பக்தர்களின் நலனுக்காக ஞானிகளும், சாதுக்களும், ஸத்குருக்களும் கடினமான சோதனைகளைக்கூட தாங்களே தாங்கி, பிறரின் கர்மவினைகளைப் போக்கி, நற்பேறு அளிக்க வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். சில சமயம் இவர்களைப் போன்ற ஸத்குரு வாழ்ந்த காலத்தில் நாம் இல்லையே என்று மனம் ஏங்குகின்றது. ஆனால் அவர்கள் இன்னும் நம்முடன்தான் இருக்கிறார்கள். நம் உள்ளத்தில் வீற்றிருக்கிறார்கள். நாம் எத்தனையோ சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும், அதை அவர்கள் உடைத்து நமக்கு விடுதலை அளிப்பதை அவர்மீது நம்பிக்கை கொண்டவர்கள் இன்றளவும் நிச்சயமாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை !
(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம்)
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil