என்னிடத்தில் எப்போதும் நம்பிக்கையும் பொறுமையும் கொண்டிருங்கள் ! குருவான நான் உங்களிடமிருந்து வேறெதையும் ஒருபோதும் எதிர்பார்க்கவுமில்லை . நான் உங்களை ஒருபோதும் புறக்கணிக்கவுமில்லை. எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்.
நான் உங்களுடனே தங்கி வாழ்கிறேன். ஒரு சில சமயம் உங்களைப் பிரிந்து இருப்பேன் எனினும், என்னுடைய அன்புடமைக்குத் தேவையோ, அன்பின்மையையோ நான் காட்டுவதில்லை.
தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன் அருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணி வளர்ப்பதைப் போன்ற அதேவிதமாக, நானும் உங்களை என் கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் பேணிப் பாதுகாப்பேன் !
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil