
ஸத்குருவின் சரித்திரத்தைப் படிப்பதாலேயே நமக்கு வரவிருக்கும் பேராபத்துகள் தவிர்க்கப்பட்டு, நாம் மிகச்சிறந்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதை உணர முடியும். ஸத்குருவின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. உண்மையான ஸத்குருவானவர் ஒரு பக்தனுக்கு காமதேனுவைப் போன்றவர். காமதேனு நாம் நினைத்த அனைத்தையும் தரும் தெய்வமாகும். ஆனால் நம் ஸத்குருவோ, நாம் நினைக்க மறந்ததைக் கூட, நினைத்துப் பார்க்காததையும்கூட நமக்கு தரவல்லவர். ஸத்குருவின் தரிசனம் கிடைத்த பிறகு ஒவ்வொரு பக்தனும் புதுப்பொலிவுடன் திகழ ஆரம்பிக்கிறான். இந்த அற்புதங்கள் யாவும் சத்தியமான ஸத்குருவின் அற்புதங்கள் ஆகும். இவற்றில் ஒரு பகுதியைக் கூட யாராலும் மறுக்க முடியாது.
(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil