பக்தர்களின் அன்பைச் சுவைப்பதற்காகவும், அவர்களுடன் லீலைகள் புரிவதற்காகவுமே, உருவமற்ற இறைவனான ஸாயீ உருவத்தையும் பன்மையையும் ஏற்றுக்கொண்டவர். பக்தர்களின் மீதான அவருடைய அன்புக்கு எல்லையே இல்லை.
எவர் எல்லா உயிர்களிலும் உறைகின்ற மெய்யுணர்வோ, எவர் எல்லா ஞானங்களுக்கும் ஆதாரமோ, எவர் தம்மை அனைத்து உயிருள்ள பொருள்கள் மூலமாகவும், உயிரற்ற ஜடப்பொருட்கள் மூலமாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறாரோ, அந்த காருண்ய மூர்த்தியே ஸாயீபாபா !
பாபாவே நம்முடைய வாழ்க்கைப் பாதையும், நாம் முடிவாக சென்றடையும் இடமும் ஆவார். அவரே நம் வாழ்க்கைப் பயணத்தில் இளைப்பாறும் சோலை. பாபா ஒருவரே, கலியுக வாழ்வில் நம்மைப் பீடிக்கும் துன்பங்களையும், வலிகளையும் சுகப்படுத்தும் மஹாவல்லமை பொருந்திய ஸமர்த்த ஸத்குரு !
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil