Tuesday, October 27, 2020

பாபாவே நமது வைத்தியர்

                                            பாபாவே நமது வைத்தியர்

                                             https://youtu.be/qO4m3raU8G4http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 22, 2020

நீ மிகவும் சஞ்சலமடைந்துள்ளாய்
" நீ மிகவும் சஞ்சலமடைந்துள்ளாய். எனக்கு பிக்ஷை கொடு. உனது உடல், மனம், முழுவதையும் பிக்ஷையாகக் கொடு " - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


1927ல் என் கிரகபலன் சுபகரமாக  இல்லை! என் தேக ஆரோக்யம் பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல்கள் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல்கள் தூரத்தில் அமைந்திருந்த சிவபெருமான் ஆலயத்திற்கு நான் சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு " சாயிபாபாவுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் வணங்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நலம் அபிவிருத்திக் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகிதாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் நாவை முணுமுணுக்க அவர்தாள் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார் ; " நீ ஒரு பெரும் மகானிடம் ( ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா ) தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற எளிய சாதுவிடம் ஏன் வரவேண்டும் ? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களைப் பற்றுகிறோம் ". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் தோன்றி " நீ மிகவும் சஞ்சலமடைந்துள்ளாய். எனக்கு பிக்ஷை கொடு. உனது உடல், மனம், முழுவதையும் பிக்ஷையாகக் கொடு " எனக் கூறினார். நான்
 பிக்ஷையை அளித்தேன். பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்கையில் தாங்கி சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் அன்பு காட்டியுள்ளார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப்பெற்றேன்.  -  நானா சாகேப் ராஸனே 
( சாயிபாபாவின் பக்தர் )

                                         * ஜெய்  சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 21, 2020

நானிருக்க பயமேன்

              " நானிருக்க பயமேன்? "

                                            - ஸ்ரீ ஷீரடி  சாய்பாபா.

 தனது பக்தர்களுக்கு பாபா அளித்த உறுதி மொழி இது. எந்தவித சங்கடங்கள் வரும்போதும் பாபாவின் இந்த உறுதிமொழியை நினைவில் கொள்ளுங்கள். அச்சம் கொள்ளத் தேவையில்லை. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 19, 2020

கண்கண்ட தெய்வம் பாபா


1986- ம் ஆண்டில் சீரடியில் பிளேக் வியாதி கடுமையாக இருந்தது.  துவாரகாமாயிக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் அல்வா பிரசாதம்(நைவேத்தியம்)  ஒரு தினம் கொண்டு வரப்படவில்லை.  பாபா அங்குள்ள மிட்டாய்க் கடைக்காரனிடம் சென்று இனிப்புகளை வாங்கி வரும்படி தனது பக்தரான நார்கேயை பணித்தார். நார்கே மிட்டாய்க் கடை காரன் மனைவியிடம் சென்று பாபாவின் உத்தரவை தெரிவித்தார். அவளது கணவன்  (மிட்டாய் கடைக்காரர்) பிளேக் நோய்க்கு பலியாகி இருந்தான். அவரிடம் பிரேதத்தை காண்பித்து அழுதுகொண்டே அலமாரியில் இருந்து வேண்டிய இனிப்புகளை எடுத்துச் செல்ல சொன்னாள்.  அப்படியே எடுத்துக் கொண்ட போதிலும் நார்கேயின்  தேகம் முழுவதும் வெலவெலத்துப் போய்விட்டது. அங்கிருந்து இனிப்பு பதார்த்தங்களை எடுத்துச் செல்வதால் தன்னையும் அவற்றை பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களையும் வியாதி தொத்திக் கொண்டுவிட்டால்!  இந்த எண்ணத்துடன் நார்கே பாபாவிடம் சென்றபோது பாபா, "சீரடியில் தங்குவதால் இறந்து விடுவார் என்றும், இங்கிருந்து போய் விடுவதால் உயிர் வாழலாம் என்றும் எண்ணுகிறாய். அப்படியல்ல.  (காலனால்) எவன் அடிக்கப்படவிருக்கிறானோ (எங்கிருந்தாலும்) அவன் அடிக்கப்படுவான். யார் இறக்கவேண்டுமோ இறந்தேயாக வேண்டும். எவர்கள் அணைக்கப்பட வேண்டுமோ அவர்கள் அணைக்கப் படுவார்கள் என்று கூறினார். மிட்டாய் கடைக்காரன் வீட்டு அல்வா யாவர்க்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஒருவரையும் ப்ளேக் பீடித்துவிடவில்லை. பாபாவின் சன்னதியில் இருக்கும் எந்த பக்தனையும்  அபாயங்கள் ஒன்றும் சாராது என்பதையும்,  மக்களின் நல்வாழ்வை எப்போதும் கண்காணித்து வரும் கண்கண்ட தெய்வம் பாபா  என்பதையும் உணர்ந்தார் பக்தர் நார்க்கே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸ்ரீ சாயிபாபா ' பல பிறவிகளாக நம்முடன் தொடர்பு உடையவர்


மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக, அவர்களைத் தம் பக்கம் இழுத்து, உதவி செய்து,பண்படுத்தி,ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச் செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயிநாத்தின் முக்கியப் பணியாகும். எல்லா ஆத்மாக்களும் ஆன்மீக முன்னேற்றத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பது பற்றியும் அவர் தெளிவாக அறிந்திருக்கிறார். அனவே அனைத்து ஆத்மாக்களையும் நற்பயன் அளிக்கும் முறையில் கட்டுபடுத்தி வழிகாட்டுகிறார். 
பாபா அடிக்கடி கூறுவார்- 'ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் இருந்தபோதும், என் பக்தரில் எவரேனும் ஒருவர் இறப்பைச் சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லாரையும் பற்றி எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்.'

ஒரு உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவைப் பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும். இந்த மனிதப் பிறவியின் துன்பங்களிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும்  விடுபட்டு ஆன்மீக முன்னேற்றம் காண்பதே, எல்லாவிதமான பிரார்த்தனைகள் , சாதனைகள், பூஜைகள் யோகப் பயிற்சிகளின் நோக்கமாகும். எனவே ஜீவாத்மாக்களை, முழுமையான உண்மைப் பொருளிடம் அழைத்துச் செல்லக் கூடிய சத்குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். இத்தகைய சத்குருவானவர், பிறப்பு, இறப்பு அற்றவர் என்பதால் அவருடைய பக்தர்களின் பல பிறவிகளுக்கும் அவரே வழிகாட்டியாய் அமைகிறார்.

பெற்றோர்கள் ஒரு பிறவியில் நம்முடன் தொடர்புடையவர்கள். ஆனால் ' ஸ்ரீ சாயிபாபா ' பல பிறவிகளாக நம்முடன் தொடர்பு உடையவர். தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என எல்லா மனித உறவுகளும் இறப்பு வரையே ஒருவருடன் கூட வரமுடியும். ஆனால், பாபா ஒருவர் மட்டும்தான் தமது பக்தர்களாகிய நமது இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும்.

      *  ஜெய் சாய்ராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 18, 2020

உன் ஆர்வத்தை என்பால் திருப்பு

நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன். என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு. என் பார்வையை உன்மேல் வைப்பேன். ஆகையால் மந்திரம், தந்திரம், உபதேசங்கள் எல்லாம் வீண். என் பேச்சை கேள். விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள். என்னையே லட்சியமாகக் கொள். உனக்கு நிச்சயம் சுபம் விளையும். என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 17, 2020

எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌


என்னிடத்தில் எப்போதும் நம்பிக்கையும் பொறுமையும்‌ கொண்டிருங்கள் !  குருவான நான் உங்களிடமிருந்து வேறெதையும் ஒருபோதும் எதிர்பார்க்கவுமில்லை .  நான் உங்களை ஒருபோதும் புறக்கணிக்கவுமில்லை.  எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌.  

நான் உங்களுடனே தங்கி வாழ்கிறேன். ஒரு சில சமயம் உங்களைப் பிரிந்து இருப்பேன் எனினும், என்னுடைய அன்புடமைக்குத் தேவையோ, அன்பின்மையையோ நான் காட்டுவதில்லை.

தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன் அருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணி வளர்ப்பதைப் போன்ற‌ அதேவிதமாக, நானும் உங்களை என் கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் பேணிப் பாதுகாப்பேன் !


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 13, 2020

குருவிற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய மிகமிக முக்கியமான தட்க்ஷிணை


குருவிற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய மிகமிக முக்கியமான தட்க்ஷிணை ஸபூரி. "பொறுமை" அல்லது "விடாமுயற்சி" என்பதே ஸபூரி ஆகும்.

குருவினிடத்தில் பொறுமையுடனும், மிகநீண்ட காலம் அவருக்குச் சேவை செய்யும் விடாமுயற்சியுமே இவ்வுலக வாழ்க்கை எனும் பெருங்கடலை கடப்பதற்கான தோணியாகும்.  அது துன்பக் கடலில் தத்தளிக்கும் உங்களை அக்கரையில் சேர்ப்பிக்கும்.  

குருவினிடத்தில் பொறுமை காப்பது பாவங்களையும் வேதனைகளையும் அறவே நீக்கும். பல்வேறு வகைகளில் உங்களுக்கு நேரவிருக்கும் பேராபத்துக்களை விலக்கும். எல்லா அச்சங்களையும் அப்பால் அகற்றும்.  கடைமுடிவாக, அது உங்களுக்கு மிகச்சிறந்த வெற்றி அளிக்கும்.

பொறுமை என்பது மனிதனிடத்தில் உள்ள நற்பண்புகளின் சுரங்கம்.  அது நல்ல எண்ணங்களின் கூட்டாளி.

இந்த மிகச்சிறந்த தட்க்ஷிணையை நீங்கள் எனக்கு அளித்தால் நான் மனம் மகிழ்வேன் !


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 4, 2020

சாய்பாபா என்பவர் யார்?அவரிடம் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும்?

சாய்பாபா என்பவர் யார்?  அவர் எப்பேர்ப்பட்ட அவதாரம் ? ‌அவரிடம் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி ராமகிருஷ்ண ஸ்வாமிஜி என்பவருக்கு அவரது ஆன்மீக குருவான பூஜ்யஸ்ரீ நரசிம்மசுவாமிஜி அருளி போதித்த உரை :


"அமைதியாய் அமர்" எனும் சாய்பாபாவின் அறிவுரையை என்றும் மறக்காதே !  பொறுமை,  பொறுமை, காத்திரு !   இந்தப் பொறுமை இறுதியில் கனி தரும்.

"முதலில் சாய்பாபாவின் பாதாரவிந்தங்களில் கவனம் வை!  பின் அப்படியே மேல்நோக்கி கவனத்தைக் கொண்டு போ !  சாய்பாபா பொன்னுடலின் ஒவ்வொரு பாகமாய் கவனத்தைக் குவித்தபடி தியானித்து இறுதியில் அத்திருவுருவம் முழுக்கவும் நினை! 

இப்படியே அவதாரத் திருவுருவின் கீழிருந்து மேலும்,  மேலிருந்து கீழும்,  ஆனால்,  "முழு விடுதலை தேவை!" என்ற ஒரே நோக்கோடு மனம் முழுவதையும் பாபாவின் பாதாரவிந்தங்களில் மட்டுமே குவித்து வைத்து பிரார்த்தி !.   அந்த "இறைமகனாரின் முழுக் கருணையும் உனக்கு கிடைக்கும் !".  முழு ஆனந்தம் - சச்சிதானந்தம் - உன்னை மேவும்.

பிரம்மாவுக்கும்,  விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்,  சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது.  சாய்பாபா எனும் பரிசுத்தமான மாசுமறுவற்ற எங்கும் நிறைந்த ஒரே பரப்பிரம்மத்தில் மும்மூர்த்திகளையும் ஒருங்கே நீ காணலாம்.

கட்டுப்படுத்தி பூட்டி மறைத்து வைக்காமல்,  அவருக்குள் இருக்கும் ஆனந்தமயமான இறைமையை,  அங்கெங்கனாதபடி எங்கெங்கிலும் காட்டி ஆடிக் கொண்டிருக்கிறார் சாய்பாபா.  இது உன் நினைவிலிருக்கட்டும் !

நிஜ சாதுக்களும் சந்நியாசிகளும் அப்படி எங்கும் நிறைந்துள்ள அந்த ஆனந்தத் தாண்டவத்தைக் கண்குளிர காணுவதிலேயே ஆனந்தமடைந்துக் கொண்டிருக்கின்றனர்.  நீயும் அதை முழுமையாக உணரலாம்.  

அவரது பாதங்களுக்குள் வந்து, முழுமையாக அடைக்கலம் அடைந்துவிடுவோருக்கு அவரது கருணை மழையைக் கட்டுக்கடங்காது பொழிந்து தள்ளுவார்.

"சாய்பாபா"தான் உன் தாய் !  அவளுக்கு உன் பசி தெரியும்.  ஊட்டுவார்.  ஆன்மீகப் பசியெடுத்துக் கதறும் உன் கூக்குரலைப் பசியில் அழும் குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு உடனே தீர்க்கும் தாயாய் வந்து அவர் தீர்த்துவிடுவார்.

ஆனால் ஒன்றினை மட்டும் மனதில் எழுதிக்கொள் !... "மிக உயர்ந்த ஆன்மீக பலாபலன்களை எட்ட வேண்டுமென்றால்,  எல்லா வகையிலும் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்து ஒழுகாது முடியாது!"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 3, 2020

பாபாவே கண்கண்ட தெய்வம்
ஆலந்தி எனும் கிராமத்தில் வசித்தவர் ஒரு துறவி.  என்னதான் சம்சார வாழ்க்கையில் துறவறம் பூண்டிருந்தாலும்,  ஊழ்வினை காரணமாக அவர் காதில் தாளமுடியாத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். 

துறவியின் வேதனையைக் கேள்விப்பட்ட அந்த கிராமத்து விவசாயி ஒருவர்  துறவியிடம் சென்று,  "அய்யா !  ஷீரடி என்றொரு கிராமம் இருக்கிறது.  அங்கே சாய்பாபா எனும் சாது ஒருவர் இருக்கிறார்.  அவர் தரும் உதியே பக்தர்களின் கடும் நோய்களையும் தீர்த்து விடுவதாக பலனடைந்தோர் கூறுகின்றனர்.  தாங்களும் அங்கு சென்றுதான் பாருங்களேன்!" என்றார்.

அதைக் கேட்ட துறவி உடனடியாக ஷீரடிக்கு சென்றார்.  அங்கே இருந்த ஷாமாவை அணுகி விபரத்தைக் கூற, ஷாமாவும் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்.

ஷாமா பாபாவிடம் மெதுவாக , "பாபா !  இவருக்கு காதில் சொல்லமுடியாத வலியும் வீக்கமும் பல வருடங்களாக இருந்ததால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  ஆனாலும் அந்த வலியும் வீக்கமும் இன்னும் குறைந்தபாடில்லை !  டாக்டரிடம் கேட்டால் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறுகிறாராம். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அரற்றுகிறார்.  தாங்கள் உதி அளித்து ஆசி அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். !" என்றார்.

பாபா அந்த துறவியை அருகில் அழைத்து, "அல்லாஹ் அச்சா கராஹே !" என்று கூறி தனது உதியை அவரது காதில் ஊதினார்.  துறவியும் பாபாவை பணிவுடன் வணங்கிவிட்டு ஊர் திரும்பினார்.

ஒருவாரம் கழித்து ஆலந்தி சுவாமிகள் ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.  அதில் "தனக்கிருந்த  காது வலியும் வீக்கமும் பாபா ஊதிய காற்றிலேயே பறந்துவிட்டதாகவும் ,   ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்று டாக்டர் தீர்க்கமாக சொல்லிவிட்டதாகவும்,  பாபாவே எனது கண்கண்ட தெய்வம் !"  என்றும் எழுதி இருந்தார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 1, 2020

விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு


ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விருப்பவில்லை.
என் தோழர்களைக் காண்பித்து, "இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு" என பாபா பணித்தார். ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர்  ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும்வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. "நீ உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரும்வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும்" என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன். - ஸாந்தாராம் பலவந்த் நாச்னே.

"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக்    கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.".
         - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...