மண்ணிறங்கி வந்த தெய்வம் பாபா !
ஒரேயொரு நபருக்கு கூட பாபா யார் என்றோ, அவரது நிஜப்பெயர்தான் என்னவென்றோ தெரியாத நிலையில் உலகமே அவரை புகழ்ந்து பாடி, ஷீரடி நோக்கி பக்தி செலுத்தி வருகிறது என்றால் அதுதான் அதிசயத்திலும் அதிசயம் என்பதாகும்.
சூன்யத்திலிருந்து தானாய் ஷீரடிக்கு வந்தார் பாபா. குதிரை தேடி வந்த சாந்த்பாடீலுக்கு உதவி செய்து, அதனாலேயே அந்த குக்கிராமத்தை தன் வாழ்நாள் முழுவதுக்குமான இருப்பிடமாகக் கொண்டு, ஏழை எளியவர் பணக்காரர் வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் உபகாரங்கள் தந்து, பிரதி உபகாரமாக அனைவரது அன்பினையும் பக்தியையும் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் விசுவாசத்தையும் மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளார்.
ஒருவரின் அடி மனது எண்ணங்களைக் கூட அறிந்து கொள்பவராய் இருந்துள்ளார் பாபா. அதன்படி அவரது உள்ளத் தேவையை பூர்த்திசெய்து வைத்துள்ளார். அனைவருக்கும் உளவசதியை உண்டு பண்ணி தந்திருக்கிறார்.
மண்ணில் கடவுள் வந்தால் எப்படி இருக்கும் என நாமெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஊகத்தை அவர் நிறைவு செய்து நிரூபணம் செய்துள்ளார்.
( G.S. கபார்தே எனும் பாபாவின் பக்தர் கூறியதிலிருந்து...)
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil