Sunday, July 31, 2022

மலைபோன்ற பாவங்களையும் எரித்துவிடும் பாபாவின் கடைக்கண் பார்வை!


பாபாவின் கிருபைமிகுந்த கடைக்கண்பார்வை மலைபோன்ற பாவங்களை அக்கணமே எரித்துவிடும்.  க­லியுகத்தின் மலங்களைக் கழுவி அடித்துக்கொண்டு போய்விடும்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 30, 2022

பாபாவின் திருவாய்மொழி விலைமதிப்பற்றது; வீண்போகாதது !



பாபாவின் திருவாய்மொழி அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது ; சமச்சீரானது ; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது ; வீண்போகாதது !.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 29, 2022

பாபாவின் இரண்டு பாதங்களையும் இறுகப்பற்றிக் கொண்டவருடைய பாவங்கள் அனைத்தும் அழியும் !



பாபாவின் இரண்டு பாதங்களையும் இறுகப்பற்றிக் கொண்டவருடைய பாவங்கள் அனைத்தும் அழியும்.  பூர்வஜென்ம நல்வினைகளின் பலன்கள் மேல்தளத்திற்கு எழும்பும்.  வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வராது !

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 28, 2022

பூவுலகின் சொர்க்கம் அது.. ஷீரடி.. ஷீரடி.. ஷீரடி...




பூவுலகின் சொர்க்கம் அது ஷீரடி..! ஷீரடி..!!



"நாடெங்கும் புண்ணியத் தலங்களும்,  புண்ணிய தீர்த்தங்களும்,  அபரிமிதமாக இருக்கின்றன.  ஆயினும், ஸாயீ பக்தர்களுக்கு ஷீரடியே  மிகப் பவித்திரமானது ! புனிதமானது !!"

- ஸ்ரீஸாயீ சத்சரித்திரம்


உலகெங்கும் கோடான கோடி கோவில்களும், புண்ணிய ஸ்தலங்களும் இருந்தாலும், சாய் பக்தர்களால்,  ""ஷீரடி"" ஒன்றே உயர்ந்ததிலும் உயர்ந்ததாக, மிக மிகப் புனிதமான சொர்க்கமாக போற்றி வணங்கப்படுகிறது.  இதை பறைசாற்றும் விதத்தில் பின்வரும் பாபாவின் இரவு ஆரத்தி பாடல் உள்ளது....


ஸாயீ மஹாராஜின் சமஸ்தானம் ஷீரடி !
சமதர்மப் பேருலகம் ஷீரடி! ஷீரடி !!


ஸாயீ மஹாராஜின் சமஸ்தானம் ஷீரடி !
சமதர்மப் பேருலகம் ஷீரடி! ஷீரடி !!


வேம்பு இனித்ததுவும் ஷீரடி!
வேதம் தழைத்ததுவும் ஷீரடி !
காந்தமாய் ஸாயீ கவர்ந்த இடம் ஷீரடி!
கடவுளாய் காட்சி தந்த இடம் ஷீரடி!


ஸாயீ மஹாராஜின் சமஸ்தானம் ஷீரடி !
சமதர்மப் பேருலகம் ஷீரடி! ஷீரடி !!


கீதையின் சாரமெல்லாம் ஷீரடி !
மேதைகள் போற்றும் இடம் ஷீரடி!
அற்புதங்கள் நிகழ்ந்த இடம் ஷீரடி!
அதிசயங்கள் மலர்ந்த இடம் ஷீரடி! ஷீரடி !!


ஸாயீ மஹாராஜின் சமஸ்தானம் ஷீரடி !
சமதர்மப் பேருலகம் ஷீரடி! ஷீரடி !!


தாயாக ஸாயீ வாழ்ந்த இடம் ஷீரடி!
தக்கபடி குழந்தைகளைக் காத்த இடம் ஷீரடி !
பொற்பதங்கள் போற்றும் இடம் ஷீரடி !

பூவுலகின் சொர்க்கம் அது ஷீரடி !
பூவுலகின் சொர்க்கம் அது ஷீரடி ! ஷீரடி !!


ஸாயீ மஹாராஜின் சமஸ்தானம் ஷீரடி !
சமதர்மப் பேருலகம் ஷீரடி! ஷீரடி !!
ஸாயீ மஹாராஜின் சமஸ்தானம் ஷீரடி !
சமதர்மப் பேருலகம் ஷீரடி! ஷீரடி !!

ஷீரடி.. ஷீரடி... ஷீரடி... ஷீரடி... ஷீரடி... ஷீரடி...




(பாபாவின் இரவு ஆரத்தி பாடலிலுள்ளது)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 27, 2022

பக்தர்களை தீங்கிலிருந்து மீட்டு உயர்த்துவதே, பாபாவின் அவதார லட்சியம் !



பக்தர்களை தீங்கிலிருந்து மீட்டு உயர்த்துவதே, பாபாவைப் போன்ற குருமார்களின் ஜீவாதாரமான மூச்சுக்காற்று. குருவம்ச திலகமாகிய பாபாவுக்கு, தன்னுடைய 
அவதார லட்சியம் இதைவிட வேறு என்னவாக இருக்கமுடியும் ?.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 26, 2022

ஸாயீதரிசனம் நம்மையும் நம் வாழ்வையும் தூய்மைப்படுத்திவிடும் !



பாவங்களையும்,  இடர்களையும்,  இன்னல்களையும்,  துயரங்களையும் நாசம் செய்து அழித்துவிடும் ஸாயீயினுடைய தரிசனமும், அவருடைய புனிதமான சங்கமும் நம்மையும்,  நம் வாழ்வையும் தூய்மைப்படுத்திவிடும்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 25, 2022

பக்தர்களின் ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது ஸாயீதரிசனம் !



ஸாயீயின் தரிசனத்தின் அற்புதம் இதுவே ! அதாவது, ஸாயீயின் தரிசனமே நம்முடைய ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது.  நம்முடைய வாழ்க்கையில் மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜன்மவினை துடைக்கப்பட்டு, இந்திரிய சுகங்களின்மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும்.    ஸாயீயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜன்மங்களாக நாம் சேமித்த பாவங்களை அழித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை நமக்களிக்கும் என்னும் நம்பிக்கையை வேர்விடச் செய்யும்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 24, 2022

பாபாவின் சொற்களும் கருணையுமே, மருந்தும்-பிரசாதமும் !



பாபாவின் சொல்லை எவர் பிரசாதமாக எடுத்துக் கொள்கிறாரோ,  அவருக்கு மருந்து ஏதும் தேவையில்லை !  பாபாவின் சொற்களும் கருணையுமே பல்வேறு வியாதிகளை நிரந்தரமாகக் குணப்படுத்தும் உண்மையான மருந்து !


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 23, 2022

நான் கூறுவதைக் கேளுங்கள் ! உங்களுக்கு சகல மங்களங்களும் உண்டாகும் !



"நான் கூறுவதை உங்களது மனத்தில் நன்கு நிலைபெறச் செய்து விட்டீர்களேயானால்,  உங்களது வாழ்க்கை கற்கண்டைப் போல இனிக்கும்.   கற்கண்டுகள் இனிப்பாக இருப்பது போலவே உங்களுடைய மனத்தின் ஆசைகளும் நிறைவேறும். உங்களுக்கு சகல மங்களங்களும் உண்டாகும்.  மனத்தின் ஆழமான ஏக்கங்களும்  திருப்தியுறும் !"

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 22, 2022

பாபாவின் பக்தருக்கு, தான் விரும்பியதை அடையவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை !




ஷீரடி ஸாயீபாபா ஓர் பரமதயாள மூர்த்தியாவார்.  தனது உண்மையான பக்தர்களின் மீது தனக்குள்ள அளவுகடந்த பிரியத்தினால்,  அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியையே அளிக்கிறார்.  இங்கு பக்தனுக்கு தேவையானது,  பாபாவைத் தவிர வேறெதிலும் நாட்டமில்லாத பக்தி ஒன்றே !.   அப்பேர்பட்ட பக்தர் பாபாவின் மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் உடையவராக இருந்துவிட்டால்,  தான் விரும்பியதை அடையவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை !"


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 21, 2022

சகல நன்மைகளும் தரும்... சர்வசக்தி வாய்ந்த... ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி !



ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி

எழுதியவர்:

ஸ்ரீதாஸ்கணுமஹாராஜ்.

(இயற்பெயர் : கண்பத்ராவ் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே)


ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவைப் போற்றிப் புகழும் "ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி" என்ற ஸ்துதிமாலை, பாபா சீரடியில் வாழ்ந்த போதே, 1918-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி எழுதி முடிக்கப்பட்டது. இதற்குப்பின் 37 தினங்களில், அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பாபா மஹாசமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்ரீசாயிநாத‌ ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையில் 146 முதல் 156 வரை உள்ள ஸ்லோகங்கள்,  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரியை படிப்பதினால் கிடைக்கும் பலன்களும், தினமும் இந்த ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை படிப்பவர்கள் அடையப்போகும் பலவித நன்மைகளைப் பற்றியும் தெள்ளத்தெளிவாக விரிவாக கூறப்பட்டுள்ளது.

தினந்தோறும் தவறாமல் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட வேண்டிய புனிதநூல் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஆகும்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையானதுஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண ஆசியைப் பெற்ற ஸ்துதியாகும்.

எனவே, சாய் பக்தர்கள் அனைவரும் தவறாமல் பாராயணம் செய்யும்படியும்,  தினமும் நித்யபாராயணம் செய்யும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் தொடர்ந்து படிப்பதனால் கிடைக்கும் பலன்களை கீழ்காணுமாறு ஸ்ரீதாஸ்கணு மஹாராஜ் கூறுகிறார் :

🕉️ ஓ.. ஸாயீமஹாராஜ்! இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை யார் யாரெல்லாம் அன்புடன் படிக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொருவரின் ஆசைகளையும் தயவுசெய்து நிறைவேற்றுங்கள் !

🕉️ இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் படிப்பவர்களின் மூன்று வித தாபங்களும், துன்பங்களும் ஒரு ஆண்டிற்குள் நீங்கிவிடும் என்பதே இந்த ஸ்துதி மீதான உங்களின் நிலைத்த ஆசியாக இருக்கட்டும்.

🕉️ தினமும் குளித்து முடித்த உடனேயே மனதில் முழுமையான நம்பிக்கையுடன் தொடர்ந்து  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை நித்யபாராயணம் செய்திடல் வேண்டும்

🕉️ அப்படித் தினமும் பாராயணம் செய்ய முடியாவிட்டாலும், வாராவாரம் வியாழக்கிழமை தோறும் சத்குரு சாய்பாபாவை வணங்கி, அவருடைய உருவத்தை மனதில் நினைத்து இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை பாராயணம் செய்யுங்கள்.

🕉️ இதுவும்கூட முடியாவிட்டால், மாதாமாதம் வரும் இரண்டு ஏகாதசி நாட்களில் மட்டுமாவது இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை பாராயணம் செய்யுங்கள்.  அப்படிச் செய்வதினால் ஏற்படும் முழுப்பலனையும்  விளைவுகளையும் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

🕉️ இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் படிப்பவர்களுக்கு இறுதியில் உயர்ந்த அருளினை குருமூர்த்தி அளிப்பார்.  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைக் கேட்பவர்களுக்கு இவ்வுலக ஆசைகளை உடனடியாக முழுமையாக நிறைவேற்றுவார்.

🕉️ இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைத் திரும்பத் திரும்ப பாராயணம் செய்வதால் முட்டாள்களுங்கூட கூர்மையான புத்தியைப் பெற்று அறிவாளிகள் ஆவார்கள். 

🕉️ எவருக்காவது வாழ்நாள் (ஆயுட்காலம்) குறைவாக இருப்பின், இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் படிப்பதால் நூறாண்டு காலம் ஆயுள் பெற்றவராகிவிடுவார்கள்.

🕉️ இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், செல்வம் குறைவாக (ஏழையாக) இருந்தாலும்கூட, குபேரன் அவர்கள் வீட்டில் வந்து தங்கி அவருக்கு சேவை செய்வான்.  இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் என மூன்று முறை கூறுகிறேன்.

🕉️ குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், குழந்தைப்பேறு கிடைக்கும்.  

🕉️ இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைத் தினமும் படிப்பவர்களின் வியாதிகள் முற்றிலுமாக குணமாகும்.

🕉️ இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைத் திரும்ப திரும்ப படித்தால், பயமும் மனக்கவலைகளும் பறந்தோடிவிடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.  அழிவற்ற பிரம்மஞானத்தை உணர்வார்கள்.

🕉️ ஓ அறிவுடையவர்களே ! நீங்கள்  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதிகளின் மீது முழுமனத்துடனான  உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள். 

🕉️ இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் பற்றிய வீணான சந்தேகங்கள்,  தவறான எண்ணங்களுடன் கூடிய அவநம்பிக்கை ஆகியவற்றுக்கு கொஞ்சம் கூட மனதில் இடம் கொடுத்துவிடாதீர்கள்.


முக்கியக் குறிப்பு :

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி பாராயணம் செய்துமுடித்த கையோடு, ஒவ்வொரு நாளும் இரண்டு ரூபாய் காணிக்கையை ஸ்ரீ சாய்நாதருக்கு தட்சணையாக செலுத்தி, உங்கள் பிரார்த்தனைகளை அவருடைய திருவடிகளில் சமர்ப்பணம் செய்யுங்கள். அப்படிச் செய்வதினால் பாராயணம் செய்த பலனை நீங்கள் உடனுக்குடன் பெறுவீர்கள் என்பது நிச்சயம். 

இந்த ஸ்துதியை ஆத்மப்பூர்வமாக மனமொன்றி படிப்பவர்களின் வாழ்வில்  எதிர்பார்த்திராத திருப்பங்களையும், அற்புதங்களையும் பாபா நிகழ்த்துவார் என்பது அனுபவப்பூர்வமான உண்மை என்பதை சாய் பக்தர்களாகிய  நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பதுவும் நிச்சயம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 20, 2022

அரை நிமிடத்தையும் வீணாக்காமல் பாபாவின் வழிபாட்டுக்கு மனதைத் திருப்புங்கள் !



எவர் எனது வழிபாட்டில் பூரணமான விருப்பம் கொண்டு,  அரை நிமிடத்தையும் வீணாக்க மாட்டாரோ,  அவருக்கு நான் எல்லையற்ற ஆனந்தத்தை அளிப்பேன் !  அவரை பிறவிக்கடலைத் தாண்டி அழைத்துச் செல்வேன் !


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 19, 2022

தர்மநெறியை விட்டு விலகியவர்கள், நெறிமுறை பாராதவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி நல்வாழ்வு வாழ முடியும்?



யார், யாரெல்லாம் ''நாம், நமது இஷ்டம்போல் செயல்பட்டால் என்ன ஆகிவிடும்?" என்று சொல்கிறார்களோ, அவர்கள் வழிதவறிவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  தர்மநெறியை விட்டு விலகியவர்களை நாம் முதற்காரியமாக விலக்கிவிட வேண்டும்."

''நெறிமுறை பாராதவனும்,  ஒழுக்கமில்லாதவனும் ஆத்ம விசாரம் செய்யாதவனும், அனுஷ்டானம் இல்லாதவனும் நன்மை-தீமை பாகுபாடு தெரியாதவனும் எப்படி நல்வாழ்வு வாழமுடியும்?

"இந்த மாதிரியான குணம் உள்ளவர்கள் உங்கள் எதிரில் வந்தால், நீங்கள் வேறுவழியில் சென்றுவிடுங்கள். அவர்களை பயங்கரமானவர்களாகக் கருதுங்கள். சிறிது சிரமப்பட்டாவது, அவர்களுடைய நிழலும் உங்கள்மீது விழாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 18, 2022

உனது நடத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை புறங்கூறித் திட்டிக் கொண்டிருந்தால், ஷீரடி உனக்கு எவ்விதத்திலாவது உதவி செய்யுமா?



பல்வேறு நல்வினைகள் செய்ததன் பலனாக நீ மனிதனாக பிறந்திருக்கிறாய்.  இருப்பினும், சகோதரர்கள், தோழர்கள் செய்த நன்மைகளை எல்லாம் மறந்து,  புறத்தொதுக்கி,  உனது நடத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டு,  அவசியமின்றி மற்றவர்களை புறங்கூறி மனதார திட்டிக் கொண்டே இருக்கிறாய்.  இவ்வாறு நீ நடந்து கொண்டால் சீரடி உனக்கு எவ்விதத்திலாவது உதவி செய்யுமா‌?

அமைதியாகவும், கட்டுப்பட்ட மனத்துடனும் இருக்கவேண்டும்.   யாரையும் உடனே புண்படுத்தும் விதமாக ஒருவரிடமும் வெட்டென்று பேசக்கூடாது. எப்போதும் நல்வினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.  தனது கடமைகளைத் தானே செய்யவேண்டும்.

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 17, 2022

குருபக்தி.. குருபக்தி.. குருபக்தி.. இதுவே அமைதி தரும் ரகசியம் !



பயப்படாதீர்கள் ! இழப்புக்கும் இறப்புக்கும் கலங்காதீர்கள் ! மனதை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் !  அதற்கு சாதனமாக,  நீங்கள் குருபக்தியை கையில் எடுங்கள்.  குருபக்திப் பாதையில் கிளம்புங்கள்.  அமைதி கிட்டும் !.   ஜபம், பஜனை, ஆன்மீகப் பேருரைகள்,  சத்சங்கம் இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ளுங்கள்.   எதையும் தனக்கென வைத்துக் கொள்ளாதீர்கள்.   ஏழை போல ஆகி விடுங்கள். துறவி போல துறந்துவிடுங்கள்.  ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் குருபக்தி,  குருபக்தி, குருபக்தி மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.  இதுவே சனாதான தர்மம். அமைதி தரும் ரகசியம்.


(பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜிக்கு உபாசனி மஹாராஜ் போதனை செய்தது )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 16, 2022

பாபாவின் வார்த்தைகள் மீதான நம்பிக்கையே பலனுக்கான அஸ்திவாரம் !


பாபாவின் வார்த்தைகள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே‌ அவரிடமிருந்து பெறும் பலனுக்கான அஸ்திவாரம்.  இங்கு சந்தேகம் என்பதற்கு துளியும் இடமில்லை !


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 15, 2022

தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களைக் காப்பதே ஸாயீயினுடைய சத்தியமான விரதம் !


உலகத்திலுள்ள ஒவ்வொரு ஜீவனின் ஆழ்மனத்தின் எண்ண ஓட்டங்களையும் அறிந்து வைத்திருக்கும் சர்வாந்தார்யாமியே ஸாயீபாபா.  நம்முடைய ஒவ்வொருவரின் கடந்தகாலமும்,  நிகழ்காலமும், எதிர்காலமும் அவருக்கு வெட்டவெளிச்சமாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல்,  தெள்ளத்தெளிவாக தெரியும்.  தன் பக்தனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதும் பாபாவுக்கு நன்கு தெரியும்.  தன்னை மட்டுமே நம்பி சரணாகதி அடைந்த பக்தனுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல்  காப்பாற்றுவதே ஸாயீயினுடைய சத்தியமான விரதம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் !.

- ஸ்ரீசாயி சத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 14, 2022

மனம், வாக்கு, சித்தம் ஆகியவற்றுடன் பாபாவின் பாதங்களைப் பணிபவனே பாபாவின் சக்தியை‌ அனுபவிப்பான் !



பாபா மஹா பரோபகாரி. அவருடைய பெருந்தன்மையை எவ்வாறு வர்ணிக்க முடியும் ? வெளிப்பார்வைக்கு வெண்பளிங்குச் சிலையாக தோன்றிய போதிலும்,  உள்ளே இளகிய மனமுடையவர்.  அவருடைய பெருமை அளவிடமுடியாதது.  எவனொருவன்  தன்னுடைய அஹம்பாவத்தை விடுத்து, வாக்கு‌, மனம், சித்தம் ஆகியவற்றுடன் அவருடைய பாதங்களைப் பணிகிறானோ, அவனே பாபாவின் பெருமையை விளக்கும் சக்தியை அனுபவிப்பான்."

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 13, 2022

குருவருளைப் பெற, குருபக்தனாய்‌ உயர சுத்தமானவனாகவும், சத்தியப்பார்வை கொண்டவனாகவும் மாறவேண்டும் !


குருபக்தன் அல்லது குரு பக்தனாய் உயர நினைப்பவன், முதலில் தன்னைக் கற்புடையவனாகவும், சுத்தமானவனாகவும் அடியார்க்கு அடியவனாகவும் நேர்கொண்ட சத்தியப்பார்வை கொண்டவனாகவும் ஆக்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் குருவருளைப் பெறத் தகுதி உடையவராக முடியும்.


- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி

குருவே சரணம் !
குருவே சகலமும் !

குருவின்றி உயர்வில்லை !
குருவிற்கு நிகரில்லை !
குருவின்றி நிறைவில்லை !

சாய் பக்தர்கள் அனைவருக்கும் குருபூர்ணிமா வாழ்த்துக்கள் 🙏

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 12, 2022

"ஸ்ரீசுவாமி சமர்த்தர் !" சர்வ வல்லமை படைத்தவர்‌- எதையும் செய்ய வல்லவர்‌ !



ஸ்ரீசுவாமி சமர்த்தர் அக்கல்கோட் மஹாராஜ் எப்பொழுதும் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் வாசம் செய்தார்.  தாம் இந்த ஆலமரத்தின் ஆணிவேர் என்றும் கூறிவந்தார். 

ஸ்ரீசுவாமி சமர்த்தர் கி.பி.1878ல் மஹாசமாதி அடைந்தபிறகும் இன்றுவரை இந்த ஆலமரத்தில் வாசம் செய்துகொண்டிருப்பதையும், அவரது மூச்சுக்காற்று "ராம்..ராம்..ராம்.." என்று அங்கு பிரதிஷ்டை செய்திருக்கும் அவர் பாதுகைகளிலிருந்து ஒலிப்பதையும் காதாரக் கேட்டுப் பரவசமடையலாம்.

ஸ்ரீ சமர்த்த சுவாமிகள் பற்பல அற்புத லீலைகள் அரங்கேறிய புனிதமான இந்த இடத்தில் தற்போது அந்த ஆலமரத்தை சுற்றி சுவாமிகள் கோயில் "வடவ்ருக்ஷமந்திர்" என்ற பெயரில் சிறப்புற்று விளங்குகிறது.

சமர்த்தர் என்பதற்கு "சர்வ வல்லமை படைத்தவர்", "எதையும் செய்ய வல்லவர்", "முடியாதது எதுவும் இல்லை " என்று பொருள்.

தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீசுவாமி சமர்த்தர் சதா சர்வகாலமும் கீழ்க்காணும் சுலோகத்தைப் பாடிக் கொண்டே இருந்தார்....

தியான மூலம் குரோர்மூர்த்தி ;
பூஜா மூலம் குரோர் பதம் ;
மந்திர மூலம் குரோர் வாக்யம் ;
மோக்ஷமூலம் குரோர் கிருபா !

இதன் பொருள் :

ஒரு பக்தனுக்கு தனது குருவின் திருவடியே தியானத்திற்கு மூலமாகவும்,
குருவின் பாதங்களே அனைத்து பூஜைகளுக்கும் உரிய மூலப்பொருளாகவும்,
குருவின் திருவாய்மொழிகளே அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மூல மந்திரமாகவும்,
குருவின் திருவருளே முக்திக்கு மூலமாகவும் விளங்குகிறது.

குருகடாட்சம் பரிபூரணம்‌!

குருவின் கடைக்கண் அருட்பார்வை அனைவருக்கும் முழுமையாக கிடைக்கட்டும் !

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 11, 2022

இறைவனைக் காண விரும்பினால் எவருக்கும் அபகாரம் செய்யாமல் உபகாரத்தையே செய்யுங்கள் !



இறைவனைக் காண்பது என்பது அரிது.  ஆனால் நீங்கள் இறைவனைக் காண விரும்பினால், பணத்தின் மீதுள்ள ஆசையை ஒழித்து, சம்சார பந்தத்தை பரித்யாகம் செய்யத் துணியவேண்டும். அதற்கு சம்மதித்தால் இறைவனை நீங்கள் காணலாம்.  எவரையும் அபகாரம் செய்யாமல் உபகாரத்தையே செய்யுங்கள் !

- ஸ்ரீமாணிக்பிரபு சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 10, 2022

குருபக்தியின் வழிபாட்டு முறைகள் யாவையும் அர்த்தமற்றதாக எண்ணவேண்டாம் !




என்னுடைய பக்தர்களான நீங்கள் அனைவராலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்டு மதிக்கப்படுவீர்கள்.   ஒருநாளும் குருசேவையில் உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள் ! குருபக்தியின் வழிபாட்டு முறைகள் யாவையும் அர்த்தமற்றதாக எண்ணவேண்டாம் ! ஆயினும் முழுவதுமாக உங்களை அந்தப் பயிற்சியில் இயந்திரகதியாக மாற்றிக்கொள்ள வேண்டாம்.  பலனைக் கருத்தில் கொள்ளாதவாறு குருபக்தியில் உங்கள் கடமையைச் செவ்வனே செய்யுங்கள் ! இறைவனை அடைவதற்கு அதுவே எளிமையான வழியாகும். உங்களுடைய பார்வை எப்பொழுதும் குற்றம் இல்லாததாக இருக்க வேண்டும்.   என்னுடைய கருத்தை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்களுடைய வீட்டில் என்னை நினைத்து தியானித்தால், நான் உங்களை  ஆசீர்வதிப்பேன்!

- ஸ்ரீ கஜானன் மஹாராஜ்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 9, 2022

ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் சரித்திரம் ஒரு தெய்வீகப் பொக்கிஷம் !




ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் சரித்திரம் ஒரு தெய்வீகப் பொக்கிஷம். இதைக் கேட்பது, நினைத்துப் பார்ப்பது, இதைப் பற்றி பேசுவது, விவாதிப்பது, படிப்பது யாவுமே மிக மிக அரிய செயல்கள் ஆகும்.  நீங்கள் அவரது சரித்திரத்தை படிக்கும் பாக்கியம் பெற்றிருப்பது ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் உங்கள் மேல் பொழியும் அளவற்ற அருளே ஆகும்.  இதுவே உங்களுக்கு ஒரு மஹாபாக்கியம். மிகப்பெரிய ஞானிகளுக்கும் கிடைத்தற்கரியது. உங்களுக்கு அந்த பாக்கியத்தை அவர் அளித்திருக்கிறார்.  இது முற்றிலுமே அவரது சங்கல்பமும் விருப்பமுமே ஆகும்.

- ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதம்


ஸ்ரீபாதராஜம் சரணம் பிரபத்யே !
திகம்பரா திகம்பரா ஸ்ரீபாத ஸ்ரீவல்லப திகம்பரா !

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 8, 2022

ஸ்ரீகுரு சரித்திர பாராயணத்தினால் பாவங்கள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும் !



எப்பொழுதும் குருவுடனே இருங்கள்.  குரு சரித்திரம் என்ற இப்புனித புத்தகத்தை எப்பொழுதுமே பாராயணம் செய்து கொண்டே இருங்கள்.  ஏனென்றால் குரு சரித்திர பாராயணத்தினால் நல்வாழ்வும் முக்தியும் பெற வழி கிடைக்கும்.  பக்தியுடனும், சிரத்தையுடனும், நம்பிக்கையுனும் ஏழு நாட்கள் பாராயணம் செய்பவர்களின் பாவங்கள் தீர்ந்து பிள்ளைப்பேறு, செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஞானம் ஆகியவைகளில் யார் யாருக்கு எது தேவையோ அது அவர்களுக்கு கிடைக்கும்.  நோயாளிகள் நோயிலிருந்து விடுபடுவார்கள்.  எல்லா வளமும் கொடுக்கும் சிந்தாமணிக்கு சமமானது இந்த குரு சரித்திரம்.

- ஸ்ரீகுரு சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 7, 2022

பொய்மை கலந்து எதிர்ப்படும் அத்தனை தடைகளையும் தானாகவே விலக்கும் சக்தி வாய்ந்தது சாய்பாபாவின் சத்சரித்திரம் !



ஒவ்வொரு பக்தனின் நடைமுறை வாழ்க்கையில்,  பொய்மை கலந்து எதிர்ப்படும் அத்தனை தடைகளையும் தானாகவே விலக்கி, சந்தோசம் கொடுக்கவல்ல கருவியாகவே,  தனது சாயிசத்சரித்திரம் எனும் வாழ்க்கைச் சரிதையை பாபா எழுத வைத்துள்ளார்.  தன் பக்தர்களை  மீண்டும் மீண்டும் அதை படிக்க வைத்து, அவர்களை  உயர்த்திக் கொண்டிருப்பவரே சாயிபாபா என்பது சத்தியமான உண்மை !


- பூஜ்யஸ்ரீ பி.வி.நரசிம்ம சுவாமிஜி, 
ஸ்தாபகர், அகில இந்திய சாயிசமாஜம் மயிலாப்பூர் சாய்பாபா ஆலயம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 6, 2022

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "



சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏


"குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்"


வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்பட உள்ளது.

குருவின் அவதாரத் திருநாளாகவும், குருவை வணங்கி, குருதட்க்ஷிணை சமர்ப்பணம் செய்து குருவுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

சம்சார வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், குருவின் கதைகளைக் கேட்டும் பாராயணம் செய்தும், குருவின் நாமத்தை தொடர்ந்து உச்சரித்தும், குருவின் நாமாவளிகளை பாடுவது மட்டுமே குருவிற்கு சமர்ப்பணம் செய்யும் மிகச்சிறந்த தட்க்ஷிணை ஆகும்.

எனவே சாய் பக்தர்களாகிய நாம் அனைவரும் நாளை 7-7-2022 முதல் 13-7-2022 முடிய ஏழுநாட்கள் குரு சம்பந்தப்பட்ட புனித வரலாறுகளை சப்தாக பாராயணம் செய்து பலனடைவோம்.

1. ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

2  ஸ்ரீகுரு சரித்திரம்

3. ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் சரித்ராம்ருதம்

4. ஸ்ரீஅக்கல்கோட் சுவாமி சரித்திரம்

5. ஸ்ரீமாணிக்பிரபு சரித்திரம்

6. ஸ்ரீகஜானன்மஹாராஜ் சரித்திரம்

இதில் ஏதேனும் ஒன்றினை சப்தாக பாராயணம் செய்து முடித்து, 13-7-2022 குருபூர்ணிமா தினத்தன்று அருகில் உள்ள பாபா கோவிலில் தட்க்ஷிணை சமர்ப்பித்து குருவின் பரிபூரண அருளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவோமாக !


🙏 ஜெய் சாய்ராம்‌ 🙏

குருவே சரணம் ! குருவே சகலமும் !!

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !



பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்து,  பக்தரின் அன்பையும் பக்தியையும் கௌரவிக்கிறார்.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 5, 2022

அஹங்காரத்தால் எழும் விவாதத்தால் மன அமைதியை இழக்க நேரிடும் !



கொள்கை மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகளுடன் விவாதம் நடத்தி களைப்படைந்துவிட்டால் முடிவாக மன அமைதியை இழக்க நேரிடும்.  வலிவான சரீரம், அஹங்காரம் இவை இரண்டும் இல்லாவிடில் விவாதமே இல்லை‌. அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது. ஆகவே, உம்முடைய புத்தி சாதுர்யத்தை தள்ளிவிடுக ! பெருமையும் அஹங்காரமும் உமக்கு உதவாது !

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 4, 2022

பாபாவின் துணையும் திருவடிக் கருணையுமே போதும் !



பாபாவின் திருவடிக் கருணையே எப்பணியையும் எளிதாக நிறைவேற்றிவிடும்.  பாபாவின் துணையின்றி எதுவும் வெற்றிகரமாக செய்ய இயலாது.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 3, 2022

மாயைக்கு எட்டாத பரமாத்மன் இந்த துவாரகாமாயியில் வசிக்கிறார் !



இங்குள்ள பக்கீர் யாரையும் நிராகரிக்கமாட்டார்.  மாயைக்கு எட்டாத பரமாத்மன் இந்த துவாரகாமாயியில் வசிக்கிறார்.  யார் எந்த காரணத்தின் நிமித்தம் இங்கு வருவார்கள் என்பது அந்த பக்கீருக்கு நன்றாக தெரியும். இந்த பக்கீர் மாயைக்குப் புறம்பானவர். மாயை இல்லாதது எதுவோ அதுவே நிரந்தரமானது.
இந்த மசூதிக்கு வரும் ஒவ்வொருவரும் ஆனந்தமாக வருவார்கள். ஆத்மானந்தத்தைப் பெறுவார்கள்.

- ஸ்ரீசாயி திருவாய்மொழி

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 2, 2022

நமக்கு "எது நன்மை-எது‌ தீமை" என்பது பாபாவுக்கே தெரியும் !



நாமெல்லாம் திட்டம் தீட்டுகிறோம்; ஆனால் ,  நமக்கு ஆதியும் தெரிவதில்லை; அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது பாபாவுக்கே தெரியும்; இப்பிரபஞ்சத்தில் அவருக்குத் தெரியாதது எதுவுமே இல்லை‌ !.  யார் கெஞ்சினாலும் கெஞ்சாவிட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார் !


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 1, 2022

சாயிபாபாவின் நேரடியான தரிசனத்துக்கு கொடுத்து வைக்காதவர்களின் கண்களுக்கான விருந்தே "ஸ்ரீசாயி சத்சரித்திரம்" !



சாயிபாபாவின் நேரடியான தரிசனத்துக்கு கொடுத்து வைக்காத எளிய ஆத்மாக்களின் கண்களுக்கு விருந்தாகும் சிறந்த வழிபாடே ஸ்ரீசாயி சத்சரித்திர தொகுப்புகள். சாயிபாபாவின் அறிவுரைகளும், இயற்கையானதும், எல்லையற்றதுமான தன்னுணர்வுக் கருத்துக்கள் அடங்கிய களஞ்சியமே ஸ்ரீசாயி சத்சரித்திரம். இதை தினமும் படிப்பவர்களை,  இம்மை-மறுமை இரண்டிலும் பாபா பூரண சந்தோஷமாக்குகிறார்.

- ஸ்ரீஸாயீ சத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...