இயற்கைக்குப் புறம்பாக நிகழ்வுகள் நடக்கும்போது, மருத்துவர்கள் கைகட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அந்த சமயத்தில் ஸத்குருவும் ஞானிகளும் நம்மை கைவிடமாட்டார்கள். ஆனால் நாம் அதற்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். உண்மையானவர்களாக, பூரண நம்பிக்கையுடன், பக்தியோடும் விசுவாசத்தோடும் ஸத்குருவின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொள்பவர்களுக்கு, வாழ்க்கையில் எத்தகைய இடர்கள் வந்தாலும், ஸத்குரு தன் உண்மையான பக்தனுக்குப் பதிலாக அவற்றைத் தாமே எதிர்கொண்டு, அவற்றைத் தாமே ஏற்றுக்கொண்டு, அவர்களைக் காத்து ரட்சிப்பார். இதுவே ஸத்குருவின் மகத்தான மஹிமை.
( ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil