Friday, August 12, 2022

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும்.  பிறர் பொருளை கண்டு பேராசைப்படக் கூடாது.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 11, 2022

பாபாவிடமிருந்து பிரிந்துவிடாத தூய, அன்பான பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் !பாபாவின் அருளால் கிடைக்கப்பெறும் உத்தமர்களின் சங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள் ! பாபாவின் பாதங்களில் சுயநலம் பாராத அன்பு செலுத்துங்கள் ! பாபாவின் புகழைப் பாடுவதில் பேரார்வம் காட்டி, நிர்மலமான பக்தியைப் பெருக்குங்கள் !  பாபாவிடமிருந்து  பிரிந்துவிடாத  தூய அன்பான பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் !


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 10, 2022

ஸ்ரீஸாயீயை‌ நினைப்பதன் மூலம் எல்லாத் துன்பங்களும் மறைகின்றன !வ்ருதா கேதாயஸே மூட அஹோ சிந்தாதுர : கதம்
ஸ்ரீ சாயிஸ் மதனேன ஏவ துக்கம் ஸர்வ கமஷ்யதி


ஓ! முட்டாளே! நீ தேவையில்லாமல் வீணாக கவலைப்படுகிறாய்.ஓ! எவ்வாறு கவலையில் பீடிக்கப்பட்டுள்ளாய். ஸ்ரீசாயியை நினைப்பதன் மூலமே எல்லாத் துன்பங்களும்  மறைகின்றன.


- ஸ்ரீசாயிநாத மனனம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 9, 2022

என்னுடைய அறிவுரைகளைக் கேட்டு இந்த ஜென்மத்தை‌ பயனுள்ளதாக செய்து கொள்வீர்களாக !நீங்கள் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே.  இப்பொழுது என்னுடைய அறிவுரைகளைக் கேட்டு இந்த ஜென்மத்தை‌ பயனுள்ளதாக செய்து கொள்வீர்களாக !

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 8, 2022

தம் முன் வீழ்ந்து வணங்குபவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு, கவலைகளினின்றும் விடுவித்து அருள்கிறார் ஸாயீபாபா !யார் யாரெல்லாம் பாபாவைப் பிரார்த்தித்து, அவர்முன்‌ வீழ்ந்து வணங்குகிறார்களோ, அவர்களது குற்றங்கள்‌ பலவற்றையும்‌ பொறுத்துக் கொண்டு, அவர்களின் கவலைகளினின்றும்‌ விடுவித்து அருள்கிறார்.  பெருந்துயரங்களால்‌ அவதியுற்றுக் கொண்டிருப்பவர்களும் சாயியை எப்போதும் நினைத்துத்‌ தியானித்தால், அவரது அருட்பார்வையினாலேயே அவர்களின் மனம்‌ அமைதியடைகிறது.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 7, 2022

மசூதித்தாயீ ஸாயீ வாழும் இடமே தெய்வீகமான சொர்க்கம் !


வியாதிகளுக்கும், கவலைகளுக்கும், வலிகளுக்கும், இன்னல்களுக்கும், எங்கு இடமில்லையோ,  யாருமே பசியாலும் தாகத்தாலும் முதுமை பற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவது இல்லையோ,  எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது விதிக்கப்படாது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் பயமின்றி உலவுகின்றனவோ, அவ்விடமே "மசூதித்தாயீ ஸாயீ வாழும்  தெய்வீகமான சொர்க்கம் "  என்று அறிந்து கொள்ளுங்கள் !


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 6, 2022

எங்களுடைய இதயத்தில் உங்கள் மீதான பக்தியும் சிந்தனையும் நிலைக்கும்படி செய்யுங்கள் பாபா !சங்கற்பங்களும், விகற்பங்களும் எங்கள் மனத்திலிருந்து அழிந்துபோகுமாறு செய்யுங்கள் பாபா !  உடல், உற்றார், உறவினர், சொத்து, சுகம் இவை அனைத்தையும் நாங்கள் அறவே மறந்து போகும்படி செய்துவிடுங்கள் பாபா !  எங்களுடைய இதயத்தில் உங்களுடைய பக்தியும் சிந்தனையும் மட்டுமே நிலைக்கும்படி செய்துவிடுங்கள் பாபா !

-  ஹேமாட்பந்த்
ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 5, 2022

குருவின் பாத ஸ்பரிசத்தால் பிரம்மாவால் எழுதப்பட்ட தலையெழுத்தும் மாறிவிடும் !இங்கு கூடியிருக்கும் மனிதர்களே !  இங்கு நம் எதிரில் இருக்கும் ஸ்ரீகுருமூர்த்தி பரப்பிரம்ம ரூபமே தவிர வேறு யாருமில்லை !.  இவரின் தரிசனத்தால் நம் பாவங்கள் எல்லாம் காட்டுத்தீயில் எரிந்து சாம்பலாகும் இலைகளைப் போல் எரிந்துவிடும்.  இவர் பாத ஸ்பரிசத்தால் பிரம்மாவால் எழுதப்பட்ட தலையெழுத்தெல்லாம் மாறிவிடும்.  பொக்கிஷம் போல் இவர் நமக்கு கிடைத்திருக்கிறார்.  இந்த ஸ்ரீகுருவை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள்! 

- ஸ்ரீகுரு சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 4, 2022

சத்சரித்திரம் எனும் கதை அமிர்தத்தை தினமும் பருகுங்கள் !பாபாவின் பாத தீர்த்தமாகிய சத்சரித்திரம் எனும் கதை அமிர்தத்தை நம்முடைய நித்தியமங்களம் கருதி தினமும் பருகினால் நம் உடலும் உள்ளமும் தூய்மையாகும் !


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 3, 2022

பாபாவின் பாதங்களை விட்டுவிட்டு கங்கை-யமுனை-கோதாவரி நதிகளைத்தேடி புண்ணிய பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை !ஓம் பதவிருஷ்டகங்காம்பஸே நம;

தமது பாதங்களிலிருந்து கங்கை யமுனை நீரை வரவழைத்தவருக்கு நமஸ்காரம் !

தாஸ்கணு மகராஜ் சீரடியில் இருந்த சமயம்,  ஒரு புண்ணிய தினத்தன்று, அதாவது  ஆடிப்பெருக்கைப் போன்ற ஒரு புண்ணிய நாளில், கங்கை நதிக்கு சென்று நீராட (கங்கா ஸ்நானம் )  வேண்டும் என்று விரும்பினார்.

அதற்கு பாபா,  "ஏன் அங்கே போக வேண்டும் ? கங்கை இங்கேயே இல்லையா? என் பாதங்களிலேயே இல்லையா ?"  என கேட்டார்.

இந்த கேள்விக்கு தாஸ்கணு மஹாராஜ் சமாதானமாகவில்லை.

தாஸ்கணுவின் நம்பிக்கையில்லா  மனோபாவத்தை அறிந்த பாபா தமது பாதத்தருகில் வந்து உள்ளங்கையை நீட்டச் சொன்னார்.

தாஸ்கணுவும் கைகளை நீட்டிக் கொண்டே அந்த அனுபவத்தை இவ்வாறு சொல்கிறார்...

"அப்போது பாபாவின் இரு பாதங்களில் இருந்தும் நீர் பெருகிற்று. அது வியர்வைத் துளிகள் போன்று சில சொட்டுக்கள் அல்லாமல், மெல்லியதாக நீரூற்றே வந்தது. சில நிமிடங்களில் என் கை நிறைய நீரை சேகரித்துக் கொண்டேன். இதோ கங்கை ! இதோ யமுனை ! என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! அந்த நீரை என் தலைமீது தெளித்துக் கொண்டேன் !" என தாஸ்கணு மகராஜ் அனுபவங்களில் கூறியுள்ளார்.

கங்கை, யமுனை மட்டுமல்ல, அனைத்து புண்ணிய நதிகளும், புண்ணிய தீர்த்தங்களும் பாபாவின் பாதங்களிலே உள்ளன. பாபாவின் பாத தரிசனம் ஒன்றே நம் அனைத்து பாவகர்மங்களையும் கழுவித் தள்ளும் கங்காஸ்நானம் ஆகும்.

ஜனங்கள் தங்களுடைய அகோரமான பாவங்களைக் கழுவித் தள்ளுவதற்காக கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள்.   ஆனால்,  கங்கையோ தன்னுடைய பாவத்தைத் துடைத்துக்கொள்ள ஸாயீபாபாவைப் போன்ற முனிவர்களின் பாதங்களை அடைக்கலம் தேடி சரணடைகிறாள். 

நமது பாவங்களைக் கழுவித் தள்ள, ஸாயீயின் பாதங்களை விட்டுவிட்டு கங்கைக்கும் கோதாவரிக்கும் புனிதப் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை ! பாபாவின் ஸ்தோத்திரத்தை கேட்டால் போதும்.  சுவாரசியமான ஸாயீயின் கதைகளை பக்தியுடன் பாராயணம் செய்தாலே  போதுமானது.

-பூஜ்யஸ்ரீ நரசிம்மசுவாமிஜி

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 2, 2022

பாபாவின் வார்த்தைகளை சந்தேகிப்பவர்களும், நம்பாதவர்களும், அலட்சியப்படுத்துபவர்களும் துர்பாக்கியசாலிகள் !பாபாவின் ஆணையை ஒருகணமும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும்.  அவருடைய வார்த்தைகளை சந்தேகிப்பவரும், அதன்படி நடக்காமல் இழுத்தடிப்பவரும் ஈனர்கள்; பார்க்கப்போனால், அவர்கள் வா­லில்லாத இருகால் மிருகங்கள்.  பாபாவின் ஆணையை நிறைவேற்ற முகூர்த்தம் பார்க்க வேண்டியதில்லை.  "சுபம்/அசுபம்",   "உடனே செய்தல்/தள்ளிப் போடுதல்" ,.  என்ற கேள்விகளுக்கெல்லாம் இங்கு இடமே இல்லை. பாபாவின் மொழிகளை நம்பி, அவருடைய ஆணையை உடனே நிறைவேற்றுபவன் சான்றோன்;  நம்பிக்கை இல்லாமல் நீளமாக நூல் இழுப்பவர்களும், அலட்சியப்படுத்தி தாமதிப்பவர்களும் துர்பாக்கியசா­லிகள்!

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 1, 2022

மனத்தின் மாய மயக்கங்களைத் துடைத்து தூய்மையாக்கிவிடும் பாபாவின் மீதான பக்தியும் வழிபாடும் !தூய்மையற்ற எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்தல், பொய்யை மெய்யென்று அறிதல், மெய்யைத் திரைபோட்டு மறைத்தல், இம்மூன்றும் மனம் செய்யும் தவறுகளாகும்.   பலனைக் கருதாது செய்யப்படும் சேவைகளும், செயல்களும், எதிர்மறைச் சிந்தனைகளையும் நாட்டங்களையும் விலக்கிவிடும்.  பாபாவின் மீதான தூயபக்தியும், ஆத்மார்த்தமான வழிபாடும் மனத்தின் மாய மயக்கங்களைத் துடைத்துத் தூய்மையாக்கிவிடும்.

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...