சாய்பாபா என்கிற மகத்தான தெய்வீக அவதாரத்திடம் நம்பிக்கை வைப்பவன், அவ்வாறு வைத்து விட்டோமே என எந்த கால கட்டத்திலும் வருந்த வேண்டியதில்லை. பின்னோக்கி நடக்க வேண்டியதில்லை. நம்பிக்கை வைத்த ஒருவன் தன் சுபாவத்தில் உயருகிறான் என்பதையும், இந்த படிப்படியான முன்னேற்றம் பாபாவால் உறுதி அளிக்கப்பட்ட உன்னத பலன்களைப் பெற வழி வகுக்கும் என்பதையும் அனுபவம் காட்டும். சில சமயங்களில் பாபா, தம் பக்தனை எந்த பாதையில் இட்டுச் செல்கிறார் என்பதை மறைத்து விடுவது அவனுடைய நம்பிக்கையை திடப்படுத்தவே. தன்னிடம் தஞ்சம் புகுந்தவனை எந்த திக்கிலிருந்தும் தோன்றும் எந்தவிதமான ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதாக பாபா உறுதியளித்துள்ளார். ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பாபா மீதான நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். பாபாவிடம் லௌகீக பலன்களை எதிர்பார்த்து வந்து கிட்டாமல் ஏமாற்றமடைந்தவர்கள் அவ்வாறு கிட்டாதது அவர்கள் எதிர்கால நன்மையை பாபா கருத்தில் கொண்டதால் தான். " பல ஜென்ம புண்ணியத்தினால் பாபாவின் தர்பாரில் இணைத்துள்ளோம். இனி நமக்கு கவலை இல்லை. எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் வாழும் நாம், எந்த சூழ்நிலையிலும் உங்கள் மீதான நம்பிக்கை குறையவே கூடாது என்ற ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் பாபா முன் வைப்போம். வேறெந்த வேண்டுதலும் வேண்டாம்."
PLEASE CLICK THE LINK BELOW TO BUY THIS BOOK
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil