மும்பைக்கருகில் அக்ரூல் என்னுமிடத்தில் வசித்த திரு.கேசவ்பிரதான் என்பவர் 1916-ல் தன் நண்பரோடு ஷீரடிக்கு பாபாவைத் தரிசிக்க வந்தார். அவர் பாபாவிடம், "பாபா! என்னிடம் அன்பு கொண்ட எல்லோரும் என் குழந்தைகளே என்கிறீர்கள்! அப்படியானால் ஏன் நீங்கள் அக்ரூலுக்கு வரக்கூடாது?" என்று கேட்டார்.
பாபா அவரிடம் தன் படம் ஒன்றைக் கொடுத்து, "உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு ! இனிமேல் இங்கு வராதே !" என்றார். பாபாவின் உத்தரவுக்கு உட்பட்டு , கேசவ்பிரதான் தனது சொந்த ஊரான அக்ரூலில் பாபாவுக்கு கோவில் கட்டினார். அந்த கோவிலில் பாபாவின் தரிசனம் வேண்டி வந்தவர்கள் பலரும் "கோவிலின் எல்லையில் பாபா சகஜமாக நடமாடுவதைப் பார்த்ததாகக் கூறினார்கள்"
1940-ல் கேசவ் பிரதானின் காலம் முடிந்தது. பாபா ஆலயத்தைப் புதுப்பிக்க குப்தா, நாராயண் புரோஹித், தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வேல்வால்கர் போன்ற பக்தர்கள் முயன்றனர். ஆனால் அதற்கான போதிய நிதி வசூலாகவில்லை.
நிதி வசூலுக்கு வேறுவித முயற்சியாக, கோவிலில் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சப்தாக பாராயணம் செய்யப்பட்டது. பாராயணத்தின் நான்காவது நாள் நாராயண் புரோஹித் கனவில் பாபா தோன்றி, "என்னுடைய தூனி எங்கே? தூனி இல்லாத ஆலயத்துக்கு எப்படி வசூலாகும்?" என்று பாபா கோபமாகக் கேட்டதாகவும், அதே சினத்துடன் அவர் மீது கற்களையும் வீசி எறிந்ததாகவும் நாராயண் புரோஹித் கூறினார்.
உடனடியாக மற்ற கோவில் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து அனுமதி பெற்று , கோவில் வளாகத்திலேயே 8"*4" சதுர அடிப்பரப்பில் தூனிக்கான கட்டிடம் எழுப்பி, 7-4-1949ல் காலை பத்து மணி சுபமுகூர்த்த வேளையில் தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வால்வேல்கர் தூனியை ஏற்றினார்.
தூனியை நிறுவிய மறுநாள் அதிகாலை சுமார் மூன்று மணியளவில், "பாபா கோவிலின் கதவைத் திறந்து உள்ளே சென்று மீண்டும் கதவை மூடிக்கொண்டதைக் கண்கூடாகப் பார்த்ததாக" அந்த ஊர் மக்கள் பலரும் ஆச்சர்யத்தோடு கூறினர்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil