Thursday, December 31, 2020

உன்னுடைய எதிர்காலம் சந்தோஷமானதாகவும் அருமையானதாகவும் திகழும்


நான் எப்போதும் உன்னுடனேயே தான் இருக்கிறேன். நீ கவலைபடத் தேவையில்லை. எத்தனைக்கெத்தனை நீ இப்போது கஷ்டங்களை அனுபவிக்கிறாயோ அத்தனைக்கத்தனை எதிர்காலம் சந்தோஷமானதாகவும் அருமையானதாகவும் திகழும் - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா. ( பாபா தனது பக்தர் உபாசனி பாபாவிடம் கூறியவை )


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 30, 2020

பாபாவிடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும் ?


சாய்பாபா என்கிற மகத்தான தெய்வீக அவதாரத்திடம் நம்பிக்கை வைப்பவன், அவ்வாறு வைத்து விட்டோமே என எந்த கால கட்டத்திலும் வருந்த வேண்டியதில்லை. பின்னோக்கி நடக்க வேண்டியதில்லை. நம்பிக்கை வைத்த ஒருவன் தன் சுபாவத்தில் உயருகிறான் என்பதையும், இந்த படிப்படியான முன்னேற்றம் பாபாவால் உறுதி அளிக்கப்பட்ட  உன்னத பலன்களைப் பெற வழி வகுக்கும் என்பதையும் அனுபவம் காட்டும். சில சமயங்களில் பாபா, தம் பக்தனை எந்த பாதையில் இட்டுச் செல்கிறார் என்பதை மறைத்து விடுவது அவனுடைய நம்பிக்கையை திடப்படுத்தவே. தன்னிடம் தஞ்சம் புகுந்தவனை எந்த திக்கிலிருந்தும் தோன்றும் எந்தவிதமான ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதாக பாபா உறுதியளித்துள்ளார். ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பாபா மீதான நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். பாபாவிடம் லௌகீக பலன்களை எதிர்பார்த்து வந்து கிட்டாமல் ஏமாற்றமடைந்தவர்கள் அவ்வாறு கிட்டாதது அவர்கள் எதிர்கால நன்மையை பாபா கருத்தில் கொண்டதால் தான்.  
 " பல ஜென்ம புண்ணியத்தினால் பாபாவின் தர்பாரில் இணைத்துள்ளோம். இனி நமக்கு கவலை இல்லை. எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் வாழும் நாம், எந்த சூழ்நிலையிலும் உங்கள் மீதான நம்பிக்கை குறையவே கூடாது என்ற ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் பாபா முன் வைப்போம். வேறெந்த வேண்டுதலும் வேண்டாம்."


   PLEASE CLICK THE LINK BELOW TO BUY THIS BOOK
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 29, 2020

வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் பாபா/ sai satcharithra tamil book

PLEASE CLICK THE LINK TO BUY SAI SATCHARITHRA BOOK ONLINE
 

ஷாமாவின் தம்பியான பாவாஜி சாவூல்கிணற்றுக்கு அருகில் வசித்து வந்தார்.  பாவாஜியின் மனைவிக்கு அடிவயிற்றில் இரண்டு கட்டிகள் இருந்தது. அதனால் அடிக்கடி காய்ச்சலும், வாந்தி பேதியும் ஏற்பட்டது.

அந்த கட்டியின் வலி தாளாமல் பாவாஜியின் மனைவி துடிதுடித்து தினமும் தனது கணவரிடம் அழுது புலம்பினாள்.  இந்த வேதனையைப் பொறுக்க முடியாத பாவாஜி ஷீர்டிக்கு வந்து, தனது அண்ணன் ஷாமாவிடம் தனது மனைவிபடும் துன்பத்தை பற்றிக் கூறி உதவும்படி வேண்டினார்.

ஷாமா அவரை உடனடியாக மசூதிக்கு அழைத்துச் சென்றார்.  அங்கே பாபாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கச் சொன்னார்.  அப்போது ஷாமா பாபாவிடம்,  தனது தம்பி மனைவியின் துயரத்தை எடுத்துக் கூறி, "பாபா!  தாங்களே வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் ! தாங்களே இவர்களைக் காப்பாற்ற வேண்டும் !"  என்று கூறி,  தற்போதைக்கு தனது தம்பியுடன் ஊருக்கு போகவும் அனுமதி கேட்டார்.

பாபா ஷாமாவிடம் உதியைக் கொடுத்து ,  'இந்தா! இந்த உதியை கட்டிகளின் மீது பூசச் சொல்!  கொஞ்சத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வை!  இந்தப் பின்னிரவு நேரத்தில் நீ போக வேண்டாம்.  காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடு!" என்றார். 

பாபாவிடமிருந்து உதியைப் பெற்றுக் கொண்ட ஷாமாவின் தம்பி நேராக தனது வீட்டிற்கு சென்றார்.  அங்கு தனது மனைவிக்கு கட்டிகள் இருந்த இடத்தில் உதியைப் பூசிவிட்டு, கொஞ்சம் உதியை தண்ணீரிலும் கலந்து கொடுத்தார்.  அடுத்த நிமிடமே அவளுக்கு வலி குறைந்து வியர்த்துக் கொட்டி ஜுரம் இறங்கியது.  தூக்கமும் வந்தது.  நன்றாக தூங்கி காலையில் எழுந்து பார்த்தால்,  வயிற்றுக்கடியிலிருந்த கட்டியைக் காணவில்லை.  வாந்தி பேதியும் நின்றிருந்தது. பாவாஜியின் மனைவி பாபாவின் லீலையை எண்ணி வியந்தார்.

காலை நேரம் பசித்ததால் எழுந்து டீ போடத் துவங்கினாள்.  அந்த நேரம் ஷாமா அங்கு வந்தார்.  நேற்றிரவு முழுவதும் உடம்பு சரியில்லாமல் இருந்த பெண் சுறுசுறுப்பாக டீ போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஷாமா அதிசயித்தார். "காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடு!" என்ற "பாபாவின் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை"  என்று எண்ணி புல்லரித்து கண் கலங்கி நின்றார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

SAIBABA TAMIL SERIAL CD

           PLEASE CLICK THE LINK BELOW TO BUY SAIBABA TAMIL SERIAL CD


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 28, 2020

மண் மண்ணோடு சேர்ந்ததற்கு முட்டாள்தனமாக அழலாமா?


பம்பாயில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தவர் 
திரு.பிரதான்.  ஆச்சாரமான, மிகச் சிறந்த பக்திமான்.  இவரது ஏழு வயது மகன் திடீரென இறந்துவிட்டான். இந்த திடீர் நிகழ்வு பிரதானை பெரிதும் உலுக்கியது.  அவருக்கு ஐந்து மகான்கள் கனவில் வந்து ஆறுதல் கூறினர்.  அவர்களில் ஒருவர் சாய்பாபா.  அக்கணமே பாபாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு ஷீர்டிக்குச் செல்ல வேண்டும் என எண்ணினார்..

அந்த எண்ணத்தில்  சிறிதும் தாமதிக்காமல்  ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசித்தார். அப்போது பாபா, "மண் மண்ணோடு சேர்ந்ததற்கு முட்டாள்தனமாக அழலாமா?  ஒருநாள் நாமும் அங்கே போக வேண்டியவர்கள்தானே?" என்று கூறியதும் பிரதான் தம்பதிகள் அசந்து போயினர்.  மேலும் பாபா, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்களைக் குறிப்பிட்டு க்ஷேமம் விசாரித்தார்.

அதேநேரம்,  பிரதானின் குடும்ப ஆலோசகராகவும் அவர்கள் வீட்டில் பூஜை, ஹோமம், சுபகாரியங்கள், திதி முதலானவற்றை நடத்தும் பூஜாரியாகவும் இருந்த மாதவ்பட்டுக்கு , பிரதான் குடும்பத்தினர் பாபாவை வழிபடுவது பிடிக்கவில்லை.

பிரதானின் மற்றொரு மகன் பாபு நிமோனியா காய்ச்சல் முற்றி ஜன்னி வந்து பிதற்றிக் கொண்டிருந்தான்.  பாபுவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவன் அபாயகட்டத்தில் இருப்பதாகக் கூறினர்.

"இதற்கு காரணம், ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நீங்கள்  முஸ்லிம்பக்கிர் பாபாவை வழிபட்டதால் ஏற்பட்ட அபச்சாரமே !" என்று  மாதவ்பட் கூறினார்.

அன்று இரவு மாதவ்பட் கனவில் பாபா தோன்றி,   " பாபுவுக்கு காய்ச்சல் வந்ததற்கு நான் காரணமா ?" என்று அதட்டலாகக் கேட்டார்.  அதைக் கண்டு மிரண்ட மாதவ்பட் கனவைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.

மறுநாள் பிரதான் வீட்டில் மாதவ்பட் நடத்திய யாகம் பூஜை ஜபங்களும் பலிக்காமல் போக, பாபுவின் நிலை முன்பைவிட மோசமானது.  இவனையும் இழந்துவிடுவோமோ என்று பிரதான் தம்பதியர் கண்ணீர் உகுத்தனர்.

மாதவ்பட் மனம் திருந்தியவராக தன் அஹங்காரத்தை விடுத்து,  பூஜை அறையில் இருந்த பாபாவின் படத்தின் முன் விழுந்து,  "பாபா ! உன்னையே முழுமுதற் தெய்வமாக எண்ணிக் கும்பிட்ட பக்தர் வீட்டில் துக்கம் வரலாமா?   இன்று மாலை நான்கு மணிக்குள் குழந்தை கீழ் தளத்துக்கு வர முடிந்தால்,  நீங்களே மும்மூர்த்திகளின் அவதாரம் தத்தாத்ரேயர் என்பதை ஒப்புக்கொள்கிறேன் !"  என மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.

என்ன ஆச்சர்யம்!  பாபுவின் காய்ச்சல் படிப்படியாக குறைந்து,  முனகல் புலம்பல் நின்று நினைவு திரும்பியது.  சரியாக மாலை 4 மணிக்கு, "அப்பா !  நான் கீழே வந்து படுத்துக் கொள்கிறேனே?" என்று கேட்க,  ஆச்சர்யத்தோடு பார்த்த மாதவ்பட் பாபாவின் படத்தின் முன் வெட்கித் தலைகுனிந்தார்.  "அந்த நொடி முதலே மாதவ்பட் பாபாவின் தீவிர பக்தரானார்".
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 27, 2020

saibaba sayings
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது ?கேள்வி: நான் ஸ்ரீ சாயிபாபாவின் பக்தன். அவர் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என் வாழ்வில் நான் பல தவறுகளை செய்கிறேன். இந்தத் தவறுகளை செய்வது என்னுள் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது.  இதை என்னால் 
மாற்றிக்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து நான் வெளிவருவது எப்படி ?

பதில் : நீங்கள் செய்த தவறுகள் உங்கள் மனதை உறுத்துகிறது என்றால், நீங்கள் நல்லதை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். பாபா பரிசுத்தமே உருவானவர். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முழுமையானது என்றால் பாபா உங்கள் மனதை கட்டுப்படுத்துவார். தினமும் ஸ்ரீ சாயிபாபாவின் புனித நூலான ஸ்ரீ சாய் சத்சரிதத்தின் ஒரு அத்யாயமாவது படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் குறைகளை உங்களால் வெல்ல முடியும்.

கேள்வி : நான் தவறுகளை செய்ய ஆரம்பிக்கும்முன் பாபா என்னுடைய இருதயத்தில் இருந்து கொண்டு என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது ?

பதில் : உங்கள் மனசாட்சியே பாபா. நிச்சயமாக நீ செய்வது தவறு என்ற உள்மனக்குரலை கேட்பீர்கள். கெட்ட எண்ணம் தோன்றும்  போதெல்லாம் , எப்பொழுதும் உங்கள் எண்ணங்களை பாபாவை நோக்கி செலுத்துங்கள். தொடர்ந்து சாயிநாமத்தை  சொல்லி பழகுங்கள். சாயிநாமம் ( ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி ) சொல்வதற்கு இடமும், காலமும் தடை இல்லை.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 24, 2020

கவலையை விடு


உன்னுடைய கடந்தகால புண்ணியங்கள் நிறைய இருப்பதால் இங்கு வந்திருக்கிறாய். எவனொருவன் இந்த மசூதியில் காலடி எடுத்து வைக்கிறானோ அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த கெடுதலும் ஏற்படாது. எனவே கவலையை விடு.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 23, 2020

நம்முடைய கஷ்டங்களை போக்க பாபாவிடம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் ?


எப்போதெல்லாம் கஷ்டங்களை சமாளிக்கவேண்டி இருக்கிறதோ, அப்போதெல்லாம் பாபாவின் முன் நின்றாலோ, உட்கார்ந்தாலோ  போதும்.  ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியமில்லை . தமது குழந்தைகளின் உள்ளங்களில் இருப்பதை  அப்போதைக்கப்போதே பாபா அறிவார், வேண்டியதை  அவரே செய்து விடுவார். 
 ஒருசமயம் பாபாவின் பக்தையான தாராபாயின்  கண்களில் உபாதை.
 அவர் பாபாவின் முன் சென்று அமர்ந்தார். கண்களில் வலி.  நீர் பெருகிக் கொண்டிருந்தது. பாபா அவரை உற்று நோக்கினார். அவருடைய கண்வலி பறந்தது. நீர் வடிவது நின்றது. ஆனால் பாபாவின் கண்களிலிருந்து நீர் வந்து கொண்டிருந்தது.  மருத்துவர்களுக்கு வியாதிக்கு சரியான காரணம் என்னவென்பதை கண்டுபிடிக்க அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். ஆனால் பாபாவைப் பொறுத்தவரை நோயின் காரணத்தை கண்டுபிடித்தல்,  நோய்க்கு சிகிச்சை எல்லாமே அக்கணமே நிகழ்கின்றன.  ஆழப்பதிந்துவிட்ட சரீர உபாதை கணத்தில்  திடிரென நிவர்த்திக்கப்படுகிறது. அவரிடமிருந்து பாபா தமக்கு நோயை தரிவித்துக் கொள்வது, அதுவும் சங்கல்ப சக்தியினால் மட்டுமே, பிரமிக்கத்தக்கது. அசாதாரணமான ஒன்று. யார்தான் வியாதியை தன்னிடம் வரவழைத்துக் கொள்ள விரும்புவார்? பாபாவை போன்ற சமர்த்த சத்குருவால் மட்டுமே சாத்தியம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 21, 2020

உனக்கு நடப்பவையெல்லாம் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே
சம காலத்தில் நாம் மிகவும் எதிர்ப்பார்த்த  காரியங்கள் (வேலை, கல்வி, திருமணம் மற்றும் பல) தடைபட்டோ, நடக்காமலோ போகலாம். அதற்காக சிறிதும் வருத்தப்பட தேவையில்லை. ஏன்? பாபாவின் பிடியில் நாம் இருக்கும்போது, பாபாவன்றோ நம்முடைய காரியத்தை நடத்துகிறார். நாம் நிகழ் காலத்தை மட்டுமே அறிவோம். ஆனால் பாபாவுக்கு மட்டுமே தெரியும், எதிர்காலத்தில் நமக்கு எது நன்மை விளைவிக்கும், எது நல்லது என்று அதை மட்டுமே தனது குழந்தைகளுக்கு அளிக்கிறார். நாம் வேண்டுவதையெல்லாம் பாபா அளிப்பதில்லை.   நம்முடைய கர்ம பலனை பொறுத்தே நமது செயல்களில் வெற்றியும் தோல்வியும் அமையும். எல்லாம் விதிப்படி என்று நாம் கூறுவதும் இதைத்தான். ஆனால் மற்றவர்களுக்கும் குருவினிடம் சரணடைந்தவர்களுக்கும் இங்கு தான் வித்தியாசம் உள்ளது. பாபாவின் பாதுகாப்பில் இருக்கும்போது, கர்மா வலுவிழந்துபோகிறது. ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய காரியங்கள் பாபாவின் அருளால் சரியான நேரத்தில் கட்சிதமாக நல்லபடியாக நடக்கும் . 

பாபா கூறியிருக்கிறார்:
இதோ பார், உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவிடம் சரணடைவோம்


சரணாகதி என்ற ஒன்றினால் மட்டுமே நம்முடைய கர்மாக்கள் கரைந்துபோகும்,சரணாகதி செய்வதால் மட்டுமே நமது பிரச்சினைகள் தீர்ந்து போகும்.நமது வேண்டுதல்கள் கேட்கப்படும்.சரணாகதியே சகலமும்,சாயி நாமமே வேதங்கள் அனைத்தின் சாராம்சம்.சரணாகதி செய்து நமது நம்பிக்கையில் அசைக்க முடியாத உறுதியுடனும்,பொறுமையுடனும் காத்திருந்து பாபா அளிக்கும் விடுதலையைப் பெறுவோம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 20, 2020

பாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெ


'சீரடி மாஜே  பண்டரீபுரா , சாயி பாபா ரமாவர ', அதாவது, சீரடியே எனது பண்டரிபுரம், சாயிபாபாவே விட்டல்' என்ற பொருள்கொண்ட, ஆரத்தி பாடல் தினமும் சாயி பாபாவின் ஆரத்தி பாடல் தினமும் சாயிபாபாவின் பூஜையில் பாடப்பட்டு வருகிறது. இதை இயற்றியவர் தாஸ்கணு. பம்பாய் மாகாணம் முழுவதும் சாயியின் பெயர் விரைவாகப் பரவ தாஸ்கணுவின் முயற்சிகளே முக்கிய காரணம். பாபாவே விட்டல்  என்று ஆரத்தி பாடினாலும், கடைசிவரை அவர் பாபாவை தெய்வமே என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. பாபாவிடமும் அவருடைய சக்திகள் மீதும் அவருக்கு பெரும்  மதிப்பு இருந்தும், தமது கவித்திறனைக் கொண்டு பாபாவை 'ரமாவர' அதாவது ஸ்ரீ விஷ்ணுவே, எனப் போற்றி ஒரு பாட்டு இயற்றிய போதும், அவரால் தமது குரு தேவராக ஏற்க முடியவில்லை. உதட்டளவு துதியே செய்ய முடிந்தது. ஆகவே தான், பாபாவை சந்தித்த நீண்ட காலத்திற்குப் பின்னும் உபதேசம் பெரும் நோக்கத்துடன் இஸ்லாம்பூர்கர்  என்ற பிராம்மண குரு ஒருவரை அவர் நாடிச் சென்றார். ( தாஸ்கணு இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை). கணுவின் நலனுக்காக பாபாவின் வியக்கத்தக்க உதவி கிட்டியும், பாபா கடவுள் என்ற அபிப்பிராயம் அவருக்கு ஏற்படவில்லை. பாபா அவருக்கு செய்ததை விட மிகக் குறைந்த அளவு பலன் பெற்றவர்கள் கூட பாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெற்றனர். இந்த தாஸ்கணுவுக்கு பாபா மிகச் சிறந்த நலன்களை அளித்தார்; ஆனால் துரதிருஷ்டவசமாக  ( பாபாவை அணுகும் பல பக்தர்களின் விஷயங்களிலும் நாம் காண்பது போல் ) பாபா இறைவனே என்று உணர முடியாமல் போயிற்று. நம்மில் பலரும் சாயி சாயி என்று பாபா நாமம் சொல்லி வந்தாலும், வீட்டில் பாபா படமும் சிலையும் வைத்திருந்தாலும், பாபாவை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைப்பதில்லை. ஆனால் தீவிர நம்பிக்கை கொண்டு பாபாவை அணுகினால், தானே இறைவன் என்று பாபாவே வெளிப்படுத்துவார். பாபா மும்மூர்த்திகளின் அவதாரம். இதை உணர்ந்தவன் மிகப்பெரும் பாக்கியவான் .

"மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 19, 2020

நாளைய தினத்திலிருந்து நீ முன்னேற்றமடைவாய்


"பாபா மஹா சமாதியடைந்த பின்பு கூட, நம்பிக்கையோடு முழு மனதுடன் செய்யப்படும் தமது அன்பான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறார். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்களை காப்பாற்ற முன் வருகிறார். அவர்களுடைய கனவுகளிலும், காட்சிகளிலும் தோன்றி பூர்த்தி செய்கிறார் "

பாபாவின் மிகப்பெரும் பக்தர் பக்த நாராயணராவ். பாபாவின் வாழ்நாளில் ஷீரடிக்கு அவர் இரண்டுமுறை விஜயம் செய்து பாபாவின் தரிசனத்தைப் பெரும் நல் அதிர்ஷ்டம் பெற்றிருந்தார்.
பாபா 1918-ல் மஹா சமாதியடைந்தார். இதற்குப்பின் ஒரு வருடத்திற்குள் நாராயணராவ் நோயாளியாகி படுத்தார். மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட எவ்வித சிகிச்சைகளும் உரிய நிவாரணத்தை தரவில்லை.

பாபா சமாதியாகி 3 ஆண்டுகளுக்கு பின் நாராயண ராவ் ஷீரடிக்கு விஜயம் செய்ய விரும்பினார். டாக்டர்கள் கொடுத்த மருந்துகள் அவருக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை. எனவே அவர் பிரார்த்தனை செய்துகொள்ளவும் கஷ்டத்திலிருந்து விடுபடவும் ஷீரடிக்கு போக விழைந்தார்.

ஆனால் எப்படியோ, அவரால் ஷீரடிக்கு செல்ல இயலவில்லை, இரவும் பகலும் பாபாவை அவர் தியானம் செய்ய ஆரம்பித்தார்.
ஒருநாள் இரவு பாபா அவரது கனவில் தோன்றினார். ஒரு குகையிலிருந்து வருவது போன்று காட்சி கொடுத்து கீழ்கண்ட மொழிகளை கூறி ஆறுதல் நல்கினார். " நாளைய தினத்திலிருந்து நீ முன்னேற்றமடைவாய். ஒரு வாரத்துக்குள் நீ எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவாய்".

சரிநுட்பமாக ஒரு வாரத்தில் கனவில் பாபா உறுதி கூறியபடி நாராயணராவ் தனது வியாதியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 18, 2020

நீ துவாரகாமாயியின் குழந்தை


எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு.சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே.நீ துவாரகாமாயியின் குழந்தை.
துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 16, 2020

மும்பை வியாபாரி- பாபா நிகழ்த்திய அற்புதம்


மும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார். பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார். பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 15, 2020

பாபாவின் காட்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும்


"ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை".
 - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சுருக்கமானது, வெகு ஆழமான வியாபகமுள்ளது.

"என்னிடமே நிலைத்திருப்பின்" என்ற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. 
இறுதிவரை, எத்தகைய சூழ்நிலையிலும், பாபாவை விட்டு நாம் விலக கூடாது. அவரை மட்டுமே சார்ந்து இருக்கும்பொழுது நமது நம்பிக்கை மேலும் வலுவடையும். இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, பாபாவால் தீர்வு கொடுக்கமுடியாது என்று மட்டும் எண்ணவேண்டாம். நம்பிக்கையை வேறு ஒரு தெய்வத்திடம் மாற்றவும் வேண்டாம். ஏனென்றால். விதிப்படி தான் நடக்கும் என்று நம்பிக்கையும் இழக்கவும் வேண்டாம். கர்மத்தை எரிப்பதற்கான வழி அனந்தகோடி பிரம்மாண்ட நாயக சமர்த்த சத்குரு சாய் மஹாராஜின் காலடியிலேயே உள்ளது.  எல்லாவற்றையும் நமது பாபாவே நடத்துகிறார். தனது பக்தனின் முழு பொறுப்புகளை அவரே சுமக்கிறார். பாபா எப்போதும் தன் பக்தனுடனேயே இருக்கிறார். உறுதியான நம்பிக்கையின் மூலம் இதை நீங்கள் உணரலாம், யாருடைய உதவியும் இல்லாமல்.உண்மையில் பாபாவிற்கும் உங்களுக்கும் இடையில் யாருமில்லை. ஒரு தந்தையை போலவோ, குருவை போலவோ, ஒரு நண்பனை போலவோ பா(BHA)வித்து பாபாவை எப்போதும் அணுகுங்கள். எப்பொழுதும் சாயிநாம ஜபம் செய்வதும், சத்சரிதம் படிப்பதும் கூட பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யவே. நம்பிக்கையே பிரதானம். பாபாவே எல்லாம், சர்வ வியாபி, அவரே இறைவன், அவரை மிஞ்சிய சக்தி வேறொன்றுமில்லை  என்று உணர்ந்த பக்தனுக்கு  எல்லா இடங்களிலும் பாபாவே காட்சி தருவார். அந்த பக்தன் உடல், ஆன்மா பற்றி எந்தவித கவலையும் கொள்ளவேண்டியது இல்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 14, 2020

குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம்பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை.  தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக "பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்" என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது  மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 13, 2020

பாபா உங்கள் வீட்டிலேயே இருக்கிறார்
வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படத்திற்கும், பாபாவிற்கும்  சிறிதளவும் வித்தியாசம் இல்லை. பாபாவின் படத்திற்கு செய்யும் நமஸ்காரம், பாபாவின் படத்திற்கு அணிவிக்கும் மாலைகள் உண்மையில் பாபாவிற்கு நேரிடையாக அணிவித்ததற்கு சமம்..
பம்பாய் பாந்த்ராவைச்  சேர்ந்த திருமதி டெண்டூல்கர் பாந்த்ராவில் தமது இல்லத்தில் வைத்திருக்கும் பாபாவின் திருவுருவப்படத்திற்கு இரண்டு மாதங்களாக ஒவ்வொரு தினமும் வகுள மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை குவியல், குவியலாக அணிவித்து வந்தார். பின்னர் அவர் ஷீரடிக்கு சென்றார்...

பாபா : காகா! ( ஹரிஸீதாராம் தீக்ஷித் ) இந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஷீரடியில் இருக்கவே இல்லை. இந்த அன்னை என்னை வகுள மலர்களில் மூழ்க வைத்து திணற அடித்து விட்டார்; நான் மிகவும் திக்குமுக்காடிப் போய் நினைவையும் இழந்துவிட்டேன். இப்போது மெதுவாக பழைய  நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

மற்றொரு சம்பவம்....
பாலபுவா சுதார் என்ற பக்தர், முதன்முதலாக பம்பாயிலிருந்து 1917ம் ஆண்டில் ஷீரடிக்கு வந்து பாபாவை வணங்கினார்.
பாபா : (வேறு ஒருவரை நோக்கி) இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்.
பாலபுவா இதற்கு முன்பு பாபாவை சந்தித்ததில்லை. ஆகவே வியப்பு. ஆனால் பம்பாயில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பாபாவின் திருவுருவப் படத்தின் முன் விழுந்து நமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார்... 
                                           * ஜெய் சாயிராம் *


http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 12, 2020

தைரியத்தை இழந்துவிடதே

http://www.facebook.com/shirdisaibabasayingsintamilமிகவும் சக்திவாய்ந்த பாபா கோவில் எங்கு உள்ளது ? பாபா யந்திரம் மற்றும் பரிகார முறைகள்மிகவும் சக்திவாய்ந்த பாபா கோவில் எங்கு உள்ளது ? பாபா யந்திரம் மற்றும் பரிகார முறைகள் 


கடன்கள் தீர, வேலை கிடைக்க, பிரச்சனைகள் தீர பாபா ஏதாவது பரிகார முறைகளை கூறியுள்ளாரா? பாபா கோவில்களில் சில , மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் அற்புதங்கள் நிகழ்வதாகவும்  கூறுகிறார்கள். எந்தெந்த கோவில்கள் என்று கூறமுடியுமா? 

உண்மையில் பாபாவின் தர்பாரில் பரிகார முறைகள் என்று எதுவுமில்லை. பாபா பரிகார முறைகளை பற்றி கூறியது இல்லை. தன் மீது நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் இருக்கும்படி மட்டுமே பாபா கூறியுள்ளார். ஆமாம்,  வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ பதினாறோ எனக்கு தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். பரிகாரம், யந்திரம் என்று பாபாவின் பெயரில் யாராவது உங்களிடம் கூறுவர்களேயேனால் அது முற்றிலும் ஒரு ஏமாற்றுவேலை. 
உண்மையான பக்தி கொண்டு, பாபா கூறியுள்ளபடி வாழும் பக்தனின் உள்ளமே  பாபாவின் மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உண்மையான பக்தன் எப்போதும், எல்லா இடங்களிலும் தன்னை காண்பதாக பாபா கூறியுள்ளார். ஆகவே உங்கள் நீங்கள் வெகு தூரம் சென்று பாபாவை தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. தாங்கள் நடத்தும் கோவிலில் இருக்கும் பாபாவே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பரிகார முறைகளை கூறுவதும்  ஒரு வகையில் பணம் பறிக்கும் எண்ணமே அன்றி வேறெதுவுமில்லை. நம்பிக்கையோடு எந்த இடத்தில் பாபாவை நினைத்தாலும், பாபா நமக்கு காட்சி அளிப்பர். 

பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபாவின்  ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை - ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10 

 முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.  பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !
பாபா கூறியிருக்கிறார், "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்" என்று. அதாவது, பாபாவின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே பிரதானம்..வியாபாரமயமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பிறக்க என சாய்பாபா யந்திரம்,  சாய் பரிகார பூஜைகள்  என்று நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதை நாம் காண்கிறோம். சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லை. பாபா தன் பக்தர்களிடம், தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது, பாபா மீதான நம்பிக்கை இல்லாமையே காட்டுகிறது. எப்பொழுதும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். தொடர்ந்து இவ்விதமாக எண்ணிவாருங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.

"உனையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன் என் பாபா"


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 11, 2020

உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன்.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamilமண்ணிறங்கி வந்த தெய்வம் பாபா !


மண்ணிறங்கி வந்த தெய்வம் பாபா !


ஒரேயொரு நபருக்கு கூட பாபா யார் என்றோ,  அவரது நிஜப்பெயர்தான் என்னவென்றோ தெரியாத நிலையில் உலகமே அவரை புகழ்ந்து பாடி, ஷீரடி நோக்கி பக்தி செலுத்தி வருகிறது என்றால் அதுதான் அதிசயத்திலும் அதிசயம் என்பதாகும்.

சூன்யத்திலிருந்து தானாய் ஷீரடிக்கு வந்தார் பாபா.  குதிரை தேடி வந்த சாந்த்பாடீலுக்கு உதவி செய்து,  அதனாலேயே அந்த குக்கிராமத்தை தன் வாழ்நாள் முழுவதுக்குமான இருப்பிடமாகக் கொண்டு,  ஏழை எளியவர் பணக்காரர் வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் உபகாரங்கள் தந்து,   பிரதி உபகாரமாக அனைவரது அன்பினையும் பக்தியையும் நம்பிக்கையையும்  நன்மதிப்பையும் விசுவாசத்தையும் மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளார்.

ஒருவரின் அடி மனது எண்ணங்களைக் கூட அறிந்து கொள்பவராய் இருந்துள்ளார் பாபா. அதன்படி அவரது உள்ளத் தேவையை பூர்த்திசெய்து வைத்துள்ளார். அனைவருக்கும் உளவசதியை உண்டு பண்ணி தந்திருக்கிறார்.

மண்ணில் கடவுள் வந்தால் எப்படி இருக்கும் என நாமெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஊகத்தை அவர் நிறைவு செய்து நிரூபணம்  செய்துள்ளார்.

( G.S. கபார்தே எனும் பாபாவின் பக்தர் கூறியதிலிருந்து...)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 10, 2020

பாபா உம்முடனேயே இருப்பார்
http://www.shirdisaibabasayings.com

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்க இந்த லிங்க்'ஐ க்ளிக் செய்யவும்.
குரு வழிபாடு என்பது தானாக நிகழ்வது அல்ல. ஏதோ இந்த பிறப்பில் நடந்தது என்றும் கூற முடியாது. பல ஜென்ம தேடல், பூர்வ புண்ணியங்களின் குவியல்கள் மூட்டை மூட்டையாக இருந்தவருக்கே அது வாய்க்கும். அப்படிப்பட்ட குருபக்தியை மேலும் வலுப்படுத்த மிகச்சிறந்த சாதனை யாதெனில், குருவின் சரிதத்தை தினமும் பாராயணம் செய்வது. பாபாவின் மீது அதீத அன்பு கொள்ளும் பக்தர்கள், தினமும் ஒரு அத்தியாயம் , அல்லது ஒரு பக்கம், அல்லது ஒரு வரியாவது ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்.. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்க கீழே உள்ள லிங்க்'ஐ  க்ளிக் செய்யவும். எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...