Monday, November 30, 2020

NOVEMBER 30


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன்னுடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை, உனக்கு எந்த தீங்கும் நேராது
"காகா துலா கால்ஜி கஸ்லி மலா சாரா கல்ஜி ஆஹே "(மராத்தி மொழி), அதாவது, " காகா, உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும் ? எல்லா பொறுப்புகளும் என்னுடையவை " 

- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா


 ( பாபா தனது பக்தரான எச்.எஸ். தீக்ஷித்திடம் கூறியது. திரு. தீக்ஷீத் பாபாவிடம் வைத்திருந்த திடமான விஸ்வாசத்திற்காக பாபா விசேஷமாக அருளிய வாக்கு இது. மானுட சக்திகளைக் கொண்ட எந்த ஒரு சாதாரண மனிதனும் அத்தகைய சாஸனத்தை அளிக்கமுடியாது. ஆனால், அதை அருளியது தெய்வீக அவதாரமான பாபா.)

பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த எல்லா பக்தர்களுக்கும், பாபாவின் இந்த வாக்குறுதி பொருந்தும். அத்தகைய  பக்தன் மற்றும் அவனது குடும்பத்தினரின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது, எந்த வித தீங்கு நேரும் என நினைக்கவும் அவசியமில்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 28, 2020

NOV 28
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

தெய்வமும் பாபாவும் ஒன்றே
கண்டேபா கோவில் பூசாரியும் பாபாவின் மிக நெருங்கிய பக்தருமான மஹல்சபாதியின் மகன் ஸ்ரீமார்த்தாண்ட் என்பவர் ஒருநாள் கண்டேபா கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அப்போது பாபா அங்கே வர மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணங்கினார்.

பாபா கண்டேபா கோவிலுக்குள் போவதை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென பாபா கண்டேபா சுவாமியின் விக்ரஹத்துக்குள் ஊடுறுவி விட்டார்.  மார்த்தாண்ட் விரைந்து சென்று விக்ரஹத்துக்கு முன்னாலும் பின்னாலும் பாபாவைத் தேடினார்.  ஆனால் பாபா அங்கே இல்லை.

'கோவிலுக்குள் வந்த பாபா எங்கே சென்றார்!'  என்று மார்த்தாண்ட் பிரம்மித்து நிற்கையிலே,  பாபா மீண்டும் கண்டேபா விக்ரஹத்தின் உள்ளிருந்து வெளிப்பட்டு மார்த்தாண்டை  புன்சிரிப்புடன் நோக்கிவிட்டு  கோவிலின் வெளியே சென்றார்.

அதுநாள்முதல் மார்த்தாண்ட், "தெய்வமும் பாபாவும் ஒன்றே!" என்பதை புரிந்துகொண்டார்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 27, 2020

Appeal to SAI Devotees By Shirdi Sai Sansthan
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

november 27
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார்


"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" 
-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 26, 2020

சாயி நாம ஜெபம்


PLEASE SUBSCRIBE TO SHIRDI SAIBABA STORIES YOUTUBE CHANNEL
                         https://www.youtube.com/channel/UCE_0CFsEDbiDOuOPAGP4Z4Q


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

மஹாவல்லமை பொருந்திய ஸமர்த்த ஸத்குரு


பக்தர்களின் அன்பைச் சுவைப்பதற்காகவும்,  அவர்களுடன் லீலைகள் புரிவதற்காகவுமே,  உருவமற்ற இறைவனான ஸாயீ உருவத்தையும் பன்மையையும் ஏற்றுக்கொண்டவர்.  பக்தர்களின் மீதான அவருடைய அன்புக்கு எல்லையே இல்லை.

எவர் எல்லா உயிர்களிலும் உறைகின்ற மெய்யுணர்வோ,  எவர் எல்லா ஞானங்களுக்கும் ஆதாரமோ,  எவர் தம்மை அனைத்து உயிருள்ள பொருள்கள் மூலமாகவும்,  உயிரற்ற ஜடப்பொருட்கள் மூலமாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறாரோ,  அந்த காருண்ய மூர்த்தியே ஸாயீபாபா !

பாபாவே நம்முடைய வாழ்க்கைப் பாதையும்,  நாம் முடிவாக சென்றடையும் இடமும் ஆவார்.  அவரே நம் வாழ்க்கைப் பயணத்தில் இளைப்பாறும் சோலை.   பாபா  ஒருவரே,  கலியுக வாழ்வில் நம்மைப் பீடிக்கும் துன்பங்களையும், வலிகளையும் சுகப்படுத்தும் மஹாவல்லமை பொருந்திய ஸமர்த்த ஸத்குரு !


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 25, 2020

பாபா பக்தனிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?

சாதாரண மனிதர்களாகிய நம்முடைய அறிவுப்பூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் பாபாவிடம் எடுபடாது !   பாபாவின் பக்தியில்,  உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டும் என்று விரும்புபவர்,  அகந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு அமைதியான வாழ்க்கை நடத்த வேண்டும்.  அதையே பாபா தன் பக்தனிடம் எதிர்பார்க்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 24, 2020

உனக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள வேண்டும்http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நம்பிக்கை பொறுமைபாபாவினுடைய வழிமுறைகள் ஆராய்ச்சிக்கும், காரணகாரிய விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவை !. நேரம் வரும் போது பிரச்சினைகள் தீர்வு செய்யப்படும்.  ஆனால் அதுவரை,  நம்பிக்கையுடன் பொறுமையாக குரு-சிஷ்ய உறவுக்கு மதிப்புக் கொடுத்து, பாபாவிடம் பொறுப்பை ஒப்படைத்து வாழ்ந்தால் மிகச்சிறந்த நன்மை கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை !.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 23, 2020

நமது பாவங்களைக் கழுவித் தள்ள....


ஜனங்கள் தங்களுடைய அகோரமான பாவங்களைக் கழுவித் தள்ளுவதற்காக கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள்.   ஆனால்,  கங்கையோ தன்னுடைய பாவத்தைத் துடைத்துக்கொள்ள ஸாயீபாபாவைப் போன்ற முனிவர்களின் பாதங்களை அடைக்கலம் தேடி சரணடைகிறாள்.  நமது பாவங்களைக் கழுவித் தள்ள, ஸாயீயின் பாதங்களை விட்டுவிட்டு கங்கைக்கும் கோதாவரிக்கும் புனிதப் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை ! பாபாவின் ஸ்தோத்திரத்தை கேட்டால் போதும்.  சுவாரசியமான ஸாயீயின் கதைகளை பக்தியுடன் பாராயணம் செய்தாலே  போதுமானது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 21, 2020

என் சமாதி பேசும்
"நீ எங்கு சென்றாலும், நான் உனக்கு முன்பாகவும் பின்னேயும் செல்வேன்".
"என் சமாதி பேசும், என் பெயர் பேசும், என் உடல் மண்ணும் பதில்கள் கூறும்".
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. ( பாபா தனது பக்தரான புரந்தரேவிற்கு அளித்த உறுதிமொழிகள் இவை. இவ்வுறுதிமொழிகள் புரந்தரேக்கு மட்டுமா? பாபாவிடம் சரணடைந்த அனைவருக்கும் பொருந்தும் )


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 20, 2020

என்னை மட்டுமே நினைவில் நிறுத்தி
எவனொருவன் தனது அஹங்காரத்தை ஒதுக்கித் தள்ளி, எனக்கு பணிவுள்ள சேவகனாக இருந்து, அடிக்கடி என்னை மட்டுமே நினைவில் நிறுத்திக்கொண்டு, எனக்கு நன்றி செலுத்தி, என்னை முழுமையாக நம்புகிறானோ அவனது பந்தங்கள் அறுபட்டு போகின்றன. அவன் முக்தி அடைவது உறுதி !

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 19, 2020

ஸத்குருவின் உதவியின்றி செய்யப்படும் எல்லாச் செயல்களும் பலனில்லாமலும், பயனில்லாமலும் போய்விடும்.
ஸத்குரு என்பவர் கருணைக்கடல் எனும் மஹா சமுத்திரம்.  ஸத்குரு என்பவர் எப்போதும் உறங்காமல் நம்மைக் காத்து ரட்சித்துக் கொண்டு வருபவர். தற்போதைய  சூழ்நிலையில் ஸத்குருவின் உதவியின்றி செய்யப்படும் எல்லாச் செயல்களும் பலனில்லாமலும், பயனில்லாமலும் போய்விடும். ஸத்குருவிடம் சரணாகதி அடைந்தவர்களின் ஒவ்வொரு முயற்சியும் சிரமமின்றி சுலபமாக வெற்றியடைகிறது. கலியுக ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் வல்லமை  பெற்ற தெய்வீகசக்தி ஸத்குருவைத் தவிர வேறு யாரும் கிடையாது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 18, 2020

என் பக்தர்களை ஏமாற்றி விடமாட்டேன்
என் பக்தர்களைக் காப்பதற்காக என் கைகளை நான் எப்போதும் விரித்தே வைத்திருக்கிறேன்.   அவர்களை நோக்கி எந்தவிதமான கெடுதலையும் துயரத்தையும் நெருங்க விடமாட்டேன்.  நான் என் பக்தர்களை ஏமாற்றி விடமாட்டேன்.   என்னிடம் ஒருமுறை வந்த பக்தன் என்னை விட்டுத் தொலைந்து போகும்படியோ,  விலகிப் போகவோ விடமாட்டேன். என்னிடம் வரப்பெற்ற ஒவ்வொருவருக்காகவும் நான் கடவுளிடம் கணக்கு சொல்ல வேண்டி உள்ளது.

(மண்ணிறங்கி வந்த தெய்வம் பாபா நூலிலிருந்து..)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 17, 2020

என்னையே எப்போதும் நினையுங்கள்
பயப்படாதிருங்கள்‌ ! ஏன் நீங்கள் பத்து ஜென்மங்கள் கஷ்டப்பட வேண்டும்? என்மீதான நம்பிக்கை பூரணமாக இருந்தால் , பத்தே நாட்களில் உங்கள் தொல்லைகளையும்  ஊழ்வினைகளையும் அழித்து உங்களைக் காப்பாற்ற முடியும் ! உங்களுக்கு இகபர நலன்களை அளிக்க நான் இவ்விடத்தில் இருக்கும்போது ஏன் சாவதற்கு வேண்டிக்கொள்ள வேண்டும்‌? உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள் ! நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் !  என்னையே எப்போதும் நினையுங்கள் ! நான் உங்களைக் காப்பாற்றிக் கவனித்துக் கொள்கிறேன் !

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 14, 2020

பாபா நிகழ்த்திய அற்புதம்

     
       இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 

                                          https://youtu.be/lRjO_KyMoDw

                                       பாபா நிகழ்த்திய அற்புதம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 5, 2020

ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார்
குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட  மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...