Tuesday, May 31, 2022

ஸாயீ நாமஜெபத்தால் உங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விலகும் !




நீங்கள் உங்களுடைய எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு, இடைவிடாமல் ஸாயீ பெயரை நாமஜெபம் செய்யுங்கள்.  அவ்வழியேதான் உங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விலகும் !


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 30, 2022

உங்களுடைய மனம் ஸாயீபக்தியில் சாந்தமாக ஒருமுகப்படட்டும் !




உலகத்திலுள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்துபோகட்டும்,  "ஸாயீ" எனும் நாமஸ்மரணமே எந்நேரமும் மனத்தில் ஓடட்டும் !  உங்களுடைய  மனம் அலைபாய்வதையும் சபலத்தையும் தொலைத்துவிட்டு ஸாயீபக்தியில் சாந்தமாக ஒருமுகப்படட்டும் !



- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 29, 2022

பாபாவின் பாதங்களி­லிருந்து நாம் என்றுமே பிரியக்கூடாது !




ஓ ஸமர்த்த ஸாயீ ! ஸ்ரீ ஸத்குருவே ! பக்தர்கள் விரும்புவதையெல்லாம் அளிக்கும் கற்பகத்தருவே ! உம்முடைய பாதங்களி­லிருந்து நாங்கள் என்றுமே பிரியக்கூடாது. இந்த ஒரு கருணையைத்தான் நாங்கள் உங்களிடம் வேண்டுகிறோம்.



- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 28, 2022

கர்மத்தின் தளைகளிலிருந்து விடுவிக்கக்கூடிய பாபாவின் தரிசனம் !




ஓ ! ஸ்ரீ ஸாயீபாபா ! உம்முடைய பொற்கமலப் பாதங்கள் புனிதமானவை; உம்முடைய நினைவு புனிதமானது; உம்முடைய தரிசனம் புனிதமானது. இம்மூன்றும் எங்களைக் கர்மத்தின் தளைகளி­லிருந்து விடுவிக்கக்கூடிய சக்தி பெற்றவையாகும்.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 27, 2022

ஸமாதியிலுள்ள உமது ஜோதி கண்மலர்கிறது !



ஓ.. பாபா!  தற்காலம், உயிருடன் கூடிய உருவமற்ற நிலையில் தாங்கள் இருந்தாலும், "விசுவாசத்துடனும் பக்தியுடனும் உம்முடன் ஒன்றிவிட்டால், ஸமாதியிலுள்ள உமது ஜோதி கண்மலர்கிறது." பக்தர்கள் இன்றும் இதை அனுபவப்பூர்வமாக உணர்கின்றனர்.


- ஸ்ரீஸாயீசத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 26, 2022

ஸாயீ பக்தர்களுக்கு ஷீரடியே மிகமிகப் புனிதமானது!




நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிமிதமாக இருக்கின்றன.  ஆயினும், ஸாயீ பக்தர்களுக்கு ஷீரடியே  மிகமிகப் புனிதமானது ! பவித்திரமானது !!



- ஸ்ரீஸாயீ சத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 25, 2022

"ஸாயீ".. "ஸாயீ".. "ஸாயீ".. எனும் நாமஜபத்தினால் நமது பாவங்கள் அழிகிறது !




"ஸாயீ ".. "ஸாயீ".. "ஸாயீ".. எனும் நாமஜபத்தினால் நமது பாவங்கள் அழிகிறது; ராஜஸ குணமும் தாமஸ குணமும் மறைகின்றன. ஸத்துவ குணம் மேலோங்குகிறது. இதில் சந்தேகம் ஏதுமில்லை. படிப்படியாக நமது வாழ்வில் தருமநெறி வளர்கிறது.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 24, 2022

யாருடனும் விவாதங்கள் இருத்தல் கூடாது !




ஒருவரது சொந்தக் கருத்தையே நிலைப்படுத்துதல், மற்றவர் கருத்தை மறுக்கச் செய்யும் முயற்சிகள், ஒரு பொருளின் நன்மை தீமைகள் இவற்றைப் பற்றிய விவாதங்கள் இருத்தல் கூடாது !


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 23, 2022

அஹங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள் !


என்னுடைய அடியவர்களின் ஆவலைப்  பூர்த்தி செய்யவேண்டும். அவர்களின் அஹங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்ப்பித்துவிடட்டும். வாழ்க்கையில் இங்ஙனம் செய்பவனுக்கே நான் மிகவும் உதவி புரிகிறேன்.

- ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 22, 2022

துன்பத்தில் பக்தர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன் !




நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன். அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன். துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடி வருகிறேன்.


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 21, 2022

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !




உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

-  ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 20, 2022

கண்களை ஸாயீயின் பாதங்களில் நிலைநிறுத்துங்கள் !



சிந்தனையை ஸாயீயின் நினைவில் வைத்து, கண்கள் ஸமர்த்த ஸாயீயின் பாதங்களில் நிலைபெற்று, மனம் ஸாயீ தியானத்திலேயே ஈடுபடுபவருடைய தேகம் முழுவதும் ஸாயீயின் சேவைக்கு அர்ப்பணமாகிறது.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 19, 2022

அஹங்காரமற்று பணிவுடன் இருப்பீர்களாக !





நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அஹங்காரம் அற்றவனாகவும் மிகமிகப் பணிவுடனும் இருப்பாயாக!

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 18, 2022

பாபாவிடம் பயபக்தியுடன் சரணடைந்தால் சகலமும் பெறலாம் !


பாபாவின் கண்ணிற்படாமல் இவ்வுலகில் எங்கும் எதுவும் நிகழ்வதில்லை. வானமும், பூமியும், காற்றும், ஒளியும் எல்லாத்திக்குகளும், திசைகளும் அவருடைய பார்வைக்கு திறந்தே கிடக்கின்றன.  இவை அத்தனையும் பாபாவின் கடைக்கண் பார்வைக்குக் கட்டுப்பட்டவை.  நம்முடைய ஒவ்வொருவரின் எண்ணமும் செயலும்கூட அவரின் பார்வையிலிருந்து தப்பமுடியாது. அப்பேர்ப்பட்ட மஹாவல்லமை வாய்ந்த பரம்பொருள் பாபாவிடம் பயபக்தியுடன் சரணடைந்தால் சகலமும் பெறலாம். 

- ஸ்ரீஸாயீ சத்சரித்திரம் 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 16, 2022

பாபாவே வழிநடத்திச் செல்கிறார் !


"தான்" என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும்தன்மை, சேவை மனப்பான்மை, அகிம்சை போன்ற தெய்வீகக்  குணங்களை ஒருவர் தமக்குள் கொண்டுவர முடிந்தால், பாபா அவருடனேயே இருந்து அவரை வழிநடத்திச்  செல்கிறார்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் பாதங்களில் பணிவோமாக !

நம்முடைய கைகளால் பாபாவுக்கு நாம் ஒரு சேவை செய்தோமா? இல்லை! ஆயினும், அவர் நம்மீது பெருங்கருணை காட்டுகிறார்.  எனவே பாபாவின் அருகிலேயே இருந்து அவரின் மீதான பக்தியிலேயே எப்பொழுதும் மூழ்கியிருக்கும் பாக்கியத்தை கொடுக்கச் சொல்லி, பாபாவின் பாதங்களில் பணிவோமாக !

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் 

Thursday, May 5, 2022

வாழ்க்கையில் கிட்டவே கிட்டாத, போதும் போதுமென்ற மனத்திருப்தியை அளித்துவிடுவேன்! இதை நம்புங்கள்!.


உடலையும் ஆன்மாவையும் என்னிடமே ஒப்படைத்துவிட்ட பக்தர்கள் , எனது தெய்வீகக் கதைகளைக்  கேட்ட மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே பேரின்ப பெருநிலை பெருகுவதை உணர்வார்கள். மனமுருகி என் லீலைகளைப் பாடுவோருக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும் , வாழ்க்கையில் கிட்டவே கிட்டாத போதும் போதுமென்ற மனத்திருப்தியையும் அளித்துவிடுவேன். இதை நம்புங்கள்!.

- ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எல்லாப் பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள் ‌!

பாபாவே தன் அடியவர்களுக்கு, கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பகத்தரு ஆவார்.  அவருடைய புனிதமான சந்நிதியில் இருந்துகொண்டு அன்புடனும் ஆர்வத்துடனும்...