சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏
"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம்"
வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்பட உள்ளது.
குருவின் அவதாரத் திருநாளாகவும், குருவை வணங்கி, குருதட்க்ஷிணை சமர்ப்பணம் செய்து குருவுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
சம்சார வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், குருவின் கதைகளைக் கேட்டும் பாராயணம் செய்தும், குருவின் நாமத்தை தொடர்ந்து உச்சரித்தும், குருவின் நாமாவளிகளை பாடுவது மட்டுமே குருவிற்கு சமர்ப்பணம் செய்யும் மிகச்சிறந்த தட்க்ஷிணை ஆகும்.
எனவே சாய் பக்தர்களாகிய நாம் அனைவரும் நாளை 7-7-2022 முதல் 13-7-2022 முடிய ஏழுநாட்கள் குரு சம்பந்தப்பட்ட புனித வரலாறுகளை சப்தாக பாராயணம் செய்து பலனடைவோம்.
1. ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
2 ஸ்ரீகுரு சரித்திரம்
3. ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் சரித்ராம்ருதம்
4. ஸ்ரீஅக்கல்கோட் சுவாமி சரித்திரம்
5. ஸ்ரீமாணிக்பிரபு சரித்திரம்
6. ஸ்ரீகஜானன்மஹாராஜ் சரித்திரம்
இதில் ஏதேனும் ஒன்றினை சப்தாக பாராயணம் செய்து முடித்து, 13-7-2022 குருபூர்ணிமா தினத்தன்று அருகில் உள்ள பாபா கோவிலில் தட்க்ஷிணை சமர்ப்பித்து குருவின் பரிபூரண அருளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவோமாக !
🙏 ஜெய் சாய்ராம் 🙏
குருவே சரணம் ! குருவே சகலமும் !!
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil