைத்து உயிரை விட்டார். உடனே பக்தர்களின் காப்பாளனான ஸ்ரீபாத வல்லபர் சூலம் ஏந்தி விபூதி ருத்ராட்சைகளுடன் அங்கு தோன்றி அந்த திருடர்களை சூலத்தினால்  கொன்றுவிட்டார்.  அவர்களில் ஒருவன் பகவானை பார்த்து அவர் காலடியில் விழுந்து சுவாமி நான் திருடன் இல்லை. எனக்கு இவர்கள் திருடர்கள் என்று தெரியாததால் இவர்களுடன் வந்தேன் உங்களை பார்த்தால்  திரிசூலம் ஏந்திய மகேசனை போல் தெரிகிறது. உங்களுக்கு சகலமும் தெரியும்.  ஆகையால் என்னை கொன்றுவிடாமால்  விட்டு விடுங்கள் என்று வேண்டினான்.  சுவாமி அவனை மன்னித்து விட்டு அவனிடம் விபூதியை கொடுத்து வல்லபேசரின்  தலையை முண்டத்துடன் சேர்த்து வைத்து அவர்  உடல் முழுவதும் விபூதியை தெளிக்க சொல்லி மறைந்தார். அப்படி செய்த உடனே வல்லபேசர்  உயிர் பெற்று எழுந்தார். அப்பொழுது சூரிய உதயம் ஆனது.
 இதை எதையும் அறியாத வல்லபேசர், அங்கு இறந்து கிடந்த திருடர்களை பார்த்து இவர்களை யார் கொன்றுவிட்டார்கள். நீ மட்டும் எப்படி தப்பித்து கொண்டாய்  என்று கேட்டார். ஐயா, இங்கு ஒரு அற்புதமான லீலை நடந்தது. நம்முடன் வந்த இவர்கள் யாத்திரிகர்கள் இல்லை. உங்களிடம் உள்ள பணத்தை திருட வந்த திருடர்கள்.அவர்கள் நீங்கள் தூங்கிய உடனே உங்களை கொன்றுவிட்டு, உங்கள் பணத்தை எடுத்து செல்ல முற்பட்டார்கள். 
 நீங்கள் உயிர் விடும் முன் "ஸ்ரீபாத வல்லபா"  என்று குரல் எழுப்பினீர்கள். அந்த நேரத்தில் ஒரு மகான் விபூதி ருத்ராட்சையுடன் கையில் திரிசூலம் ஏந்தி அங்கு தோன்றி அவர்களை கொன்று விட்டார். அவர் கொடுத்த விபூதியை உங்கள் மேல் தெளித்த உடனே அதன் மகிமையினால் நீங்கள் உயிர் பெற்றீர்கள். இங்கு  தோன்றிய அந்த மகான் மகேசனை போல் தோற்றமளித்தார் என்றான். 
தன்னை காப்பாற்றியவர் வேறு யாருமில்லை தான் வணங்கும் அந்த ஸ்ரீபாத வல்லபர்  தான். அவரின் தரிசனம் தனக்கு கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டார். உடனே ஆனந்தத்தால் குருவப்புரத்திற்கு புறப்பட்டுச் சென்று ஸ்ரீபாத வல்லபரின் பாதுகைகளுக்கு பூஜை செய்து, தான் நினைத்ததை விட அதிகமாக 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார். இப்படி ஸ்ரீபாத வல்லபர் மறைமுகமாக தன் பக்தர்களுக்கு அருள்புரிந்து எல்லா செல்வங்களையும் தந்து கொண்டிருக்கிறார்.
அவரின் பெயரை சொன்ன மாத்திரத்தில் தன் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை தந்து அருள் புரிகிறார். அவரை

" திகம்பரா திகம்பரா ஸ்ரீ பாத வல்லப திகம்பரா

 திகம்பரா திகம்பரா திகம்பரா  அவதூத சிந்தன திகம்பரா"
என்று துதித்தால் அவரின் ஆசி  கிடைக்கும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 17, 2020

இறைவனே கடனாளியாகிறான்

Canvas Paintings Online at Discounted Prices on Flipkart

வெள்ளிக் காசுகளையும் தங்கக் கட்டிகளையும் கொண்டு ஸத்குருவின் அனுக்கிரஹத்தை வாங்கவிடமுடியாது.  ஆத்மார்த்தமான பக்தியினால் மட்டுமே அது சாத்தியமாகும்.  ஆதலால் நம்முடைய சோர்வு, அயர்ச்சி, அஹங்காரம் இவற்றை அறவே நீக்கி, ஸத்குருவின் புனித சரித்திரத்தை பாராயணம் செய்வதற்கு நம்மை முழுமையாக ஆட்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஸமர்த்த ஸத்குருவின் அற்புதங்களையும், லீலைகளையும், மஹிமைகளையும் உள்ளடக்கிய புனித சரித்திரமானது, படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் முக்தியைத் தரவல்லது.  ஸத்குருவின் சரித்திரம் எல்லாவற்றையும் முன்னிறுத்தி முழுவதுமாக புனிதத்தன்மையால் நிறைந்ததால், இவை வாழ்வின் சத்தியமான வழியில் நம்மை வழிநடத்திச் செல்லவல்லது.  இறைத் தன்மையுடைய சாதுக்களையும், ஞானிகளையும், ஸத்குருக்களையும் வணங்கும் பக்தர்களுக்கு இறைவனே கடனாளியாகிறான்‌ !.


( ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 16, 2020

ஸத்குருவின் அற்புதங்கள்

Trouvaille Religious Figurines Series Saibaba's Blessing Eyes ...

ஸத்குருவின் சரித்திரத்தைப் படிப்பதாலேயே நமக்கு வரவிருக்கும் பேராபத்துகள் தவிர்க்கப்பட்டு,  நாம் மிகச்சிறந்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதை உணர முடியும்.  ஸத்குருவின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. உண்மையான ஸத்குருவானவர் ஒரு பக்தனுக்கு காமதேனுவைப் போன்றவர். காமதேனு நாம் நினைத்த அனைத்தையும் தரும் தெய்வமாகும்.   ஆனால் நம் ஸத்குருவோ, நாம் நினைக்க மறந்ததைக் கூட,  நினைத்துப் பார்க்காததையும்கூட நமக்கு தரவல்லவர்.   ஸத்குருவின் தரிசனம் கிடைத்த பிறகு ஒவ்வொரு பக்தனும் புதுப்பொலிவுடன் திகழ ஆரம்பிக்கிறான்.   இந்த அற்புதங்கள் யாவும் சத்தியமான ஸத்குருவின் அற்புதங்கள் ஆகும். இவற்றில் ஒரு பகுதியைக் கூட யாராலும் மறுக்க முடியாது.


(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 15, 2020

ஸத்குருவின் மகத்தான மஹிமைஇயற்கைக்குப் புறம்பாக நிகழ்வுகள் நடக்கும்போது, மருத்துவர்கள் கைகட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.  அந்த சமயத்தில் ஸத்குருவும் ஞானிகளும் நம்மை கைவிடமாட்டார்கள்.  ஆனால் நாம் அதற்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். உண்மையானவர்களாக,  பூரண நம்பிக்கையுடன், பக்தியோடும் விசுவாசத்தோடும் ஸத்குருவின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொள்பவர்களுக்கு, வாழ்க்கையில் எத்தகைய இடர்கள் வந்தாலும், ஸத்குரு தன் உண்மையான பக்தனுக்குப் பதிலாக அவற்றைத் தாமே எதிர்கொண்டு, அவற்றைத் தாமே ஏற்றுக்கொண்டு, அவர்களைக் காத்து ரட்சிப்பார்.  இதுவே ஸத்குருவின் மகத்தான மஹிமை.


( ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

கங்கணம் கட்டிக்கொண்டு காப்பாற்றுவார்‌ ஸத்குரு

Gajanan Maharaj Shegaon Video - 800x600 Wallpaper - teahub.io

ஸத்குரு என்பவர் தம்மீது எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களை கங்கணம் கட்டிக்கொண்டு  காப்பாற்றுவார்‌ என்பது நிச்சயம். இதை மனத்திற்கொண்டு, ஒவ்வொரு பக்தரும் முழுமையான பக்தியையும், அசையாத நம்பிக்கையையும் கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தி, ஒருமுகமான சிந்தனையுடன் ஸத்குரு அவர்களை நோக்கி ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்தால், அவர்களின் அபாயங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் நீக்கப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை !


(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 13, 2020

சரியான பாதையை காண்பிக்கும் ஸத்குரு


சாதுக்களும், ஞானிகளும், ஸத்குருக்களும் ஒருபோதும் தம் பக்தர்களை தவறான வழியில் திசை திரும்புவதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.  ஒருவேளை தவறான வழியில் செல்வதற்கு தன் பக்தன் முயற்சித்தாலும், அதைத் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தி, சரியான பாதையை காண்பிக்கும் தர்மத்தை ஸத்குருவால் மட்டுமே சாதிக்க இயலும்.  ஸத்குருவானவர் தர்மதேவன். ஸத்குருவின் வாக்கு தெய்வவாக்காகும்.

(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம்)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 12, 2020

குணமாக்க இயலாத பல வியாதிகள் குணமாக்கப்பட்டன


குணமாக்க இயலாத வியாதிகளையெல்லாம்கூட தன் கடைக்கண் பார்வையால் மட்டுமே குணமாக்கிவிடும் மஹாசக்தி படைத்தவர் ஸாயீபாபா‌ !  பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு உதீயைத் தடவியும், அதைத் தண்ணீருடன் உட்கொண்டும்‌ வேறு எவ்வித சிகிச்சையும் மருந்தையும் உட்கொள்ளாமலேயே 
இருந்தவர்களின் பல வியாதிகள் குணமாக்கப்பட்டன.

- ஸ்ரீ ஸாயீஸத்சரித்திரம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 11, 2020

பயப்படாதிருங்கள்‌ !


பயப்படாதிருங்கள்‌ ! ஏன் நீங்கள் பத்து ஜென்மங்கள் கஷ்டப்பட வேண்டும்? என்மீதான நம்பிக்கை பூரணமாக இருந்தால் , பத்தே நாட்களில் உங்கள் தொல்லைகளையும்  ஊழ்வினைகளையும் அழித்து உங்களைக் காப்பாற்ற முடியும் ! உங்களுக்கு இகபர நலன்களை அளிக்க நான் இவ்விடத்தில் இருக்கும்போது ஏன் சாவதற்கு வேண்டிக்கொள்ள வேண்டும்‌? உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள் ! நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் !  என்னையே எப்போதும் நினையுங்கள் ! நான் உங்களைக் காப்பாற்றிக் கவனித்துக் கொள்கிறேன் !

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 10, 2020

முழுமையாக நம்புகிறவன் முக்தி அடைவான்


எவனொருவன் தனது அஹங்காரத்தை ஒதுக்கித் தள்ளி, எனக்கு பணிவுள்ள சேவகனாக இருந்து, அடிக்கடி என்னை மட்டுமே நினைவில் நிறுத்திக்கொண்டு, எனக்கு நன்றி செலுத்தி, என்னை முழுமையாக நம்புகிறானோ அவனது பந்தங்கள் அறுபட்டு போகின்றன. அவன் முக்தி அடைவது உறுதி !  
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 9, 2020

ஜென்ம ஜென்மாந்திர கணக்குகளைத் தீர்த்து வைப்பவர் ஸத்குரு ஒருவரே ‌!


வசதிகளும், வாய்ப்புகளும், செல்வாக்கும், அதிகாரமும் அளவின்றி இருக்கும்போது,  இறைவனைப்பற்றி நினைவே இல்லாமல்,  "தான்" "நான்" என்று மமதை கொண்டு இறுமாப்பாய்‌ இருந்துவிட்டு,  இறுதியில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் இறைவனிடம் அடைக்கலம் வேண்டுவது இவ்வுலகில் பெரும்பாலான மனிதர்களின் வழக்கமாக போய்விட்டது. அந்நிலையிலும் தன்னிடம் சரணாகதி அடைபவர்களை, கைவிடாமல், நாம் செய்த பிழைகள் யாவற்றையும் பொறுத்துக் கொண்டும், மன்னித்தும் நம்மைக் காத்துக் ரட்சிப்பவர் ஸத்குரு ஒருவரே ஆவார்.  ஸத்குரு நினைத்தால் கடந்த காலமும் நிகழ்காலம் ஆகும்.  நிகழ்காலமும் எதிர்காலம் ஆகும். நம்முடைய ஜென்ம ஜென்மாந்திர கணக்குகளைத் தீர்த்து வைப்பவர் ஸத்குரு ஒருவரே ‌!

- ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 8, 2020

உங்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேற...குரு சரித்திர பாராயணத்தினால் நல்வாழ்வும், முக்தியும் பெற வழி கிடைக்கும். பக்தியுடனும் சிரத்தையுடனும் நிஷ்டையுடனும் ஏழு நாட்கள் பாராயணம் செய்பவர்களின் பாவங்கள் தீர்ந்து பிள்ளைப் பேறு, செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஞானம், கல்யாணம் ஆகியவைகளில் யார் யாருக்கு எது தேவையோ அது அவர்களுக்கு கிடைக்கும். நோயாளிகள்  நோய்களில் இருந்து விடுபடுவார்கள். எல்லா வளமும் கொடுக்கும் சிந்தாமணிக்கு சமமானது இந்த  குருவின் சரித்திரம்.

 குரு சரித்திரத்தை பாராயணம் செய்வதினால் அறியாமை விலகி ஸ்ரீ குருவிடம் திடமான பக்தி ஏற்படும். குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம்.  குரு சரித்திரத்தை பாராயணம் செய்வதனால் உங்களின் துயரங்கள் தீர்ந்து   வேண்டியது நிறைவேறும். 

கீழே கொடுக்கப்பட்ட LINK'ஐ கிளிக் செய்து DOWNLOAD AND PRINTOUT செய்துகொள்ளுங்கள். குருவிற்கும் அவரின் சரித்திரத்திற்கும் வித்தியாசம் இல்லை.தினமும் குறைந்தது ஒரு அத்தியாயம், பயபக்தியுடன் பூஜை அறையிலோ அல்லது கோவிலிலோ பாராயணம் செய்து வாருங்கள்.இதன் மகத்துவத்தினால்  PHONE'ல் படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். 

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் பதிவிறக்கம் செய்ய ;
https://drive.google.com/folderview?id=0B7G8udmBMXCMMzliMmU2NTEtOGM1OS00YzgwLWE5NjEtODA0YzE4NDM4MDAw&usp=sharing

ஸ்ரீ குரு சரித்திரம் பதிவிறக்கம் செய்ய ;
https://drive.google.com/open?id=0B7G8udmBMXCMZFhqLXhUSFpzcWs

ஸ்ரீ கஜானன் மஹராஜ் சரித்திரம் பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/open?id=1gXlApAywAaNa_4nFkQSPZORsKMLFy6xO

ஸ்ரீ சுவாமி சமர்த்தர் சரித்திரம் பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/open?id=0B7G8udmBMXCMVDRWbGpHcXRKVjNhQ1EyYWwwVFZPeUVvSmpZ

ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரம் பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/file/d/1G-1Hwks8ouEvLI8dCVmRuLiHjtcH_dhP/view?usp=sharing

ஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/open?id=0B7G8udmBMXCMTDBtSmhlNGg4cDQ


சாய்பக்தர்கள் தங்கள் நண்பர்களுடன் குரு சரித்திர புத்தகத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சாய்பாபா மற்றும் குரு சம்பதமான புத்தகங்கள் தங்களிடம் இருந்தால் saibabasayings@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம். ஓம் சாய்  ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்.                                         ஸ்ரீ சுவாமி சமர்த்தர் - அக்கல்கோட் ( மஹாராஷ்ட்ரா)               ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி - கானகாபூர் - குல்பர்கா -கர்நாடகா               ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் - பித்தாபுரம் -கிழக்கு கோதாவரி மாவட்டம்.                                                      நிர்குண பாதுகை - கானகாபூர்                                பித்தாபுரம் -கிழக்கு கோதாவரி மாவட்டம் -ஆந்திரா
Gajanan Maharaj of Shegaon Pastel by Vishvesh Tadsare

                    ஸ்ரீ கஜானன் மஹராஜ் -SHEGAON- MAHARASHTRA

Sadguru Manik Prabhu on Twitter: "Jai Guru Manik… "
 
                         SHRI MANIK PRABHU MAHARAJ-  KARNATAKA
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இறைவனை அடைவதற்கு எளிமையான வழி

என்னுடைய பக்தர்களான நீங்கள் அனைவராலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்டு மதிக்கப்படுவீர்கள்.   ஒருநாளும் குருசேவையில் உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள் ! குருபக்தியின் வழிபாட்டுமுறைகள் யாவையும் அர்த்தமற்றதாக எண்ணவேண்டாம் ! ஆயினும் முழுவதுமாக உங்களை அந்தப் பயிற்சியில் இயந்திரகதியாக மாற்றிக்கொள்ள வேண்டாம்.  பலனைக் கருத்தில் கொள்ளாதவாறு குருபக்தியில் உங்கள் கடமையைச் செவ்வனே செய்யுங்கள் ! இறைவனை அடைவதற்கு அதுவே எளிமையான வழியாகும். உங்களுடைய பார்வை எப்பொழுதும் குற்றம் இல்லாததாக இருக்க வேண்டும்.   என்னுடைய கருத்தை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்களுடைய வீட்டில் என்னை நினைத்து தியானித்தால், நான் உங்களை  ஆசீர்வதிப்பேன்!
- ஸ்ரீ கஜானன் மஹாராஜ்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 7, 2020

ஸத்குருவின் சரித்திரத்தைப் படியுங்கள்

Word's Of Shirdi Sai Baba

ஸத்குருவின் சரித்திரத்தைப் படிப்பதாலேயே நமக்கு வரவிருக்கும் பேராபத்துகள் தவிர்க்கப்பட்டு,  நாம் மிகச்சிறந்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதை உணர முடியும்.  ஸத்குருவின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. உண்மையான ஸத்குருவானவர் ஒரு பக்தனுக்கு காமதேனுவைப் போன்றவர். காமதேனு நாம் நினைத்த அனைத்தையும் தரும் தெய்வமாகும்.   ஆனால் நம் ஸத்குருவோ, நாம் நினைக்க மறந்ததைக் கூட,  நினைத்துப் பார்க்காததையும்கூட நமக்கு தரவல்லவர்.   ஸத்குருவின் தரிசனம் கிடைத்த பிறகு ஒவ்வொரு பக்தனும் புதுப்பொலிவுடன் திகழ ஆரம்பிக்கிறான்.   இந்த அற்புதங்கள் யாவும் சத்தியமான ஸத்குருவின் அற்புதங்கள் ஆகும். இவற்றில் ஒரு பகுதியைக் கூட யாராலும் மறுக்க முடியாது.
(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 6, 2020

அபாயங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் நீக்கப்படும்

Image result for sai gajanan maharaj swami samarth photo | Swami ...

ஸத்குரு என்பவர் தம்மீது எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களை கங்கணம் கட்டிக்கொண்டு  காப்பாற்றுவார்‌ என்பது நிச்சயம். இதை மனத்திற்கொண்டு, ஒவ்வொரு பக்தரும் முழுமையான பக்தியையும், அசையாத நம்பிக்கையையும் கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தி, ஒருமுகமான சிந்தனையுடன் ஸத்குரு அவர்களை நோக்கி ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்தால், அவர்களின் அபாயங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் நீக்கப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை !

-(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )

Shri Gajanan Maharaj - God Pictures

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 5, 2020

குருவின் மீது நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும்

Trinity Gods

குருவைத் துதிப்பதற்கு மிஞ்சிய செயல் வேறொன்றும் இல்லை.   குருவே மும்மூர்த்திகளின் அவதாரம்.  கலியுகவாழ்வின் கடலைத் தாண்ட குருவின் பாத சேவை என்ற படகினால் மட்டுமே முடியும்.   என்றும் குருவை பயபக்தியுடன் பூஜிப்பவர்கள் இல்லற வாழ்வின் துன்பங்களை வென்று முக்தி அடைவார்கள்.   குருவின் வாக்கு நமக்கு காமதேனுவைப்  போன்றது.  அவரின் அருளால் நமக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும்.  குருவின் மகிமை மூடர்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் கவலைப்படாதீர்கள் ! பயப்படாதீர்கள் ‌! குருவின் மீது  திடநம்பிக்கை இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் !

Dwarakamai Sai: AVATARS OF LORD SRI DATTATREYA......


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...