Saturday, September 26, 2020

குருவின் மீதான திடமான நம்பிக்கை



ஒருநாள் ஒரு பக்தர் ஸ்ரீதேம்பே மகாராஜ் ஸ்வாமி அவர்களிடம்,  "ஸ்வாமி ! ‌இவ்வுலக வாழ்க்கை எனும் சமுத்திரத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் !" என்றார்.   அப்போது மகாராஜ் அவர்கள் நீராடுவதற்காக நதிக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் அந்த பக்தனை தம்முடன் நதிக்கரைக்கு வருமாறு அழைத்தார். அவரும் சுவாமிகளுடன் சென்றார்.

நதிக்கரைக்கு வந்ததும், ஸ்வாமிகள் நீராடுவதற்காக நதியில் இறங்கினார். தன்னுடன் வந்த பக்தனைப் பார்த்து, " பக்தா ! நீயும் என் பின்னாலேயே தொடர்ந்து வா ! எதற்கும் பயப்படத் தேவையில்லை !" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நதியின் நடுப்பகுதியை, அதாவது ஆழமான பகுதியை நோக்கி நடந்து சென்றார். இதைக் கேட்டு சிறிது தூரம் ஸ்வாமிகளின் பின்னால் சென்ற அந்த பக்தன், ஸ்வாமி நதியின் ஆபத்தான ஆழமான பகுதியில் செல்வதைப் பார்த்த உடன் பயந்துகொண்டே,  "ஒருவேளை இந்த அலைகள் என்னை எங்காவது இழுத்துச் சென்றுவிட்டால்,  எனது உயிர் பிரிந்துவிடுமோ?  என் குடும்பம் என்ன ஆகும்? " என்று மனதில் நினைத்துக்கொண்டு, பயப்படாமல் தன்னுடன் வரச் சொன்ன ஸ்வாமிகள் மீது நம்பிக்கையின்றி மீண்டும் கரைக்குத் திரும்பிவிட்டான்.

ஸ்ரீதேம்பே ஸ்வாமி மகாராஜ் அவர்கள் நீராடிவிட்டு கரைக்கு வந்தவுடன், அந்த பக்தனைப் பார்த்து சிரித்துக்கொண்டே, "என் வார்த்தைகளை நம்பி இந்த நதியின் ஆழத்தைக்கூட கடக்க இயலாத உன்னால் எவ்வாறு பிறவிக்கடலை கடக்க இயலும் !  குருவின் மீதான திடமான நம்பிக்கையும் அசைக்க இயலாத பக்தியும் மட்டுமே, எப்பேர்ப்பட்ட நதியின் ஆழத்தை மட்டுமல்ல, சவால்கள் நிறைந்த பிறவிக்கடலையும் கடக்க இயலும் என்ற உண்மையை புரிந்துகொள் !" ‌என்று கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...