Wednesday, September 30, 2020

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்


பாபா, தனது பூதவுடலை விட்டு பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனக்காக பக்தர்கள் விரதம் இருப்பதில் விருப்பமில்லை. இதுவே தாயன்பு. தாயும் நீயே, தந்தையும் நீயே, உறவும் நீயே, நட்பும் நீயே என்று பாபாவிற்கு தினமும் ஆரத்தி பாடுகிறோம். அவரே நமக்கு எல்லாம் என்று ஆனபின் அவர்மீது நமது பக்தியை மெய்ப்பிக்க உடலை வருத்தி விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், சாயி சாயி என்று தனது பக்தன் கூறும்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சாயி என்று அழைத்தவுடனே ஷிரிடியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனது பக்தன் முன் தோன்றி அவனை காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார். சாதனைகளிலேயே மிகவும் எளியதும் மிக சிறந்ததுமானது சாயி நாமத்தை உச்சரிப்பதே ஆகும். ஆகவே சாயி பக்தர்கள் தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த சாயி நாமத்தை ( ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி, அல்லது ஓம் சாயிராம் அல்லது சாயி சாயி அல்லது ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ ) சொல்லுங்கள். சாயிபாபா என்ற தெய்வத்தின் மகிமையை வார்த்தைகளால் எவராலும் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அத்தகைய அனுபவத்தை பெற தினமும் பத்து நிமிடம் சாய் நாமத்தை சொல்லிவாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். 

"தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்." 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 29, 2020

சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்


பாபாவின் பக்தரான ராவ் பகதூர் ஹரி விநாயக் ஸதேயின் அனுபவம் ;

பாபா யாருக்கும் உபதேசம் அளித்ததில்லை. ஆகவே எனக்கு மந்திரோபதேசம் வேண்டுமென நான் அவரிடம் வேண்டவில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் மற்ற குருக்களிடம் உபதேசம் பெற நான் அழைக்கப்பட்டேன். பாபா இருக்கும்பொழுது மற்ற குருக்களிடம் இந்த நோக்கத்துடன் நான் சொல்லவேண்டுமா என்ற பிரச்னை எழுந்தது. பாபாவிடம் வேண்டினேன்; பாபா ஒப்புதல் அளிக்கவில்லை.
பாபாவால் முறைப்படி தீக்ஷை அளிக்கப்படவில்லை எனினும் பாபா திசைமாறா கவனத்துடன் நான் அவரையே நம்பியிருக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம். தனது பக்தனின் லௌகீக, ஆன்மீக நலன்கள் யாவற்றையும் கவனித்துக் கொள்ள அவர் சக்தி படைத்தவராகவும், தயாராகவும் இருந்தார்.
குரு பௌர்ணமி தினத்தன்று பாபாவை குருவாக எல்லா பக்தர்களும் கூட்டு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யும்படி என்னை பணித்தார். ஆனால் சிவராத்திரி நள்ளிரவில் அவரை சிவபெருமானாக நான் பூஜிக்க முயன்றபோது, அவர் அதை ஆமோதிக்கவில்லை. பாபா மற்றவர்களிடமிருந்து நான் உபதேசம் பெறுவதை விரும்பவில்லை எனினும் நான் சாதுக்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு அவர்களை உபசரிக்க வேண்டுமென விரும்பினார். 

"எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 28, 2020

வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் நமது பாபா
ஷாமாவின் தம்பியான பாவாஜி சாவூல்கிணற்றுக்கு அருகில் வசித்து வந்தார்.  பாவாஜியின் மனைவிக்கு அடிவயிற்றில் இரண்டு கட்டிகள் இருந்தது. அதனால் அடிக்கடி காய்ச்சலும், வாந்தி பேதியும் ஏற்பட்டது.

அந்த கட்டியின் வலி தாளாமல் பாவாஜியின் மனைவி துடிதுடித்து தினமும் தனது கணவரிடம் அழுது புலம்பினாள்.  இந்த வேதனையைப் பொறுக்க முடியாத பாவாஜி ஷீர்டிக்கு வந்து, தனது அண்ணன் ஷாமாவிடம் தனது மனைவிபடும் துன்பத்தை பற்றிக் கூறி உதவும்படி வேண்டினார்.

ஷாமா அவரை உடனடியாக மசூதிக்கு அழைத்துச் சென்றார்.  அங்கே பாபாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கச் சொன்னார்.  அப்போது ஷாமா பாபாவிடம்,  தனது தம்பி மனைவியின் துயரத்தை எடுத்துக் கூறி, "பாபா!  தாங்களே வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் ! தாங்களே இவர்களைக் காப்பாற்ற வேண்டும் !"  என்று கூறி,  தற்போதைக்கு தனது தம்பியுடன் ஊருக்கு போகவும் அனுமதி கேட்டார்.

பாபா ஷாமாவிடம் உதியைக் கொடுத்து ,  'இந்தா! இந்த உதியை கட்டிகளின் மீது பூசச் சொல்!  கொஞ்சத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வை!  இந்தப் பின்னிரவு நேரத்தில் நீ போக வேண்டாம்.  காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடு!" என்றார். 

பாபாவிடமிருந்து உதியைப் பெற்றுக் கொண்ட ஷாமாவின் தம்பி நேராக தனது வீட்டிற்கு சென்றார்.  அங்கு தனது மனைவிக்கு கட்டிகள் இருந்த இடத்தில் உதியைப் பூசிவிட்டு, கொஞ்சம் உதியை தண்ணீரிலும் கலந்து கொடுத்தார்.  அடுத்த நிமிடமே அவளுக்கு வலி குறைந்து வியர்த்துக் கொட்டி ஜுரம் இறங்கியது.  தூக்கமும் வந்தது.  நன்றாக தூங்கி காலையில் எழுந்து பார்த்தால்,  வயிற்றுக்கடியிலிருந்த கட்டியைக் காணவில்லை.  வாந்தி பேதியும் நின்றிருந்தது. பாவாஜியின் மனைவி பாபாவின் லீலையை எண்ணி வியந்தார்.

காலை நேரம் பசித்ததால் எழுந்து டீ போடத் துவங்கினாள்.  அந்த நேரம் ஷாமா அங்கு வந்தார்.  நேற்றிரவு முழுவதும் உடம்பு சரியில்லாமல் இருந்த பெண் சுறுசுறுப்பாக டீ போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஷாமா அதிசயித்தார். "காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடு!" என்ற "பாபாவின் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை"  என்று எண்ணி புல்லரித்து கண் கலங்கி நின்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 27, 2020

ஒழுக்கம் இல்லை என்றால் குருவினுடைய அருளை ஒரு துளியும் பெற இயலாது


ஸ்ரீவாசுதேவானந்த சரஸ்வதி சுவாமிகளைத் ( ஸ்ரீதேம்பே ஸ்வாமி ) தரிசனம் செய்வதற்காக அவர் தங்கியிருந்த  தத்தாத்ரேயர் ஆலயத்திற்கு ஒருநாள் ஒரு பார்வையற்ற  பக்தர் ஒருவர், தன் மனைவியல்லாத ஒரு பெண்ணுடன் வந்திருந்தார்.  அதனால் அப்பெண்ணை ஆலயத்தின் வெளியிலேயே நிற்கச் சொல்லிவிட்டு, தான் மட்டும் ஸ்வாமியைக் காண ஆலயத்தின் உள்ளே சென்றார்.

ஆலயத்தின் உள்ளே சென்றதும் ஸ்வாமியை வணங்கிவிட்டு, "ஸ்வாமி ! எந்த பாவமும் அறியாத அடியேனுக்கு பார்வை கிடைக்க அருள் புரியுங்கள் தேவா ! நான் தங்களின் பக்தனாவேன் !" என்று வேண்டினார்.

ஸ்ரீதேம்பே மஹாராஜ் அந்த பார்வையற்ற பக்தனிடம் , "முதலில் ஒரு கருத்தை உறுதி செய்வாயாக !  நீ என்னுடைய பக்தனா ?  அல்லது தெருவில் நிற்கும் அந்தப் பெண்ணின் பக்தனா‌? என்பதை தீர்மானித்துக் கொள் !  என்னுடைய பக்தனாக இருந்தால் அவளை விட்டுவிடு !" என்று கடுமையாக கூறினார்.

இதைக் கேட்ட அந்த பார்வையற்ற பக்தர் வெட்கித் தலைகுனிந்து‌ குருவிடம் என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் மனம் குறுகி விழிபிதுங்கி, ஸ்வாமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு உடனடியாக ஆலயத்தை விட்டு அகன்றார்.

ஸ்ரீதேம்பே ஸ்வாமி மகாராஜ் அவர்கள் இதன்மூலம்,  "குரு சேவை இறைசிந்தனை உள்ளவர்கள் தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக கண்ணியமிக்கவர்களாக இருக்க வேண்டும்‌‌ என்றும், அந்த ஒழுக்கம் இல்லை என்றால் குருவினுடைய அருளை ஒரு துளியும் பெற இயலாது !" என்பதை எல்லோருக்கும் வலியுறுத்தினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 26, 2020

குருவின் மீதான திடமான நம்பிக்கைஒருநாள் ஒரு பக்தர் ஸ்ரீதேம்பே மகாராஜ் ஸ்வாமி அவர்களிடம்,  "ஸ்வாமி ! ‌இவ்வுலக வாழ்க்கை எனும் சமுத்திரத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் !" என்றார்.   அப்போது மகாராஜ் அவர்கள் நீராடுவதற்காக நதிக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் அந்த பக்தனை தம்முடன் நதிக்கரைக்கு வருமாறு அழைத்தார். அவரும் சுவாமிகளுடன் சென்றார்.

நதிக்கரைக்கு வந்ததும், ஸ்வாமிகள் நீராடுவதற்காக நதியில் இறங்கினார். தன்னுடன் வந்த பக்தனைப் பார்த்து, " பக்தா ! நீயும் என் பின்னாலேயே தொடர்ந்து வா ! எதற்கும் பயப்படத் தேவையில்லை !" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நதியின் நடுப்பகுதியை, அதாவது ஆழமான பகுதியை நோக்கி நடந்து சென்றார். இதைக் கேட்டு சிறிது தூரம் ஸ்வாமிகளின் பின்னால் சென்ற அந்த பக்தன், ஸ்வாமி நதியின் ஆபத்தான ஆழமான பகுதியில் செல்வதைப் பார்த்த உடன் பயந்துகொண்டே,  "ஒருவேளை இந்த அலைகள் என்னை எங்காவது இழுத்துச் சென்றுவிட்டால்,  எனது உயிர் பிரிந்துவிடுமோ?  என் குடும்பம் என்ன ஆகும்? " என்று மனதில் நினைத்துக்கொண்டு, பயப்படாமல் தன்னுடன் வரச் சொன்ன ஸ்வாமிகள் மீது நம்பிக்கையின்றி மீண்டும் கரைக்குத் திரும்பிவிட்டான்.

ஸ்ரீதேம்பே ஸ்வாமி மகாராஜ் அவர்கள் நீராடிவிட்டு கரைக்கு வந்தவுடன், அந்த பக்தனைப் பார்த்து சிரித்துக்கொண்டே, "என் வார்த்தைகளை நம்பி இந்த நதியின் ஆழத்தைக்கூட கடக்க இயலாத உன்னால் எவ்வாறு பிறவிக்கடலை கடக்க இயலும் !  குருவின் மீதான திடமான நம்பிக்கையும் அசைக்க இயலாத பக்தியும் மட்டுமே, எப்பேர்ப்பட்ட நதியின் ஆழத்தை மட்டுமல்ல, சவால்கள் நிறைந்த பிறவிக்கடலையும் கடக்க இயலும் என்ற உண்மையை புரிந்துகொள் !" ‌என்று கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 9, 2020

நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்


"நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" 
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.
அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 8, 2020

நீ எனது பிடியிலேயே இருக்கிறாய்.எல்லா திசைகளிலும் நான் உன்னை  சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்? நீ  எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்? உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.(ஸ்ரீ சாய் சத்சரித்ர சாராம்சம்)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 6, 2020

சாயி என்ற பரம்பொருள்

Pin by Classics India on 3D Mural Oil paintings covered with pure Gold foil  | Baba image, Photo wallpaper, Tanjore painting

பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.
 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...