Thursday, June 30, 2022

ஸாயீயின் கரம் பட்டுப் புனிதமடைந்த பிரசாதம் பெறுவதென்பது மஹாபாக்கியம் !ஸாயீயின் கரம் பட்டுப் புனிதமடைந்த பிரசாதம் சிறிதும் கிடைக்கும் என்ற ஆசையுடன் காத்திருப்பவர்களுக்கு, பாபாவின் கையிலிருந்து ஒரு பருக்கை சோறு பெறுவதென்பது மஹாபாக்கியம்.  அந்த மஹாபிரசாதத்தை உண்பவரின் உள்ளும் புறமும் புனிதமாகும்.  வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 29, 2022

அசத்தியம் ஸாயீயிடத்தில் செல்லாது ! அசத்தியம் மனிதனைக் கீழே தள்ளிவிடும் !பாபாவின் முன்னர் எவருடைய கண்ணாம்பூச்சி ஆட்டமும் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.  பொய்யைச் சொல்லி பாபாவின் அருளை என்றுமே சம்பாதிக்க முடியாது.  அசத்தியம் ஸாயீயிடத்தில் செல்லாது.  அசத்தியம் மனிதனைக் கீழே தள்ளிவிடும்.  கடைசியில் நரகந்தான் கிடைக்கும்.  பாபாவைப் போன்ற குருவை வஞ்சிப்பது மஹாபாதகச் செயல்.  அதிலிருந்து விடுபடவேமுடியாது.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 28, 2022

ஸ்ரீகுருசரித்திரத்தை தினமும் படியுங்கள்! அதனால் உங்களுக்கும், உங்கள் வம்சத்தினருக்கும் எல்லா வளமும் கிடைக்கும் !மும்மூர்த்தியான ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீகுருவின் சரித்திரம் அபாரமானது.  அமிர்த கும்பமான இந்த ஸ்ரீகுருசரித்திரத்தை உங்களுக்கு வழங்குகின்றேன். நீங்கள் தினமும் இந்த கதையை படியுங்கள் !  இதனால் உங்களுக்கும், உங்கள் வம்சத்தினருக்கும் எல்லா வளமும் கிடைக்கும் !  ஸ்ரீகுருவின் அருளினால் எழுதிய இந்த குரு கதையைப் படித்தவர்கள், கேட்பவர்களின் வம்சம் பவித்திரமாய் நோய் நொடிகள் இல்லாமல் எப்பொழுதும் எல்லா செல்வங்களுடன் வளமாய் வாழும்.


- ஸ்ரீகுரு சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 27, 2022

மனத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு, ஸாயீயை முழுமனத்துடன் வழிபடுங்கள் !மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நியமநிஷ்டையுடன், விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்துகொண்டு ஸாயீயை முழுமனத்துடன் வழிபட்டால், முழுமுதற்பொருளை அடைவீர்கள். உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்தி செய்யப்படும். கடைசியில் நீங்கள்  எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள்  எளிதில் கிடைக்காத இறைவனுடன் ஒன்றிவிடுதல் நிலையை (ஸாயுஜ்ய முக்திநிலையை) அடைவீர்கள். இடைவிடாத சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 26, 2022

பக்தர்களைக் காப்பாற்ற விரையும்போது பாபாவை எதுவும் தடுத்து நிறுத்தமுடியாது !ஸாயீ, பக்தர்களின் க்ஷேமத்திற்காகவே இப்புவியில் அவதரித்திருக்கிறார். அவர் ஞானதேவரின் அவதாரம்; கைவல்­ய (இறைவனோடு ஒன்றுபட்ட நிலை) தேஜஸில் நிலைபெற்றவர்.  பாபா தன்னுடைய அடியார்களுடைய பக்தியால் கவரப்பட்டு, அவர்களுக்காகத் தன்னுடைய புண்ணியகோடியி­லிருந்து தாராளமாகச் செலவு செய்கிறார். பக்தர்களைக் காப்பாற்ற விரையும்போது, மலையோ, கடலோ, பள்ளத்தாக்கோ மற்றெவ்விதமான தடையோ பாபாவைத் தடுத்து நிறுத்தமுடியாது.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 25, 2022

வழிதவறியவர்களை மீண்டும் தர்மநெறிக்கு கொண்டுவருவதற்கே பாபாவின் அவதாரம் !சாதுக்களை ஸம்ரக்ஷணம் செய்வதற்கும், துஷ்டர்களை வேரோடு நாசம் செய்வதற்குமே இறைவன் பூமியில் அவதாரம் செய்கிறான்.

ஆனால், பாபாவைப் போன்ற ஞானிகளுடைய அவதாரம் அதனினும் மேன்மையானது. ஞானிகளுக்கு ஸாதுக்களும் துஷ்டர்களும் சமானமே. ஒருவனை உயர்ந்தவனென்றும் மற்றொருவனை ஈனமானவன் என்றும் வித்தியாசப்படுத்த அவர்களுடைய இதயம் அறியாது. ஞானிகளுக்கு இருவரும் சரிசமானமே !

ஒரு நோக்கில் பார்க்கும்போது,  ""பாபாவைப் போன்ற ஞானிகள் இறைவனவிட உயர்ந்தவர்கள்."" தீனர்களின் மேலுள்ள இரக்கத்தாலும் அன்பினாலும், முத­லில் அவர்கள் தர்ம மார்க்கத்தி­லிருந்து வழிதவறியவர்களை மீண்டும் தர்மநெறிக்கு கொண்டு வருகிறார்கள்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 24, 2022

இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால் வார்த்தைகளும் மனதும் புனிதமடைந்துவிடும் !எண்ணம், சொல், செயல் இவைகளில் வேறுபாடு உள்ள மனிதன் தீய மனிதன் ஆகிறான்.  மனிதன் முக்தியடைய கலியுகத்தில் பல்வேறு வழிகள் உள்ளன.  அவற்றுள் நாமஜெபம் ஒன்றே மிக மிக இலகுவான மார்க்கமாகும். 

நாவில் இறைவனின் புனித நாமமே நடனம் ஆடும்போது பேசும் வார்த்தைகள் புனிதமானவைகளாகவே வளரும் வாய்ப்பு உருவாகிறது.  இறைவனின் நாமத்தை உச்சரிக்கும் நேரத்தில் மனதும் அதே கடவுளின் சிந்தனையில் லயிக்குமேயானால் மனதும் புனிதமடைந்துவிடும்.  அதன் மூலம் தெய்வீகச் செயல்கள் செய்வதற்கான ஆர்வமும் அதிகரித்துவிடும்.


(சங்கர்பட்டிடம் ஸ்ரீபாதர் கூறியது)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 23, 2022

பாவகர்ம வலையை அறுத்தெறியும் சக்தி வாய்ந்தது ஸாயீபாபாவின் கிருபை !ஸத்குரு ஸாயீபாபாவின் கிருபை மஹாபலம் வாய்ந்தது.  நாம் செய்த தீவினைகளாலும் ,  செய்யத் தவறிய நல்வினைகளாலும் பின்னிக்கொண்ட பாவகர்ம வலையை அறுத்தெறியும் சக்தி வாய்ந்தது. தீனர்களையும் பலவீனர்களையும், துக்கத்தி­லிருப்பவர்களையும், 
வேதனையி­லிருப்பவர்களையும் விடுவித்தருளும் வல்லமை பொருந்தியது.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 22, 2022

மனத்தை பாபாவின் பாதங்களில் ஒருமுகப்படுத்துங்கள் !அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் உலகியல் விவகாரங்களை விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும், நம் மனத்தை பாபாவின் பாதங்களில் ஒருமுகப்படுத்தினால், உலக விஷயங்களில் மீதான மோகம் தானாகவே விலகும். நம் முயற்சிகளும் சுலபமாக வெற்றி அடையும். .


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 21, 2022

பக்தர்களது பாதுகாவலராகவும், அதற்கு ஒரேயொரு உத்தரவாதியாகவும் திகழ்பவர் பாபா ஒருவரே !கலியுகத்தில் பக்தர்களது பாதுகாவலராகவும், அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவராகவும், அதற்கு ஒரேயொரு உத்தரவாதியாகவும் திகழ்பவர் பாபா ஒருவரே.  பக்தர்கள் அனைவருக்கும் இவர் கூறிய ஒரே போதனை, "பயம் கொள்ளாதீர்கள் ; நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன் !".  இதற்கு கைம்மாறாக பக்தர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது, "திட நம்பிக்கை மற்றும் பொறுமை !". இவ்விரண்டும்  தன்மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களிடமிருந்து அவருக்கு குறைவின்றி கிடைத்தன.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 20, 2022

வாதம் செய்யும் கர்வத்தை ஒழித்துவிட்டு, பணிவுடன் வாழவேண்டும் !எதற்கெடுத்தாலும்  "வாதம் செய்வதென்னும் கெட்டபழக்கம் " ஒருகணம் கூட நம்மைத் தொடுவதை அனுமதிக்கக் கூடாது என்னும் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.  ஏனெனில், இக்குணம் பல கெடுதல்களை விளைவிக்கக் கூடியது.   நம்முடைய "வாதத் திறமைப்பற்றிய  கர்வத்தை ஒழித்துவிட்டு " பணிவுடன் வாழவேண்டும். வாதப் பிரதிவாதங்கள் செய்வதால் ஒரு பயனும் இல்லை. எதற்கெடுத்தாலும் "வாதம் செய்யும் இயல்போ,  மற்றவர்களுடன் போட்டி போடுவதோ நற்குணம் அன்று."  


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 19, 2022

உயர் குறிக்கோள்களுடனும் தர்மத்துடனும் பாபாவை நாடுங்கள் !ஏழை, எளியோர், நலிந்தோர், நோயுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், குழந்தைகள், சிறியோர், பெரியோர், பெரும் அரசியல் புள்ளிகள், அரசு அதிகாரிகள், படித்த பண்டிதர்கள், சமுதாயத்தில் ஓங்கிய வித்தகர்கள் என எவரும் ஆகட்டும்,  "உயர் குறிக்கோள்களுடனும், தர்மத்துடனும் பாபாவை நாடி வந்த எவரும் ஏமாந்து திரும்பியதில்லை !".

பாபாவை நாடி வந்து, முழுவதும் தன்னை பாபாவிடம் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பண்டிதர் இவ்வாறு சொல்கிறார் :  "கடவுள் என எதை நான் கற்றறிந்திருந்தேனோ, அதை பாபா மட்டுமே உருவகப்படுத்தி நின்றார் !".


- மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா நூலிலிருந்து...

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 18, 2022

குதர்க்கமான எண்ணங்களை விடுத்து, ஸாயீசிந்தனையை தொடருங்கள் !கலியின் பிரபாவத்தால் ஒவ்வொரு  நொடியும் நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றையெல்லாம் அறவே விடுத்து, பாபாவினுடைய பாதங்களில் மனத்தைச் செலுத்தினால், தியானமும் மனம் ஒருமுகப்படுதலும் விருத்தியடையும். அவ்வாறு ஒருமுகப்பட்ட மனத்தில் ஸாயீசிந்தனை தொடரும். இதைத்தான் ஸாயீ நம்மைச் செய்யவைக்கிறார். அப்போது நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறுகிறது !.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 17, 2022

வேண்டுதல் நடக்கும் அந்த நொடியிலேயே பதிலையும் அளிக்கிறார் பாபா !தங்களுடைய பிரார்த்தனைகளின் பதிலுக்காக பூஜை அறைகளிலும், ஹோம, யாகங்களிலும், நாடெங்கும் உள்ள கோயில்களிலும் காத்துக்கிடக்கும் நிலையெல்லாம் ஷீரடி செல்லும் மக்களுக்கு இல்லாமல் ஆயிற்று. ஏனென்றால், "அங்கு வாழும் பாபா எனும் மனிதக்கடவுள்" வேண்டுதல் நடக்கும் அந்த ஸ்தலத்திலேயே, அந்த நொடியிலேயே ஒவ்வொரு பக்தருக்கும் பதிலையும் அளிக்கிறார் ; பலனையும் அள்ளித் தருகிறார்!.


- மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா நூலிலிருந்து...

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 16, 2022

நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள் !எதை எதையோ சாதிக்க வேண்டுமென்ற உத்தேசத்தால்,  வீணான முயற்சிகள் செய்யவேண்டாம். விரதங்கள், தீட்சைகள்,  ஹடயோகங்கள், உபவாச தீட்சைகள், உடலை வருத்தும் யாத்திரைகள்  போன்ற முயற்சிகளைச் செய்து களைத்துப் போகாதீர்கள்.  உங்கள் தேவைகளை நிறைவேற்றவே நான் அவதரித்துள்ளேன். உங்களுடனேயே நான் எப்பொழுதும் இருக்கிறேன். உங்களுடன் நான் இவ்விதமாக இருக்கையில், நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? எதற்காகத் தேடுகிறீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை.  நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள் !


- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 15, 2022

எனது கதைகள் உங்களுக்கு உண்மையான வழியைக்காட்டி ஆசீர்வதிக்கும் !எனது கதைகளை உங்களது உள்ளத்தில் பதிவேற்றுங்கள்.  ஒவ்வொரு கதையும் தரும் குறிப்பு நுட்பத்தை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதனால் உங்களது மனத்தின் பதைபதைப்பு மறைந்தொழியும். உங்களுக்கு உண்மையான சாந்தியும் அமைதியும் கிடைக்கும்.  எனது கதைகள் உங்களுக்கு உண்மையான வழியைக்காட்டி ஆசீர்வதிக்கும்.


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 14, 2022

மனத்தூய்மை, வாக்குத்தூய்மை, செயல்தூய்மை கொண்டிருங்கள் !


ஒரு மனிதன் வறுமையின் பிடியிலிருந்தும் பாவச் செயல்களிலிருந்தும் விடுபடவேண்டும் என்றால் அவன் "மனத்தூய்மை", "வாக்குத்தூய்மை", மற்றும் "செயல்தூய்மை" பெற்றிருக்க வேண்டும்.  இதற்கு "திரிகரண சுத்தி" என்று பெயர்.  மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுவே பேச்சாக வரவேண்டும்.  எது பேச்சாக வெளிப்படுத்தப்படுகிறதோ அதுவே செயலிலும் காணப்படவேண்டும்.  ஒரு "திரிகரண சுத்தி"  அடைந்த மனிதன் மஹாபுருஷன் ஆகிறான்.


- ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 13, 2022

ஆசையைத் துறந்தவனே அமைதியைப் பெறமுடியும் !பணத்தாசையை வெல்வது மிகக் கடினம். அது துக்கமும், இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்த நதியில் பல பேராசைச் சுழல்களும், திமிர், ஆணவம், பொய், களவு, பொறாமை,  அஹம்பாவம் போன்ற எதிர்த்துப் போராட முடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அந்த ஆபத்தான நதிச் சுழலிலிருந்து தப்பிக்க முடியும் ; அமைதியைப் பெறமுடியும் ! பிரம்மத்தை அடைய முடியும் !.


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 12, 2022

மண்ணிறங்கி வந்த தெய்வம் ஸாயீபாபா !"மனித உருவமேற்காமல் ஸாயீ விட்டுவிட்டிருந்தால், கலியுக மாயையிலிருந்துக் காப்பாற்றி, உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அநுக்கிரஹம் செய்வதும் எப்படி சாத்தியம்?"


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 11, 2022

ஸாயீயின் கிருபையால் நாம் தூயவராக ஆக்கப்படுவோம் !பாபாவின் பாதங்களில் மகிழ்ந்து மூழ்கிவிட்டால், ஸாயீயின் கிருபையால் நாம் தூயவராக ஆக்கப்படுவோம். பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம்.  ஸாயீபக்தியின் பிரபாவமும் வீரியமும், நமக்குள் இருக்கும் பொறாமையையும், 
தீய இயல்புகளையும் விரட்டியடித்துவிடும். சாந்தியையும் செல்வச் செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளரச் செய்யும்.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 10, 2022

உங்கள் பூஜையின் பலன் மீண்டும் உங்களுக்கே திருப்பி அளிக்கப்படும் !இறைவனின் செயல்களை புரிந்து கொள்ள முடியாமல் போனாலும், அது பொருளற்றது என்று கூற இயலாது. செயல் ஓரிடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும், பலன் மற்றோரிடத்தில் கிடைத்துக் கொண்டிருக்கும்.  ஆகையால் நீங்கள் எங்கு இருந்து கொண்டு ஆராதனை செய்தாலும், அது இறைவனுக்கு தெரிந்து கொண்டுதான் இருக்கும்.  உங்கள் பூஜைகள் அவரை அடைந்து கொண்டேதான் இருக்கும்.  அந்த பூஜையின் பலன் மீண்டும் உங்களுக்கே திருப்பி அளிக்கப்படும். அனைவரையும் கடைத்தேற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இறைவன் இருப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள்!


- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 9, 2022

பேராசைக்காரனுக்கு சாந்தியில்லை; திருப்தி இல்லை ; நிம்மதியில்லை !
பேராசைக்காரனுக்கு சாந்தியில்லை; திருப்தி இல்லை; நிம்மதியில்லை. பேராசை மனதுள்ளே புகுந்துவிட்டால், ஆன்மீக முன்னேற்றத்திற்கு உண்டான அத்தனை கதவுகளையும் மூடிவிடும். மனக் குவிப்பிற்கோ தியானத்திற்கோ  நேரம் இருப்பதில்லை.  பேராசை பிடித்தவர் ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்லை .  பேராசையும் கடவுளும் எதிர் எதிர் துருவங்கள் !


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 8, 2022

என் அவதார ரகஸ்யம் !என் அவதார ரகஸ்யம் என்னவென்பதை கூறுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.  தீனர்களை, திக்கற்றர்களை, அறியாமையில் உள்ளவர்களை காப்பதற்காகவே நான் அவதரித்தேன்.  சாஸ்திரங்களுடன் தர்க்கம், வேதங்களுடன் தர்க்கம், பிரக்ஞையுடன் தர்க்கம், புலமையுடன் தர்க்கம் செய்யும் சப்தஜால வல்லுனர்களுக்கு ஒருக்காலும் நான் கிடைக்கமாட்டேன்.  தர்க்கமும் பிடிவாதமும் எனக்கு அறவே பிடிக்காது.  மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை.  முக்தி மார்க்கத்தின் கதவுகளை மூடி, தர்க்கவாயிலை திறப்பவர்களை எந்த சக்தியும் காப்பாற்றாது.


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 7, 2022

யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே பாபா கொடுக்கின்றார் !யார் வந்து எதை வேண்டினாலும், பாபா முதலில் அந்த பக்தருடைய ஆன்மீக அதிகாரத்தையே நோக்குகின்றார். பிறகு, யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே கொடுக்கின்றார்


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 6, 2022

மனத்தின் மீது முழுக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனே இறைவனை அடைவான் !


மனத்தின் மீது முழுக்கட்டுப்பாடு உடைய, விவேகமுள்ள புத்தியாலும் ஒருமுனைப்பட்ட சித்தத்தாலும் ஆட்சி செய்யப்படும் மனிதனே இறைவனை அடைவான். மற்றவர்கள் வழியிலேயே சோர்ந்து வீழ்வார்கள்.  சதா கட்டுப்பாடில்லாத மனத்தை உடையவன் என்றுமே திருப்தி அடையமாட்டான்; சம்சாரச் சுழலிலிருந்தும் அவனால் விடுபட முடியாது.


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 5, 2022

எது தேவையோ அதை மட்டும் பேசுங்கள் !இதயத்தை தூய்மை செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞானகர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி .  "ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்; எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும் !". 


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 4, 2022

பாபாவைத் தவிர வேறு எவருக்கும் நம்மை அக்கரை சேர்க்கும் சாமர்த்தியம் இல்லை !
பணத்தாசையால் விலைமதிக்க முடியாத மனித உடல், எதற்கும் உபயோகமில்லாமல் உளுத்துப் போக அனுமத்திக்கபடுகிறது. பணத்தாசை என்பது உச்சிவெயில் நிழலைப் போலக் கண்டறியக் கஷ்டமான விஷயம்.  கலியுக மாயையை வெல்வது கடினம். ஈதனைத்தையும் அறிந்து, பாபாவைப் போன்ற ஞானிகளின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.  பாபாவைப் போன்ற ஞானிகள் மட்டுமே பிறவிக்கடலைக் கடக்க உதவும் கப்பலாவர்.  இக்கப்பலில் ஒரு பிரயாணி ஆகிவிடுங்கள். வேறு எவருக்கு நம்மை அக்கரை சேர்க்கும் சாமர்த்தியம் இருக்கிறது?


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 3, 2022

பக்தர்களுக்கு பின்னால் பாபா எந்நேரமும் அரணாக நிற்கிறார்!
பாபா எங்கிருக்கிறார் என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறார்; ஆனாலும், விளைவுகளும் அனுபவங்களும் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் பாபா எந்நேரமும் அரணாக நிற்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி செய்கின்றன.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 2, 2022

திகம்பரா ! திகம்பரா ! ஸ்ரீபாத ஸ்ரீவல்லப திகம்பரா ! தத்த திகம்பரா !
இந்த கலியுகத்தில் கடவுளின் பெயரை ஜெபம் செய்வதை விடவும் பாவத்தை போக்க வேறு சிறந்த வழியே இல்லை.  நாமஸ்மரணம் மூலம் வாயுமண்டலம் முழுவதும் தூய்மை அடைந்துவிடும்.  யாராக இருப்பினும் என்னுடைய நாமத்தை "திகம்பரா ! திகம்பரா ! ஸ்ரீபாத ஸ்ரீவல்லப திகம்பரா ! தத்த திகம்பரா !"  என்று பக்தியுடன் ஜெபம் செய்வாரேயாகில் என்னை அவர் எளிதாக அடைந்துவிடலாம்.  அவர்கள் அனைத்து செல்வச் செழிப்புகளையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைவார்கள்.


- ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 1, 2022

உங்களுடைய எண்ணங்களை பாபாவை நோக்கித் திருப்புங்கள் !
ஓ குருவரா !  கருணாகரா !  எங்களைக் காப்பாற்றுங்கள். இவ்வுலக வாழ்வு எந்த நிம்மதியையும் அளிப்பதில்லை. போதும், போதும், போதும் இந்த ஜனனமரணச் சுழற்சி! புலனின்பங்களை நாடி நாடி, கட்டவிழ்ந்து ஓடிஓடி அவற்றிலேயே மூழ்கிப்போகும் எங்களைத் தடுத்தாட்கொள்ளுங்கள்.  எங்களுடைய எண்ணங்களை உங்களை நோக்கி உள்முகமாகத் திருப்புங்கள் !


- ஹேமாட்பந்த் (ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரத்திலிருந்து)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...